சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றி -பிரதமர்

சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புக் கிடைத்தாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கைக்கு கூடுதலாக உதவி வரும் இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் இணைந்து உதவி மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்யவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் பொருளாதார ரீதியான நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள நிலையில் அதில் இருந்து தப்புவதற்கு எந்தவொரு நாட்டினாலும் முடியவில்லை என்றும் பிரதமர் சட்டிக்காட்டினார் சர்வதேச நாணய நிதியத்துடன் பல்வேறு … Read more

ஜோர்ஜியாவின் திபிலிசியில் இலங்கையின் துணைத் தூதரக அலுவலகத்தை தூதுவர் திறந்து வைப்பு

ஜோர்ஜியாவின் திபிலிசிக்கான இலங்கையின் துணைத் தூதரக அலுவலகம் 2022 ஜூன் 20ஆந் திகதி திபிலிசியில் நடைபெற்ற வண்ணமயமான விழாவுடன் ஜோர்ஜியாவிற்கான அங்கீகாரம் பெற்ற இலங்கைத் தூதுவர் எம். ரிஸ்வி ஹாசன், ஜோர்ஜியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜோர்ஜியாவின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், இராஜதந்திரப் பிரதிநிதிகள், வர்த்தக மன்றங்கள், பயண மற்றும் வர்த்தக சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஜோர்ஜியாவில் வசிக்கும் மற்றும் கல்வி கற்கும் இலங்கையர்களின் பங்கேற்புடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது, நியமன ஆணையை திபிலிசியின் கௌரவ தூதுவர் … Read more

இலங்கையர்களின் ஆபத்தான பயணம்! புகையிரதங்களில் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம் (VIDEO)

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் நெருக்கடி காரணமாக புகையிரதத்தில் பெருமளவான மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.   கடும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பொதுப்போக்குவரத்து முற்றாக தடைப்பட்டு புகையிரத பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஏராளமானோர் புகையிரதத்தில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் , பெருமளவு மக்கள் கூட்டம் புகையிரதத்திற்கான பயணச்சீட்டை பெற்றுக் கொண்டவர்களிலும் பெருந்தொகையானோர்  புகையிரதத்தில் ஏறிக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இலங்கையில், வழக்கமான மக்கள் கூட்டத்தை விட சுமார் … Read more

அத்தியாவசிய பொதுச் சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் கட்டளை இன்று பாராளுமன்றத்தின் அனுமதிக்கு

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவுக்கமைய அதிமேதகு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் விடுக்கப்பட்ட கட்டளையுடன் தொடர்பான பிரகடனம் இன்று 06 ஆம் திகதி விவாதமின்றி பாராளுமன்றத்தின் அனுமதிக்காகச் சமர்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் 3.07.2022 ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் மின்சாரம் வழங்கல் தொடர்பான சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருட்கள் வழங்கல் அல்லது விநியோகம் மற்றும் வைத்தியசாலைகள், நேர்சிங் … Read more

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து படையினரை அகற்ற யோசனை – பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆயுதப் படையினரை, அக்கடமைகளில் இருந்து அகற்றுவது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பதிவான சம்பவங்களை மையப்படுத்தி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களும் முன் வைத்துள்ள கோரிக்கைக்கு அமைய இது குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து வருவதாக அறிய முடிகிறது. எவ்வாறாயினும், இது குறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் … Read more

இளைஞரை எட்டி உதைத்த இராணுவ அதிகாரி பணி நீக்கம்

குருநாகல், யக்கஹபிட்டிய பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் பணிப்புரையின் பேரில் இது தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை குறித்த அதிகாரி அனைத்துப் பணிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவதானித்து பரிந்துரைகளை வழங்குவதற்காக இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியின் தலைமையில் ஐவர் … Read more

முச்சக்கரவண்டியில் பயணிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை! பாரிய மோசடி அம்பலம்

நாட்டில் இப்போது  முச்சக்கர வண்டியில் பயணிக்கும் பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  முச்சக்கர வண்டி சாரதிகள் பலர்  பாரிய மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோசடியில் ஈடுபடும் சாரதிகள் முச்சக்கர வண்டி சாரதிகள் தன்னிச்சையாக கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் முச்சக்கரவண்டிகளை பயன்படுத்துவதிலிருந்து விலகியுள்ளதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார். சில முச்சக்கர வண்டி சாரதிகள் பயணிகளிடம் மோசடியாக பணத்தை பெற்றுக் கொள்வதாகவும் இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி … Read more

தொழில் தேடி வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு ஓர் அறிவிப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு வழங்குவதில் பரிசீலிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு திரும்பி வந்து வேலைக்காக மீண்டும் வெளிநாடு செல்லும் போது செய்யப்படும் பதிவு தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருத்தப்படும் சட்டம்  முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டிருந்த போது, சட்டரீதியான முறையில் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ள டொலர்களின் எண்ணிக்கை தொடர்பில் கண்டறியப்படவுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ … Read more

பொரளையில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழப்பு 

பொரளை டிக்கிள் வீதியில் எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் காத்திருந்த 60 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் உயிரிழந்தவர் IDH பகுதியில் வசிப்பவர் என  தெரியவந்துள்ளதுடன், நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் வரிசைகள் தொடர்பான சுமார் 11 இறப்புகள் தற்போது பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கர்ப்பிணித் தாய்மார் ,65 வயதுக்கு மேற்பட்டவர்களை இன்புளுவன்சா தொற்றிலிருந்து பாதுகாக்கவும்

அறுபத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்களும் கர்ப்பிணித் தாய்மார்களும் இன்புளுவன்சா வைரஸிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வது முக்கியம் என்று தொற்றுநோய்கள் தொடர்பான பிரதான வைத்திய நிபுணர் சமித கினகே கூறியுள்ளார். இவ்வாறானவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த வைரஸ் பொதுவாக ஒவ்வொரு வருடமும் பரவுவதனால் அதிகமானோர் இந்த தொற்றுக்கு உள்ளாகின்றனர். இது அதிகமாக வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களை பாதிக்கிறது என்று தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், … Read more