மோசமான பக்கங்களை களைந்து நல்ல நோக்கங்களுக்காக மீண்டும் ஒன்றுதிரள்வோம் – ஜனாதிபதி  

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் உண்மையான அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு, அதன் மோசமான பக்கங்களைக் களைந்து, நல்ல இலக்குகளுடன் மீண்டும் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார். சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான ஆலோசனை தொடர்பில் தென்னிலங்கை பிரதம சங்கநாயக வண. கலாநிதி ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட மக்கள் பேரவையுடன் நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசியல் சட்டத்திற்கு விரோதமான, குண்டர் பயங்கரவாத செயல்களை நாங்கள் … Read more

சர்வகட்சி ஆட்சிக்கான முன்மொழிவுகள் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் திங்கட்கிழமைக்குள் அறிவிக்கப்படும் ஜனாதிபதி தெரிவிப்பு

சர்வகட்சி அரசாங்கத்துக்காக அரசியல் கட்சிகளுடன் பல நாட்களாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஒவ்வொரு கட்சியும் முன்வைத்த முன்மொழிவுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (08) பங்குபற்றிய அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவாக வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் உள்ள 11 சுயேட்சைக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் 43ஆவது (சேனாங்கய) பிரிவினருடன் நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மக்கள் … Read more

ஜனாதிபதிக்கு ஜப்பான் பிரதமரின் வாழ்த்து  

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு ஜப்பானிய பிரதமர் பூமியோ கிசிடா Fumio Kishida தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அவர்களுக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை விடுத்துள்ள ஜப்பானிய பிரதமர், ஜப்பானிய மக்களினதும் அரசாங்கத்தினதும் வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்காக நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமைத்துவத்தின் மீது … Read more

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக இந்திய சுகாதாரத்துறை செயலாளர் தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளருக்கு இந்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் புஷன் எழுதியுள்ள கடிதத்தில் சுடடிக்காட்டியுள்ளார். தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது குறைந்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், மாநில அரசு உரிய நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு செயலாளர் … Read more

46 சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிக்கொண்டு ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை கப்பல் கொழும்பு வந்தடைந்தது

அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட 46 இலங்கையர்கள் (ஆகஸ்ட் 05) முதல் முறையாக அவுஸ்திரேலிய எல்லைப் படை (ABF) கப்பலில் ஒன்றில் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தனர். சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முற்பட்ட போது இந்த சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் ஆஸ்திரேலிய எல்லை படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய எல்லை படையின் ரோந்துக் கப்பலான ‘ஓஷன் ஷீல்ட்’ ல்அழைத்தகுவரப்பட்ட இவர்கள் கொழும்பு துறைமுகத்தில் வைத்து, கோவிட் சுகாதார நடைமுறைகள் மற்றும் அடிப்படை மருத்துவ பரிசோதனைக்களுக்கு உட்படுத்தப்பட்ட … Read more

வடமாகாண ஆளுநர் இராணுவத் தளபதியுடன் கருத்துரையாடல்

கௌரவ வடமாகாண ஆளுநர் திரு ஜீவன் தியாகராஜா அவர்கள் (5)  இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்து நாட்டின் வளர்ச்சிக்கு வடமாகாண இராணுவத்தின் பங்களிப்பு குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டார். இச் சந்திப்பில், சிவில்-இராணுவ ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கும் தற்போதைய பொருளாதாரச் சிக்கல்களுக்கு முகங்கொடுத்து பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கும் இருவரும் ஒப்புக்கொண்டனர். இச் சந்திப்பின் நிறைவில் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வடமாகாண ஆளுநருக்கு … Read more

சர்வகட்சி அரசாங்கத்திற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்துக்கு மகா சங்கத்தினர்  ஆசிர்வாதம் வழங்கினர்

சர்வகட்சி அரசாங்கத்திற்கான ஜனாதிபதி அவர்களின்  வேலைத்திட்டத்திற்கு தாங்கள் பூரண ஆசிர்வாதம் வழங்குவதாக மகா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நேற்று (05) பிற்பகல் நாராஹேன்பிட்டி, எல்விட்டிகல மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா ராமன்ய மகா நிகாயவின் மகா சங்கத் தலைமையகத்திற்குச் சென்று மகாநாயக்க வண. மகுலேவே விமல தேரர் அவர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். அங்கு வருகை தந்திருந்த மகா சங்கத்தினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு ஆசிர்வாதம் அளித்து மேற்கண்டவாறு தெரிவித்தனர். சர்வகட்சி அரசாங்கத்திற்கான … Read more

இலங்கையின் அடக்குமுறைகளுக்கு எதிராக சர்வதேச மனிதை உரிமை அமைப்புக்களின் ஒன்றிணைந்த கண்டனம்!

சர்வதேச சட்டத்தின் கீழ் இலங்கை கடமைகளை மீறுவதுடன் மனித உரிமைகளை மதிக்கத் தவறுவது குடியியல் அரசியல் பொருளாதார சமூக மற்றும் கலாசார உரிமைகளை பாதிக்கலாம். அத்துடன் நெருக்கடியின் போது சர்வதேச ஆதரவையும் அது பாதிக்கலாம் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன. இது குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தமது கண்டனத்தை கூட்டறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளன. சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டுக்கான ஆசிய மன்றம், மனித உரிமைகளுக்கான சர்வதேச … Read more