விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா!

தற்போது ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தில் வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதி, இன்னும் சில ஹிந்தி படங்களிலும் நாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்தபடியாக கவுதம் மேனன் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கும் படங்களில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் இயக்கும் ‛மகாராஜா' என்ற படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி … Read more

புஷ்பா-2 படத்தின் மாஸ் அப்டேட்!

நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் புஷ்பா பாகம் 1. செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவான இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்கள் மற்றும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தை விட பல மடங்கு பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு … Read more

'ஏ… இந்தாமா' மார்டன் மங்கையிடம் மயங்கினாரா நடிகர் மாரிமுத்து… உண்மை என்ன?

Actor Marimuthu Issue: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் மூலம் சமூக வலைதளங்களில் பரவலாக அறியப்படுபவர் நடிகர் மாரிமுத்து. இவர் வெள்ளித்திரையில் பிரபலமடைவதற்கு முன்பே இவர் திரைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமானவராக இருந்தார். பைரவா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பிரபலமான படங்களிலும் இவர் நடித்திருந்தார்.    இவரின் துல்லியமான தமிழ் உச்சரிப்பும், மிடுக்கான உடல்வாகும் பலரையும் கவர்ந்தது என்றே கூறலாம்.  ஆனால், இவர் நடிகராவதற்கு இயக்குநராக இரண்டு படங்களை இயக்கியுள்ளார். 2000இல் கண்ணும் கண்ணும் … Read more

ரூ.5 கோடி பட்ஜெட்… ரூ.50 கோடி வசூல்

சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்களை விட சில குறிப்பிடத்தக்க சின்ன பட்ஜெட் படங்கள் சூப்பர் ஹிட்டாகி வருகின்றன. அதற்கு தமிழில் சமீபத்திய உதாரணம் பிரதீப் ரங்கநாதனின் ‛லவ் டுடே' படம். இந்தப்படம் தமிழில் 7 முதல் 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.100 கோடி வசூலை அள்ளியது. அதேப்போன்று கன்னடத்தில் வெளியான காந்தார படமும் ரூ.400 கோடி வசூலை கடந்து அசத்தியது. இப்போது மலையாளத்தில் அப்படி ஒரு சாதனை நிகழ்ந்துள்ளது. மலையாளத்தில் புதுமுக இயக்குனர் ஜித்து மாதவ் … Read more

தெலுங்கு சினிமாவின் விவேக்கிற்கு பிறந்தநாள்.. போஸ்டர் வெளியிட்ட ஜெயிலர் படக்குழு!

தெலுங்கு சினிமாவின் விவேக் : தெலுங்கு சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாகவே காமெடி, கதாநாயகன் தற்போது வில்லன் என்று கலக்கி வரும் நடிகர் சுனிலுக்கு இன்று 49-வது பிறந்தநாள். சுனில் கடந்த 20 வருடங்களில் தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சிரஞ்சீவி, ரவிதேஜா, வெங்கடேஷ் தொடங்கி தற்போது இளம் கதாநாயகர் வரிசையில் இருக்கும் ராம்சரண், அல்லு அர்ஜுன் வரை நடித்துள்ளார். இதுவரை தெலுங்கு சினிமாவில் மட்டுமே நடித்த வந்த சுனில் தற்போது Pan India நட்சத்திரமாக … Read more

சித்தார்த் – அதிதி காதல் ஜோடியின் 'ரீல்ஸ்' நடன வீடியோ

நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் ஹைதரி இருவரும் தற்போது காதலித்து வருகிறார்கள். இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசிப்பதாக ஒரு கிசுகிசு இருந்து வருகிறது. அதை நிரூபிக்கும் வகையில் இருவரும் சேர்ந்து ஒரு 'ரீல்ஸ்' வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். “டம் டம் டம்” பாடலுக்கு இருவரும் ஒன்றாக நடனமாடிய வீடியோவை நேற்று வெளியிட்டார் அதிதி ராவ். அந்த வீடியோவை இதுவரையில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். பல பிரபலங்கள் சிறப்பாக நடனமாடியுள்ளதாக வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். 'டான்ஸ் … Read more

Thunivu, Ajith: சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த துணிவு… உலக அளவில் வசூலை பாருங்க…

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் துணிவு. ஏற்கனவே ஹெச் வினோத் இயக்கத்தில் நேர் கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களில் நடித்துள்ளார் அஜித். இந்த இரண்டு படங்களையும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர்தான் தயாரித்திருந்தார். Khushbu: வாவ்… கலெக்டர் லுக்கில் குஷ்பு… அசத்தல் க்ளிக்ஸ்! இந்நிலையில் இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம்தான் துணிவு. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். மக்களிடம் வங்கிகள் நடத்தும் கொள்ளையை … Read more

'அவுட் ஆப் போகஸ்' புகைப்படங்களைப் பதிவிட்ட கீர்த்தி சுரேஷ்

சமூக வலைத்தளங்களில் நடிகைகள் பலரும் அவர்களது விதவிதமான புகைப்படங்களைப் பதிவிடுவது வழக்கம். சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகள், டிவி நடிகைகள், டிவி தொகுப்பாளர்கள் என பலரும் விதவித ஆடைகளில், விதவித புகைப்படங்களை வெளியிட்டு 'லைக்ஸ்'களை அள்ளுவார்கள். முன்னணி நடிகைகள் என்றால் சில பல லட்சங்களுக்கு லைக்ஸ் வரும். புகைப்படங்களைப் பதிவிடும் போது தரமாக எடுக்கப்பட்ட, அழகான புகைப்படங்களை மட்டுமே அனைவரும் பதிவிடுவார்கள். ஆனால், முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் நேற்று சில மோசமான தரத்தில் எடுக்கப்பட்ட 'அவுட் … Read more

Vijay: விஜய்யின் தொடர் வெற்றிக்கு காரணம் என்ன..?: அப்பா எஸ்.ஏ.சி அதிரடி.!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய். இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும். இவர் தற்போது லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நடிகராக திகழும் விஜய்யின் ஆரம்பக்கால திரை பயணத்திற்கு உறுதுணையாக இருந்தவர் இவரின் தந்தை எஸ்.ஏ. … Read more

கன்னடத்தில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை

பாலிவுட்டில் வெளியான 'கல்லி பாய்' படத்தில் நடித்து புகழ் பெற்றவர் மல்லிகா சிங். ஜான்பாஸ் சிந்துபாத், ராதாகிருஷ், ஜெய் கன்கய்யா லால் கி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். எஸ்கேப் லைவ் என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் கன்னட படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். சுனி இயக்கத்தில் வினய் ராஜ்குமார் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் மூலம் கன்னட சினிமாவுக்கு வருகிறார். இந்த படத்தில் அவர் காஷ்மீர் பெண்ணாக நடிக்கிறார். மல்லிகா சிங் நடித்த … Read more