திருட்டு முயற்சியில் ஈடுபட்ட 13 வயது சிறுவன்

பண்டாரகம, நாமலுவ பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் பணத்தை திருட முற்பட்ட 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கடை உரிமையாளர் அவரைத் தடுக்க முயற்சி செய்த போது சிறுவன் கடை உரிமையாளரை கத்தியால் தாக்கி, கடையில் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், மறைந்திருந்த நிலையில் பொலிஸார், அவரை கைது செய்துள்ளனர் . 33 வயதான கடை உரிமையாளரின் வயிறு மற்றும் வலது கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சந்தேகத்திற்கிடமான … Read more

75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி

2022 ஓகஸ்ட்23ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022ஓகஸ்ட்22ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் மேல், சப்ரகமுவமற்றும்வடமேல்மாகாணங்களிலும்குருநாகல், கண்டி, நுவரெலியா,காலிமற்றும் மாத்தறைமாவட்டங்களிலும் அவ்வப்போதுமழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும் சிலஇடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவுபலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவாமாகாணத்திலும் அம்பாறை மற்றும்மட்டக்களப்புமாவட்டங்களிலும் சிலஇடங்களில்மாலையில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மத்தியமலை நாட்டின்மேற்கு சரிவுப்பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் … Read more

ரஜித் கீர்த்தி தென்னகோன் ஜனாதிபதி அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகமாக (சமூக விவகாரங்கள்) நியமனம்!

தென் மற்றும் மத்திய மாகாணங்களின் முன்னாள் ஆளுநரான ரஜித் கீர்த்தி தென்னகோன், ஜனாதிபதி அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகமாக (சமூக விவகாரங்கள்) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சிவில் அமைப்புகள், மனித உரிமைகள், தேர்தல் கண்காணிப்பு உள்ளிட்ட பல துறைகளில் பணியாற்றிய தொழில் வல்லுநர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக விவகாரங்கள்,பொருளாதார மறுமலர்ச்சி என்பன தொடர்பில் உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் இவருக்கு அனுபவம் உள்ளது. கீர்த்தி தென்னகோன் வெகுஜன தொடர்பு முதுகலைப் பட்டதாரியாவார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 22.08.2022

மீன்பிடி , பெருந்தோட்டத் துறைகளில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மண்ணெண்ணெய்க்கு மானியம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் மண்ணெண்ணெய்யை நம்பியுள்ள மீன்பிடி மற்றும் தோட்டத் துறை மக்ககளுக்கு நேரடி பண மானியம் வழங்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (21) மண்ணெண்ணெய் விலையை அதிகரித்ததன் பின்னர் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இன்று (22) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை ரூ. 340 ஆக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல வருடங்களாக … Read more

2022ஆம் ஆண்டின் முதல் 25 கனேடிய குடியேற்றவாசிகளில் இரண்டு இலங்கை வம்சாவளி கனேடியர்கள்

கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரத்ன அவர்கள் 2022 ஆகஸ்ட் 11ஆந் திகதி ரொறன்ரோவில் நடைபெற்ற கனேடியன் இமிக்ரண்ட் சஞ்சிகையின் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டதுடன், அங்கு இரண்டு இலங்கை வம்சாவளிக் கனேடியர்களான பேராசிரியர் ஜனக ருவன்புர மற்றும் வைத்தியர் சிவகுமார் குலசிங்கம் ஆகியோர் 2022ஆம் ஆண்டின் முதல் 25 கனேடிய குடியேற்றவாசிகளில் இடம்பெற்றிருந்தனர். வருடாந்த விருதுகள் திட்டம் கனேடிய குடியேற்றவாசிகளை ஊக்குவிக்கும் சாதனைகளைக் கொண்டாடுகின்றது. பேராசிரியர் ருவன்புர கட்டுமானப் பொறியியலில் ஒரு அறிஞர் … Read more

தேசிய ஊடக ஒளிபரப்புக்கு இடையூறு விளைவித்த இரண்டாவது சந்தேக நபரும் கைது

தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் நுழைந்து, அதன் ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான இரண்டாவது சந்தேகநபரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்துக்கு வந்து சந்தேகநபர் சரணடைந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். சமூக செயற்பாட்டாளரான சமிந்த கெலும்பிரிய அமரசிங்க (45) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய ஊடகம் இதேவேளை, கடந்த ஜூலை 13 ஆம் திகதி ரூபவாஹினி கலையகத்துக்குள் நுழைந்து, ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் … Read more

அவசரகால மருந்து , மருத்துவப் பொருட்களை இலங்கை அரசாங்கத்திற்கு துருக்கி நன்கொடை

துருக்கிய அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அவசரகால மருந்துகள் மற்றும் இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அவசரமாகத் தேவைப்படும் ஏனைய மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது. ஃபில்காஸ்ட்ரின் ஊசி அடங்கிய முதல் தொகுதி சரக்கு விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு 2022 ஆகஸ்ட் 14ஆந் திகதி இலங்கையின் சுகாதார அமைச்சின் அதிகாரிகளால் பெற்றுக் கொள்ளப்பட்டது. 2022 ஆகஸ்ட் 17ஆந் திகதி துருக்கியின் வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் கவுசோக்லு மற்றும் துருக்கி – இலங்கை நாடாளுமன்ற நட்புக் … Read more

பதுக்கி வைக்கப்படும் முட்டைகளை அரசுடமையாக்க நடவடிக்கை

நிர்ணய விலைக்கு மேலதிகமாக முட்டை விற்பனை செய்தல் மற்றும் சட்டவிரோதமாக முட்டையை களஞ்சியப்படுத்துவோரை கண்டறிவதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று முதல் ஆரமப்மாகிறது. வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகும். பழுப்பு அல்லது சிவப்பு நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபா என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.  சந்தையில் முட்டை விலை அதிகரித்துள்ள நிலையில் பதுக்கி வைக்கப்பட்டும் முட்டையை அரசுடமையாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் நளின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவின் தனிப்பட்ட முடிவுகளே நாட்டின் நெருக்கடிக்கு காரணம்:காலம் கடந்த பீரிஸின் உபதேசம்-செய்திகளின் தொகுப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட முடிவுகளை எடுத்ததாலேயே நாட்டில் பெரும் நெருக்கடி ஏற்பட்டதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட முடிவுகளை எடுத்தார். குழுவாக முடிவு எடுக்கப்படவில்லை.அதில் உர விவகாரம் ஒன்று, விடயம் தெரிந்தவர்களிடம் ஆலோசனை கேட்கவில்லை. இவ்வாறான அவரின் முடிவுகள் நாட்டுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. சர்வதேச நாணய நிதியம் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லாதது இதேபோன்ற பிரச்சினையாகும். இத்தகைய … Read more

கொழும்பிற்கும்  யாழ்ப்பாணத்திற்கும் இடையில் ரயில் மூலம் குறுகிய நேரத்திற்குள் பயணிக்க நடவடிக்கை

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயில் மூலம் குறுகிய நேரத்திற்குள் ,பயணிக்கக்கூடியவகையில் ரயில் சேவையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக போக்குவரத்து , நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான  பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாண மக்களுக்கும், யாழ்ப்பாணத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதி கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருதவதாக தெரித்த அமைச்சர் ,வடக்கு ரயில் பாதையில், மஹவ முதல் வவுனியா வரையிலான பகுதி குறுகிய காலத்தில் முழுமையாக நவீனமயப்படுத்தப்படும் என்றும் கூறினார்.   தற்போது கொழும்பில் இருந்து … Read more