ஸ்விகி, சொமேட்டோ செயலிகள் சிறிது நேரம் முடங்கியதாக பயனர்கள் புகார்

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உணவு டெலிவரி செய்து வரும் ஸ்விகி மற்றும் சொமேட்டோ நிறுவன செயலிகள் சில மணி நேரம் முடங்கியதாக அதன் பயனர்கள் புகார் தெரிவித்தனர். இந்தப் புகாரை அவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக பகிர்ந்திருந்தனர். இந்தியாவில் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டரை பெற்று, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணியை மேற்கொண்டு வரும் ஸ்விகி மற்றும் சொமேட்டோ நிறுவன செயலிகள் சில மணி நேரம் முடங்கியுள்ளது. இது ‘தற்காலிகம்’ என சொமேட்டாவும், இது ‘தொழில்நுட்ப சிக்கல்’ … Read more

டோல்கேட் கட்டண விவரம், சுங்கச்சாவடி இல்லாத சாலை எது? – கூகுள் மேப்ஸில் விரைவில் புதிய அம்சம்

பயணத்திற்கு முன்னதாகவே பயனர்களுக்கு சுங்கச்சாவடி கட்டண விவரத்தை தரும் புதிய அம்சத்தை கூகுள் மேப்ஸ் விரைவில் அறிமுகம் செய்கிறது. இப்போதெல்லாம் ஏதேனும் ஒரு புதிய இடத்திற்கோ அல்லது ஊருக்கோ செல்வதென்றால் பெரும்பாலனவர்கள் கூகுள் மேப்ஸ் துணையை நாடுவதுண்டு. லொகேஷனை பகிர்ந்தால் போதும் அட்ரஸ் இல்லா தெருக்களை கூட கூகுள் மேப்ஸ் அறியும் என சொல்லலாம். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் இந்த அப்ளிகேஷன் பிரசித்தி பெற்றுள்ளது. இந்நிலையில், இதில் புதிய அம்சம் ஒன்று சேர்க்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

120W சார்ஜர்; மூன்று 50MP கேமரா – மிரட்ட வரும் சியோமி 12 ப்ரோ 5ஜி!

சீன நிறுவனமான சியோமி, விரைவில் தனது புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. ஏற்கனவே சந்தையில் இருக்கும் Flagship ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இந்த ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. வெளியாகும் சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பிரீமியம் அம்சங்களைக் கொண்டிருக்கும் என நிறுவனம் டீஸ் செய்துள்ளது. முதலில், தனது ட்விட்டர் பக்கத்தில் டீஸ் செய்திருந்த நிறுவனம், தற்போது அமேசான் இந்தியா பக்கத்தில் புதிய டீசரை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நிறுவனம் வெளியிட்ட நோட் 10 சீரிஸ் நல்ல … Read more

என்ன ஆச்சு சோமேட்டோ! ஆர்டர் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு!

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான Zomato இந்தியாவில் அதிகம் பயனர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. நிறுவனம் விரைவான டெலிவரி, கூப்பன்கள் என பல சலுகைகளை வழங்கி வருவதால், பெரும்பாலான பயனர்கள் சோமேட்டோ ஆப் மூலமே உணவை ஆர்டர் செய்து பெற விரும்புகின்றனர். இந்த நிலையில், இன்று பகல் 1:30 மணி முதல் சோமேட்டோ செயலியில் உணவு ஆர்டர் செய்ய முடியவில்லை என பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதுவரை நிறுவனம் இதனை உறுதி செய்யவில்லை என்றாலும், பெரும்பாலான … Read more

இந்தியாவில் அறிமுகச் சலுகையுடன் விற்பனைக்கு வந்தது ரியல்மி C31 ஸ்மார்ட்போன்

இந்தியச் சந்தையில் இன்று விற்பனையை தொடங்கியுள்ளது ரியல்மி நிறுவனத்தின் C31 (realme c31) ஸ்மார்ட்போன். இந்த போனுக்கு அறிமுகச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச நிறுவனமான ரியல்மி, இந்தியாவில் பட்ஜெட் விலை போனாக C31 ஸ்மார்ட்போனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஸ்மார்ட்போனை மின்னஞ்சல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் சாட், தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ள மற்றும் பிரவுசிங் செய்வது போன்ற அடிப்படை தேவைகளுக்காக பயன்படுத்தும் பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள போன் இது. குறைவான … Read more

ரியல்மி சி31 விற்பனை – ரூ.1000 தள்ளுபடி… விலை இவ்வளவு தான்!

இந்திய ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஏற்ற வகையில் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ரியல்மி நிறுவனம் புதிய மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போனை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. பிரபல நிறுவனமான Realme தனது மலிவு விலை ஸ்மார்ட்போனான Realme C31-ஐ முதலில் இந்தோனேசியா நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. 4ஜி இணைப்பு வசதி கொண்ட இந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தற்போது இந்திய டெக் சந்தையில் விற்பனைக்காக வெளியிடப்பட்டுள்ளது. விற்பனைக்கு வந்த போக்கோ சூப்பர் போன் – … Read more

யூடியூப் சேனல்களை முடக்கிய ஒன்றிய அரசு! என்ன காரணம்?

உண்மைக்கு மாறாக செய்திகளை பரப்புவதாகக் கூறி யூடியூப் சேனல்கள், சமூக வலைத்தள கணக்குகள், ஊடக நிறுவனங்கள் மீது ஒன்றிய அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. சில நாள்களுக்கு முன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல செய்தி தொலைக்காட்சி இதே காரணங்களுக்காக முடக்கப்பட்டது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர், ஊடகத் துறையினர் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, அந்த சேனல் மீட்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது 22 யூடியூப் சேனல்களை ஒன்றிய அரசு முடக்கியுள்ளது. … Read more

கார்ல் சீஸ் லென்ஸுடன் வெளியான புகைப்படங்கள் – Vivo X Note லீக்ஸ்!

விவோ தனது புதிய பிரீமியம் ஃபிளாக்ஷிப் விவோ எக்ஸ் நோட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. நிறுவனம் ஏப்ரல் 11 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்கிறது. புதிய விவோ போன் அறிமுகம் செய்யப்பட இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதன் புகைப்படங்கள் சீனாவின் பிரபல சமூக வலைத்தளமான Weibo இல் பகிரப்பட்டுள்ளன. கூடுதலாக, ஸ்மார்ட்போனின் வடிவமைப்போடு சில விவரக்குறிப்புகளும் தெரியவந்துள்ளன. விவோ எக்ஸ் நோட்டின் கசிந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது, மொபைலின் … Read more

எலான் மஸ்க் மருந்து வேலை செய்கிறது! அம்சமான ஆப்ஷன்களை அறிமுகம் செய்யும் ட்விட்டர்!

உலகளவில் நம்பகத்தன்மை பெற்ற சமூக வலைத்தளங்களில் முன்னணி வகித்து வருகிறது ட்விட்டர். வெறும் 280 வார்த்தைகளில் சொல்ல வந்ததை சொல்லிவிட்டுச் செல்லுங்கள் என்று ட்விட்டர் பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும், இதன் மீது மோகம் அதிகரித்தே வருகிறது. இந்நிலையில், ட்விட்டர் பல புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் நிறுவனம் வெளியிட்ட Twitter Spaces வசதி பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து நிறுவனம் தளத்தின் மேம்பாட்டுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. … Read more

உங்கள் வைஃபை துண்டிக்கப்படுவதற்கான காரணங்கள்? சரிசெய்ய எளிமையான டிப்ஸ்!

கொரோனா காலகட்டத்தில் நம் அனைவரையும் வீட்டிலேயே முடக்கிப் போட்டது ஊரடங்கு. இந்த ஊரடங்கின் விளைவாக பிராட்பேண்ட் நிறுவனங்கள் அதிக வளர்ச்சியைக் கண்டது. வீட்டில் இருந்து பணிகளை மேற்கொள்ளும்படி பெருவாரியான ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவிப்பு அனுப்பியது. இந்த நிலையில் அனைவருக்கும் வைஃபை இணைப்பு தேவைப்பட்டது. தொடர்ந்து அனைவரும் பிராட்பேண்ட் திட்டத்தைத் தேடிச் சென்றனர். சில நிறுவனங்களின் சேவைகள் வெகு மோசமாக இருந்தாலும், சில டெலிகாம் ஆபரேட்டர்கள் நல்ல பிராட்பேண்ட் சேவையை இச்சமயத்தில் பயனர்களுக்கு வழங்கினர். ஆனால், வீட்டில் தீவிரமாக … Read more