தாய்ப்பால் : குழந்தைக்கும் தாய்க்கும் இடையிலான பிணைப்பு அதிகரிக்கும் – குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர்

ஒரு குழந்தையின் ஊட்டச்சத்தான தாய்ப்பாலின் ஊடாக குழந்தைக்கும் தாய்க்கும் இடையில் ஒரு அன்பான பிணைப்புக்கு ஏற்படுவதாக குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். நெருங்கிய உறவினர்கள், குடும்ப சுகாதாரப் பணியாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை உள்ளடக்கிய தனிப்பட்ட மற்றும் சமூக செல்வாக்கு குழுக்கள் ஆகியோர் தாய்ப்பால் வழங்குவதை ஊக்கப்படுத்துவதில் முக்கியம் வகிக்கின்றனர். ஒரு குழந்தை சரியான வயதை அடையும் வரை தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்க இவர்கள் … Read more

வீட்டுக்குள் நுழைந்த ஆண் புலி! மயக்க மருந்து செலுத்தி உயிருடன் மீட்பு (VIDEO)

தலவாக்கலை, லோகி தோட்டம் கூம்வூட் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த ஆண் புலியை கடும் போராட்டத்துக்கு மத்தியில் உயிருடன் பிடிக்கப்பட்டு, நுவரெலியா மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்ட லோகி தோட்டம் கூம்வூட் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் நேற்று (4) இரவு 11 மணியளவில் இலங்கைக்கு உரித்தான புலி ஒன்று வீடொன்றுக்குள் புகுந்துள்ளது. நாய் ஒன்றை துரத்தி வந்த குறித்த புலி வீட்டின் கூரை மீது ஏறியபோது, கூரை உடைந்ததால், வீட்டுக்குள் விழுந்துள்ளது. இதன்போது வீட்டிலுள்ளவர்கள் பயந்து … Read more

முன்மொழியப்பட்டுள்ள அரசாங்கத்தை சர்வகட்சி அரசாங்கம் என்று பெயரிட உடன்படவில்லை என்றால், சர்வகட்சி ஆட்சி என்று பெயரிடுங்கள். பிரதான எதிர்க்கட்சிக்கு ஜனாதிபதி முன்மொழிவு

எதிர்காலத்தில் ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தை சர்வகட்சி அரசாங்கம் என்று பெயரிடுவதற்கு உடன்படவில்லை என்றால், சர்வகட்சி ஆட்சி என்று பெயரிட தான் முன்மொழிவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் (சமகி ஜன சந்தானய) இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க … Read more

கதிர்காமம் எசல பெரஹெரவிற்கு வடகிழக்கில் இருந்து பாதயாத்திரையாக வருகை தரும் பக்தர்களுக்கு முதன்முறையாக ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் வசதிகள் 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைய, கதிர்காமம் எசல பெரஹெரவிற்கு வடகிழக்கில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு, நீர் விநியோகம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 2.04 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதயாத்திரையாக வரும் யாத்திரிகர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து மொனராகலை மாவட்டச் செயலாளர் திரு.குணதாச சமரசிங்க, ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்த பின்னர், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,  அதற்கான வசதிகள் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக வழங்கப்படுகின்றன. … Read more

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு நான்காம் கட்ட தடுப்பூசி

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பு நான்காம் கட்ட பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனை, மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகம் ஆகியவற்றின் உத்தியோகத்தர்களுக்கு, பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று (05) திகதி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் ஆரம்பித்துள்ள நிலையில் நான்காம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டும் என்ற அரசின் அறிவுறுத்தலுக்கமைய முதற்கட்டமாக … Read more

காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தலைமையில் பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலைய கல்விப்பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மெளலானா பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ், நகர சபை தவிசாளர் எஸ் எச்.எம். அஸ்பர், தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் யூ.எல். ஜாபிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவத் தலைவர்களுக்கான சின்னங்களை … Read more

நாம் பழைய பொருளாதார மாதிரியை இனியும் பயன்படுத்த முடியாது, உலகளாவிய மாற்றங்கள் தொடர்பில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் – ஜனாதிபதி  

நாம் பழைய பொருளாதார மாதிரியைப் இனியும் பயன்படுத்த முடியாது, புத்தாக்கமாகச் சிந்தித்து உலகளாவிய மாற்றங்கள் தொடர்பில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (05) முற்பகல் நடைபெற்ற இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கைகள் வெளியீட்டு விழா மற்றும்  புத்திஜீவிகள் ஒன்றுகூடல் சொற்பொழிவு நிகழ்வில் அதிதி உரை ஆற்றிய போதே ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். “ LET’S … Read more

மட்டக்களப்பில் பெண்களுக்கு தனியான ஒழுங்கமைப்பில் எரிபொருள் விநியோகம்

மட்டக்களப்பில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பிரத்தியோக வரிசைகள் ஒழுங்கு செய்யப்பட்டு (04) திகதி எரிபொருள் வழங்கப்பட்டது. எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக பெண்கள் இரவு பகலாக வரிசையில் காத்திருந்து சிரமத்தை எதிர்நோக்கி எரிபொருளை பெற்றுக்கொள்ள நேர்ந்தமையினால், பெண்களுக்கென தனியான வரிசையில் மட்டக்களப்பு நகர் பகுதியில் பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.

இடைக்கால வரவு செலவுத் திட்டம்:முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் ஆராய்வு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் கடற்றொழில் அமைச்சின் சார்பாக முன்னுரிமை அடிப்படையில் உள்ளடக்கப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது. மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.