பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒத்துழைப்பு வழங்கப்படும்.- அமெரிக்க தூதுவர் ஜூலி சன்ங்..

பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒத்துழைப்பு வழங்கப்படும்.- அமெரிக்க தூதுவர் ஜூலி சன்ங்..பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சன்ங் (Julie Chung) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களிடம் தெரிவித்துள்ளார். கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் திருமதி ஜூலி சன்ங் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கும் இடையில்  30 ஆம் திகதி அன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக அந்நாட்டில் … Read more

உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாகியுள்ள இலங்கை சிறுவர்கள்

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக சிறுவர்கள் கடுமையான உளவியல் ரீதியான பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  சிறுவர்கள் எதிர்நோக்கும் உளவியல் ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பாரிய சிரமங்களை எதிர்நோக்கும் சிறுவர்கள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வாசன் ரட்ணசிங்கம் இது குறித்து கொழும்பு ஊடுகம ஒன்றிடம் கருத்து வெளியிடுகையில்,  அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மற்றும் பேருந்து கட்டண அதிகரிப்புக்கு … Read more

தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் பதவிக்கு திரு. ஜயந்த டி சில்வா நியமனம்…

ஜயந்த டி சில்வா அவர்கள் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனக் கடிதம், 30 ஆம் திகதி அன்று முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களினால் ஜயந்த டி சில்வா அவர்களுக்கு கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு30.06.2022

இலங்கைக்குத் தேவையான சகல உதவிகளை வழங்க தயார் – இலங்கைக்கான ஓமான் தூதுவர் தெரிவிப்பு

இலங்கைக்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்க தயார் என்று இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி சஈத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுடன் நேற்று (01) இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இந்த உறுதிமொழியினை வழங்கினார். வலுசக்தி, காஸ், எரிபொருள், முதலீடு, தொழில்வாய்ப்பு ஆகிய துறைகளில் இருதரப்பிற்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார். தற்சமயம் ஓமானில் 25 ஆயிரம் இலங்கையர்கள் பணியாற்றி வருவதாகவும் திறன் அடிப்படையிலான தொழில் வாய்ப்புக்களுக்கு கூடுதலான சந்தர்ப்பங்களை வழங்குமாறு ஜனாதிபதி ஓமான் … Read more

இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக ஏற்பட்ட உச்சக்கட்ட அதிகரிப்பு

இலங்கையின் போக்குவரத்து வரலாற்றில் முதல் தடவையாக 4000 ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான பேருந்து பயணச்சீட்டு வழங்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கான சொகுசு பேருந்து கட்டணத்தை 4450.00 ரூபா வரை அறவிட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதி வழங்கியுள்ளது. முதல் தடவையாக அதிகரித்த கட்டணம் இதற்கு முன்னர் இந்த நாட்டின் போக்குவரத்து வரலாற்றில் 4000 ரூபாவைத் தாண்டிய பேருந்து பயணச்சீட்டு இதுவரை வழங்கப்பட்டதில்லை. இந்த கட்டணத்துடன் தொடர்புடைய பேருந்து சேவையை நடத்துவது சிரமமாக இருக்கும் என சம்பந்தப்பட்ட பேருந்து … Read more

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார், மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா

கடந்த யூன் மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார், மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா தற்போது நடைபெறுகிறது திருவிழாத் திருப்பலி தமிழ், சிங்கள மொழிகளில் ஆயர்களின் தலமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படுகிறது. திருவிழாத் திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி லயனல் இம்மானுவேல் வெர்னாண்டோ ஆண்டகை, யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஆகியோர் ஒப்புக்கொடுக்கிறார்கள். நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் … Read more

தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் அதிகரிக்கும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது. பொதுவான வானிலை முன்னறிவிப்பு2022 ஜூலை 02ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென் அரைப்பாகத்திலும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா, மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதுடன். மேல் … Read more

இலங்கையில் விமான நிலையங்களை முழுமையாக மூட வேண்டிய நெருக்கடியான நிலை

இலங்கையில் உள்ள விமான நிலையங்களின் செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக, போக்குவரத்துத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. டீசல் கிடைக்காததால் பயணிகள் போக்குவரத்து சேவைகள் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இதனால், 90 சதவீத தனியார் பேருந்துகள் இன்னும் இயங்கவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் மக்கள் தமது போக்குவரத்துத் தேவைகளை ரயில்கள் மற்றும் உள்ளூர் பேருந்துகள் மூலம் பூர்த்தி செய்துகொண்டனர். தற்போதைய சூழ்நிலையால் விமான நிலைய செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான நிலையத்தை … Read more

இலங்கைக்கு எரிவாயு விநியோகிப்பதில் இரு நிறுவனங்களுக்கு இடையில் கடும் நெருக்கடி

இலங்கைக்கு எரிவாயு விற்பனை செய்வது தொடர்பாக ஓமன் வர்த்தக நிறுவனத்திற்கும் தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்திற்கும் இடையில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து எரிவாயு நிறுவனங்களும் ஒரு மெட்ரிக் டன் எரிவாயுவை 96 டொலருக்கு வழங்க விருப்பம் தெரிவித்த நிலையில், ஓமன் டிரேடிங் நிறுவனம் 129 டொலருக்கு விலையை நிர்ணயித்துள்ளது. எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு  இதன் காரணமாக சியாம் எரிவாயு நிறுவனத்திற்கு … Read more