யாழ் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாலையில் குழப்ப நிலை

யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரவு நேரங்களில் குழப்பங்கள், விரும்பத்தகாத செயல்கள் இடம்பெறுவதினால் மாலை வேளையுடன் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக யாழ் மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்
இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த வாரம் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டேன்

அதன் போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாலை வேளைகளில் மது போதையில் கூடுபவர்கள் கறுப்பு சந்தை வியாபாரிகள், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பங்களை ஏற்படுத்துவதுடன், விரும்பத்தகாத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் மாலை வேளையுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடுவதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி பிரதேச செயலாளர் ஆகியோரின் முடிவின் பிரகாரம் மாலையுடன் மூடுவதா இல்லையா என முடிவெடுக்கப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Logini Sakayaraja/J.News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.