ஜெயிலர் வேடத்தில் ஜெயம் ரவி

ஜெயம் ரவி நடிப்பில் ‛அகிலன்' படம் சமீபத்தில் வெளியானது. அடுத்து அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடித்து வரும் படம் ‛சைரன்'. கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் நாயகிகளாக நடிக்கின்றனர். ஆக் ஷன் கலந்த கிரைம் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் ஜெயிலர் வேடத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. இம்மாதம் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது. அதையடுத்து படத்தின் மற்ற பணிகள் துவங்குகின்றன.

மீண்டும் இணைந்து நடிக்கும் சிம்ரன் – லைலா

ஈரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அறிவழகன் மற்றும் நடிகர் ஆதி மற்றும் இசையமைப்பாளர் தமன் வெற்றிக் கூட்டணியில் உருவாகும் “சப்தம்” படத்தில் நடிகை சிம்ரன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக இப்படத்தில் நாயகியாக லக்ஷ்மி மேனன் இணைந்தார். அதற்கடுத்து முக்கியமான பாத்திரத்தில் நடிக்க லைலா இணைந்த நிலையில் தற்போது நடிகை சிம்ரன் இணைந்துள்ளார். லைலாவும், சிம்ரனும் முன்னதாக பார்த்தேன் ரசித்தேன், பிதாமகன் படங்களில் இணைந்து நடித்திருந்தனர். நீண்ட இடைவெளிக்கு பின் இவர்கள் இணைந்து … Read more

'மாவீரன்' படத்திற்கு கப்பல் செட்?

மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாவீரன்'. இதில் கதாநாயகனாக சிவகார்த்திகேயனும், கதாநாயகியாக அதிதி ஷங்கரும் நடித்து வருகிறார்கள். நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. கிளைமாக்ஸ் காட்சிக்காக புதுச்சேரியில் பிரமாண்டமான கப்பல் செட் உருவாக்கி படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் உடன் மிஷ்கினும் நடிக்கிறார். … Read more

மீண்டும் இணையும் நடிகைகள்… அதுவும் 22 வருடங்களுக்கு பின் – குஷியில் கோலிவுட்!

தமிழ் திரையுலகில் கோலோச்சிய நடிகைகள் சிம்ரன், லைலா இருவரும் மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் ஒரே படத்தில்,  திரையில் இணைந்து தோன்ற உள்ளார்கள். லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘சப்தம்’ படத்தில் தற்போது நடிகை சிம்ரனும் இணைந்துள்ளார்.  ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு, இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி மற்றும் தமன் வெற்றிக்கூட்டணியில் உருவாகும் “சப்தம்” படத்தில் நடிகை சிம்ரன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.   பிதாமகனுக்கு பின்… முன்னதாக இப்படத்தில் நாயகியாக, நடிகை … Read more

கார் நுழைவு வரி சிக்கலில் ஹாரிஸ் ஜெயராஜ்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ். 2001-ம் ஆண்டு வெளியான மின்னலே படத்தின் மூலம் தனது திரைபயணத்தை இசையமைப்பாளராக தொடங்கினார். கடைசியாக தமிழில் தி லெஜண்ட் படத்திற்கு இசையமைத்த ஹாரிஸ் தற்போது ஜெயம் ரவி நடிக்கும் படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டில் இருந்து மசிராட்டி க்ராண்டுரிஸ்மோ என்னும் சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். இந்த காரை தமிழகத்தில் பயன்படுத்தும் வகையில் போக்குவரத்து அலுவலகத்திற்கு … Read more

இந்தியா – ஆஸி., கிரிக்கெட் போட்டியை ரசித்த ரஜினி

மும்பை : இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதற்காக நடிகர் ரஜினிக்கு சிறப்பு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ரஜினியும் இந்த அழைப்பை ஏற்று, கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க சென்றார். மைதானத்தின் விஐபி கேலரியில் அவர் போட்டியை ரசித்து பார்த்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின. தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. அடுத்து தனது … Read more

கவர்ச்சி ரூட்டிற்கு மாறுகிறாரா கீர்த்தி சுரேஷ்

சாவித்ரி வேடத்தில் நடித்து தேசிய விருது பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அடுத்த சாவித்ரி என திரையுலகில் பெயர் எடுத்தவர். சமீபகாலமாக கதையின் நாயகியாக அவர் நடித்து வந்தார். ஆனால் அந்த படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. இதனால் மீண்டும் கமர்ஷியல் ரூட்டிற்கு மாறி வருபவர் தற்போது தமிழ், தெலுங்கில் பல படங்களில் முன்னனி நட்சத்திரங்களுடன் பிஸியாக நடித்து வருகிறார். சமீபகாலமாக சற்றே கவர்ச்சி ரூட்டிற்கு இவர் மாறி வருகிறார். இந்நிலையில், கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றையும் … Read more

Simbu: ஆண்டவர் படத்துக்கான லுக்கா.? தீயாய் இருக்கே: வெறித்தனம் காட்டும் சிம்பு.!

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ படம் சிம்புவிற்கான தரமான கம்பேக்காக அமைந்தது. இந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நிதானமாக தனது அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் தான் சிம்புவின் லேட்டஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி வருகிறது. சிம்பு நடிப்பில் கடந்தாண்டு ‘வெந்து தணிந்தது காடு’ படம் வெளியானது. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் நல்ல வசூலை அள்ளியது. ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு கிடைத்த வரவேற்பால் அதன் … Read more

சிறு பட்ஜெட்டில் தயாராகும் சரித்திர படம்

பல நூறு கோடியில் பொன்னியின் செல்வன் மாதிரியான படங்கள் ஒரு பக்கம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் யாத்திசை என்ற பெயரில் சிறுபட்ஜெட்டில் ஒரு படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தை தரணி ராசேந்திரன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த ரணதீரன் பாண்டியன் மன்னனுக்கும், எயினர்கள் எனப்படும் பழங்குடி கூட்டத்துக்கும் இடையே நடந்த போராட்டத்தின் அடிப்படையில் கதை உருவாக்கப்பட்டு உள்ளது. 'நவகண்டம்' என்று அழைக்கப்பட்ட தன்னைத்தானே பலி கொள்ளும் முறை, கொற்றவை … Read more

Leo: லியோ படப்பிடிப்பில் நடப்பதெல்லாம் பார்த்த சந்தேகமா இருக்கே..குழப்பத்தில் ரசிகர்கள்..!

லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய்யின் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தை பற்றி தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசி வருகின்றனர். சொல்லப்போனால் கோலிவுட் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் இப்படத்தை ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றது. விக்ரம் என்ற மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜின் மவுசு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினி முதல் சல்மான் கான் வரை அனைவரும் லோகேஷின் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தனர். இவ்வாறு பரபரப்பாக இருக்கும் லோகேஷ் தற்போது லியோ … Read more