மட்டக்களப்பு வாவியில் மக்களை அச்சுறுத்திய இராட்சத முதலை

  மட்டக்களப்பு வாவியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட வந்தவர்களுக்கு பெரும் உயிர் அச்சுறுத்தலாக இருந்த முதலை வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் பிடிக்கப்பட்டு குமண காட்டுப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.முதலைகளைப் பிடிக்குமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்ததற்கு இணங்க, வியாழக்கிழமை (15) இரவு குறித்த ஆற்றுப் பகுதிக்கு வந்த வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் Copau;fs; முதலையைப் பிடிப்பதற்கு இரும்புக் கூடு வைத்தனர். இந்நிலையில் வைத்த கூட்டுக்குள் அகப்பட்ட குறித்த முதலையை வெள்ளிக்கிழமை (16) ஆற்றுக்குள்ளிருந்து வெளியில் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு பிடிக்கப்பட்ட … Read more

வெளிநாட்டு தூதுவர்கள் இருவர் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்தனர்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இரண்டு வெளிநாட்டு தூதுவர்கள் நேற்று  (16) ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர். இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவராக பொனி ஓர்பாக் (Bonnie Horbach) மற்றும் இலங்கைக்கான சவூதி தூதுவராக காலித்ஹமூட் நஸார் அல்தஸான் அல்கஹ்தானி (Kahalid Hamoud Nasser Aldasan Alkahtani ) ஆகியோர் புதிதாக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு16.09.2022  

சர்வதேச வர்த்தகத்தை கையாளும் விசேட அலுவலகத்தை நிறுவ இருப்பதாக ஜனாதிபதி  தெரிவிப்பு

சர்வதேச வர்த்தகத்தை கையாளும் சர்வதேச வர்த்தக அலுவலகத்தை நிறுவ இருப்பதாக ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை   ஏற்படுத்தும் ஒப்பந்தங்களுக்கான பணிகளைத் துரிதமாக முன்னெடுப்பதற்கு பணித்துள்ளதாகவும்   ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும்  ஒன்றிணைந்து செயற்படுவதற்கு மேலும் பல வாய்ப்புகள் உள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இந்திய சமூகம் (SLIS) கொழும்பு தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் நேற்று முன்தினம் (15) மாலை நடத்திய … Read more

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 05 இலட்சம் டொலர் நன்கொடை

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 500,000 டொலர்கள் (சுமார் 180 மில்லியன் ரூபா) காசோலையை நேற்று (16) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளித்தது. ஆசிய கிரிக்கட் கிண்ணம், ஆசிய வலைப்பந்து கிண்ணம் மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களை கௌரவிக்கும் முகமாக கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் நேற்று (16) நடைபெற்ற நிகழ்வில் இந்த நன்கொடை வழங்கப்பட்டது. கடந்த காலங்களில் … Read more

புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

இலங்கைக;கான புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட அதிமேதகு போல் ஸ்டீபன்ஸ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தம் சந்தித்தார். கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இந்த சந்திப்பு நேற்று (செப். 16) இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரை பாதுகாப்பு செயலாளர் வரவேற்றார். அவுஸ்திரேலிய உள்துறை மற்றும் சைபர் பாதுகாப்பு அமைச்சர் கிளேர் ஓ நீல் அன்மையில் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த வெற்றிகரமான விஜயத்திற்கு பங்களித்தமைக்காக … Read more

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இதன்காரணமாக, எதிரவரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை நிலையம் இன்று (17) அறிவித்துள்ளது. இதேவேளை மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என … Read more

மகாராணியின் இறுதிச் சடங்கு – வரலாற்றில் இடம்பிடிக்கும் ஜனாதிபதி ரணில்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் அரச தலைவர்கள் மத்தியில் பிரித்தானிய வரலாற்றுப் புத்தகத்தில் இணைவதற்கான அரிய வாய்ப்பு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடைக்கவுள்ளது. எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் கலந்துகொண்ட தம்பதிகளின் மகனான ரணில் விக்ரமசிங்க, எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரித்தானிய வரலாற்றுப் புத்தகத்தில் இணையவுள்ளார். நெதர்லாந்தின் முன்னாள் ராணி இளவரசி பீட்ரிக்ஸ், இதேபோன்ற வரலாற்றைக் கொண்ட அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெற்றோர்களான … Read more

சதொச வலைப்பின்னலின் 445வது கிளை நெலும்தெனியவில் திறப்பு

மக்களுக்குத் தேவையான உயர்தர சேவையை வழங்கும் நோக்கில் கேகாலை மாவட்டத்தின் நெலும்தெனிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட சதொச நுகர்வோர் விற்பனை நிலையம் இன்று (16) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கிராமிய பொருளாதாரத்திற்கான இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தானால் திறந்து வைக்கப்பட்டது. இந்த சதொச விற்பனை நிலையம் கேகாலை மாவட்டத்தில் 18 வது கிளையாகவும், இலங்கையில் 445 வது கிளையாகவும் உள்ளது.   இந்நிகழ்வில் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான திருமதி ராஜிகா … Read more