மின் கட்டண அதிகரிப்பு: பாராளுமன்றதில் விவாதிக்கப்படும் சபாநாயகர் அறிவிப்பு

அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்துவதற்கு சபை அனுமதி வழங்க வேண்டும் என்று லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் நேற்று (10) ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி  உரையாற்றினார் இதற்கு பதிலளித்த போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ,மின் கட்டண அதிகரிப்பு குறித்து பாராளுமன்றதில் விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர , “மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது ஆனால் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதுதொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கும் … Read more

மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாத நாட்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாத நாட்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  அதன்படி இன்றைய தினமும், எதிர்வரும் 14ஆம் திகதியும் மின்துண்டிக்கப்பட மாட்டாது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மணிநேர மின்துண்டிப்பு இதேவேளை நாளையும், நாளை மறு தினமும் ஒரு மணிநேரம் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.  இதன்படி A முதல் L மற்றும் P முதல் W வலயங்களில் மாலை 6 மணி … Read more

இத்தாலியில் ,குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி

இத்தாலியில் குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி பணி பணி ஆரம்பமாகியுள்ளது. உலகமெங்கும் குரங்கு அம்மை நோய் பரவி வருகின்றமையினால் உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது. இதனால் சில நாடுகள் இந்த தொற்று நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்தியுள்ளன. இதற்கமைய குரங்கு அம்மைக்கு எதிராக இத்தாலியில் தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் (8) ஆரம்பமாகியுள்ளது. இந்த தடுப்பூசி பெரியம்மை நோய் தடுப்புக்காக உருவாக்கப்பட்ட 2 டோஸ் கொண்ட ஜின்னியோஸ் … Read more

தங்கப் பதக்கங்களை வென்று மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய மாணவன்

தேசிய கராத்தே சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 12வது தேசிய கராத்தே போட்டிகளில் பங்கு பற்றிய வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய மாணவன் அரபாத் மொஹமட் அதீப் 8வது பிரிவில் 2 தங்கப்பதக்கங்களை வென்று மட்டக்களப்பிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தின் போசகரும் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரருமான யாசீர் அரபாத் மற்றும் பாத்திமா ஆகியோரின் புதல்வருமாவார்.

நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 ஆகஸ்ட் 09ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். பல தசாப்தங்களாக நிலவி வரும் நட்பு ரீதியான நல்லுறவுகளைக் குறிப்பிட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், சவாலான காலங்களில் நியூசிலாந்து நல்கிய தொடர்ச்சியான ஆதரவு மற்றும் உதவிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்தார். இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் நிலைமையை ஸ்திரப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் … Read more

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் சந்திப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாசர் அல்-அமெரி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை இன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் இலங்கைப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை அதிகரிப்பதற்காக அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தூதுவருக்கு விளக்கமளித்தார். விவசாயம், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் இலங்கையுடன் பரந்த ஒத்துழைப்பில் ஈடுபடுமாறு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வெளிநாட்டு அலுவல்கள் … Read more

கோட்டாபயவின் அடுத்த பயணம் ஆரம்பம்! செல்லவுள்ள நாடு தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் தாய்லாந்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் நடைபெற்ற பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ச தற்காலிகமாக தங்கியிருக்க தாய்லாந்து செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏழு தசாப்தங்களுக்கு பின்னர் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி இலங்கையில் ஏழு தசாப்தங்களுக்கு பின்னர் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டாபய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச  குடும்பத்தினருக்கு எதிராக கடும் போராட்டங்கள் வெடித்ததுடன் … Read more