மறைந்த எலிசபெத் மகாராணிக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பூதவுலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பிரிட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் , பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேனவும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர் நியமனம்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று (17) நண்பகல் லண்டனை சென்றடைந்தார். லண்டன் சென்றடைந்த ஜனாதிபதியை பொதுநலவாய, மேம்பாட்டு அலுவலகத்தின் இந்து-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் மற்றும் இந்தியாவுக்கன பணிப்பாளர் பென் மெல்லர் (Ben Mellor), பிரித்தானிய இளவரசரின் விசேட பிரதிநி உப லெப்டினன்ட் டேவ் ஈஸ்டன் (Dave Easton) மற்றும் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன ஆகியோர் வரவேற்றனர். நாளை (19) லண்டனில் உள்ள … Read more

நச்சு பதார்த்தங்கள் கலந்த அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கை உண்மைக்குப் புறம்பானது

நச்சு பதார்த்தங்கள் கலந்த உணவு எமது நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ஒரு சில ஊடகங்கள் வாயிலாக செய்தி வெளியிடப்பட்டமை தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ள தன்மை மற்றும் உள்ளடக்கத்தைக் கருத்தில் கொள்ளும் போது தெரியவருவதாவது, அச்செய்தியை அடிப்படையாகக் கொண்டு மக்களைத் திசை திருப்புவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த செய்தி அறிக்கையின் செய்திப் பெறுமதிகொண்ட பகுதியாக அமைவது, ‘எமது நாட்டு மக்களின் பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் உலோக … Read more

தேசிய மரநடுகை தினத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வு

சமுர்த்தி திணைக்களத்தினால் “சமுர்த்தி பசுமை நிற தாயக அறுவடை” எனும் தொனிப்பொருளில் தேசிய மரநடுகை தின சுற்றாடல் வேலைத்திட்ட மர நடுகை வாரம் இன்று 17.09.2022 திகதி தொடக்கம் 23.09.2022 திகதி வரை பிரகடனப்படுத்தி மரம் நடுகை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான மரநடுகை நிகழ்வு வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் காயங்கேணி கிராமத்தில் இடம் பெற்றுள்ளது. வாகரை பிரதேச செயலாளர் ஜி.அருணன் தலைமையில் காயங்கேணி மீனவர் சங்க கட்டட வளாகத்தில் இடம் பெற்ற நிகழ்வில் … Read more

உலக சுகாதார அமைப்பின் அறிவித்தல்

கொரோனா  தொற்றினால், மருந்துப் பாவனை மற்றும் அது தொடர்பான கவனயீர்ப்பு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஏனெனில், அதிகமான நோயாளிகள் தாம் பெற்றுக்கொள்ளும் மருந்து பற்றிய எந்தத் தெளிவுமின்றி இருப்பதாகும். அளவுக்கதிமான மற்றும் அபரிதமான அவதானத்துடனான மருந்துப்பாவனை தான் 50வீதமான உலகில் சுகாதார சேவையுடன் தொடர்புபட்ட பாதிப்புக்களை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது. உலகில் மருந்துகளால்;; ஏற்படும் பாதிப்புகளுக்கு வருடாந்தம் சுமார் 42 பில்லியன் டொலர் செலவாகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு, 2022 செப்டம்பர் 17ஆம் திகதியை உலக நோயாளர் … Read more

இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை

நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 7000 ஐ விட அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரையில் இலங்கையில் 5600 காட்டு யானைகளே இருப்பதாக அறியப்பட்டது. ஆனால் இறுதியாக மேற்கொண்ட கணக்கெடுப்பின் பிரகாரம் யானைகளின் எண்ணிக்கை  7000 ஐ விட அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்னேரிய, கிரிதலை மற்றும் பராக்கிரம சமுத்திரத்தை அண்மித்த பகுதிகளில் சுமார் 350 காட்டு யானைகள் காணாமல் போயுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவரினால் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் வினவியமை தொடர்பாக, வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் … Read more

விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக இரண்டு ஞாயிறு நாளிதழ்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது

விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக ஞாயிறு மௌபிம மற்றும் ஞாயிறு அருண நாளிதழ்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது எனவும் ,கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை பூச்சிக்கொல்லி பதிவேட்டு அலுவலகத்தினால் அவ்வாறான ஆய்வு முடிவுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும் பூச்சிக்கொல்லி பதிவு அலுவலகத்தின் பதில் பதிவாளர் லசந்த ரத்னவீர சுட்டிக்காட்டியுள்ளார். 2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வொன்றை மையப்படுத்தி, குறித்த செய்தித்தாள்கள் செய்திகளை எழுதியுள்ளன. எனினும், இந்தச் செய்திகளின் உள்ளடக்கங்களில் குறைபாடுகள் … Read more

இலங்கை கிரிக்கெட் அணியைப் போல் சிந்தித்தால் உலகின் முன் நாட்டை வெற்றி பெற வைப்பதும் கடினமான காரியம் அல்ல – ஜனாதிபதி

கிரிக்கட் வீரர் தசுன் ஷானக்க மற்றும் அவரது அணியினர் ஆசிய கிண்ணம் வரை முன்னேறுவதற்கு தாம் அடைந்த தோல்வியை ஒரு பலமான சக்தியாக பயன்படுத்திக் கொண்டனர். இலங்கை கிரிக்கெட் அணியைப் போல் சிந்தித்தால் உலகின் முன் நாட்டை வெற்றி பெற வைப்பதும் கடினமான காரியம் அல்ல என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்தார். குழுவாக இணைந்து செயற்பட்டமை அவர்களின் வெற்றிக்கு உதவியதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். ரி20 கிரிக்கட் ஆசியக் கிண்ணம், 12வது வலைப்பந்து ஆசியக் கிண்ணம் மற்றும் … Read more