முச்சக்கரவண்டியில் பயணிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை! பாரிய மோசடி அம்பலம்

நாட்டில் இப்போது  முச்சக்கர வண்டியில் பயணிக்கும் பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  முச்சக்கர வண்டி சாரதிகள் பலர்  பாரிய மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோசடியில் ஈடுபடும் சாரதிகள் முச்சக்கர வண்டி சாரதிகள் தன்னிச்சையாக கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் முச்சக்கரவண்டிகளை பயன்படுத்துவதிலிருந்து விலகியுள்ளதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார். சில முச்சக்கர வண்டி சாரதிகள் பயணிகளிடம் மோசடியாக பணத்தை பெற்றுக் கொள்வதாகவும் இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி … Read more

முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் கடன்! வழங்கப்பட்டது அமைச்சரவை அனுமதி

கடன் தொகை தள்ளுபடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இதன்போது குறித்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல், பின்னர் ஏற்பட்ட கோவிட் – 19 பெருந்தொற்று நிலைமையால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மேலும் மோசமடைந்து வருவதுடன் பொதுவாக அனைத்து துறைகள் மீதும் நேரடியானதும் மறைமுகமானதுமான தாக்கங்களை ஏற்படுத்திய வண்ணமுள்ளது. முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் கடன்: தீர்மானத்தை … Read more

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு விஜயம்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், இன்று (05) முற்பகல் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்றார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை, சபாநாயகர் தினேஷ் குணவர்தன மற்றும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர். தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு முன்மொழியப்பட்ட தீர்வுகள் அடங்கிய வழிகாட்டல்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், ஜனாதிபதி  அவர்கள் அவையில் பிரவேசித்து உரையை செவிமடுத்தார்.   ஜனாதிபதி ஊடகப் பிரிவு 05.07.2022

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான செய்தி! விசேட கொடுப்பனவு தொடர்பிலும் தகவல்

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை மேற்கொள்வது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.  சம்பள அதிகரிப்பு அதன்படி எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் அரச ஊழியர்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பையும் மேற்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  இந்த விடயத்தை சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசேட கொடுப்பனவுகள் இதேவேளை விசேட கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படக் கூடாது என்ற நிபந்தனையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறித்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.  மேலும், இதற்கு முன் 30 இலட்சமாக இருந்த … Read more

கடந்த மூன்று வாரங்களில் சட்டவிரோதமாக நாட்டை விட்டு செல்ல முயற்சித்தவர்களின் எண்ணிக்கை 265 ஆக அதிகரிப்பு

கடற் படையினர் மற்றும் பொலிசார் இணைந்து சட்ட விரோதமாக நாட்டை விட்டு தப்பியோட முயற்சித்த மேலும் 75 பேரை கைது செய்துள்ளனர். அதன்படி, ஜூன் 15 முதல் மூன்றாம் திகதி வரை குறைந்தது 265 பேரை கைது செய்துள்ளனர்.   ஞாயிற்றுக்கிழமை 51 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர் மேலும் 3 ஆம்திகதி காலை திருகோணமலை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகில் 41 ஆண்கள், 5 பெண்கள் 5 குழந்தைகள் உட்பட … Read more

நாடு பெரும் திண்டாட்டத்தில் – பொலிஸ் அதிகாரியின் நெகிழ்ச்சி செயல்

இரத்தினபுரியில் கர்ப்பிணி பெண்ணுக்காக பொலிஸ் அதிகாரி ஒருவர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணித் தாய் ஒருவரை இரத்தினபுரி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் போது, ​​எரிபொருளின்றி வீதியில் முச்சக்கர வண்டி நின்றுள்ளது. எரிபொருள் நெருக்கடி [ இதனை அவதானிக்க பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் இருந்த எரிபொருளை வெளியே எடுத்து அதனை முச்சக்க வண்டிக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனார். கலவான பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் வசந்த குமார என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு எரிபொருளை … Read more

பதவி விலகிய பின்னர் முதன் முறையான ஆளும் கட்சி கூட்டத்தில் மகிந்த!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். பிரதமர் பதவியில் இருந்து விலகியதன் பின்னர், ஆளும் கட்சி உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். அவர் ஆபத்தான நிலையில் கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பின்னர் அந்த செய்திகள் பொய்யானது எனவும் சமூக ஊடகங்களில் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. மேலும், சில சமூக வலைதளங்களில் அவர் உயிர் இழந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. … Read more

மகிந்த மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை – சாகர காரியவசம் தகவல்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை துளியளவும் குறைவடையவில்லை என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் பொதுஜன பெரமுனவே இன்றும் செல்வாக்குள்ள கட்சியாக காணப்படுகிறது என்று நாம் நம்புகின்றோம். பொதுஜன பெரமுனவின் மீதும், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை துளியளவும் குறைவடையவில்லை. … Read more