"முரளி படத்தில் உதவி இயக்குநர்; ஷூட்டிங்கில் அண்ணனுடன் கோபம்!" – டேனியல் பாலாஜி நினைவலைகள்
மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை மரணமடைந்த நடிகர் டேனியல் பாலாஜிக்கு திரைத்துறையினர் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் பாலாஜியுடனான நினைவுகளைப் பற்றி நெகிழ்ச்சியுடன் கூறிவரும் வேளையில், இவர் குறித்து அவ்வளவாகத் தெரியாத சில தகவல்களும் வெளியாகி வருகின்றன. டேனியல் பாலாஜி பாலாஜியாக சின்னத்திரையில் நுழைந்தவரை ‘சித்தி’ சீரியலின் கேரக்டர் பெயரான ‘டேனியல்’, டேனியல் பாலாஜியாகவே மாற்றிவிட்டது. ‘சித்தி’ தொடருக்குப் பிறகு தீவிரமாக சினிமா முயற்சியிலிருந்தவருக்கு சினிமாவில் நடிகராக வேண்டுமென்பதைக் காட்டிலும் இயக்குநராகலாம் … Read more