இரண்டே நாளில் 200 கோடி வசூலித்த 'பதான்'

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடித்து இரண்டு தினங்களுக்கு முன்பு ஜனவரி 25ல் வெளியான ஹிந்திப் படம் 'பதான்'. இந்தப் படம் முதல் நாள் வசூலாக 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மட்டும் சுமார் 69 கோடி வசூல், வெளிநாடுகளில் 37 கோடி வசூல் என முதல் நாள் வசூலாக 106 கோடி வரை வசூலித்துள்ளது என்கிறார்கள். ஹிந்தியில் ஒரு படம் வெளியான … Read more

வைரல் வீடியோ! ரசிகரின் செல்போனை பிடுங்கி வீசிய பிரபல நடிகர்!!

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், செல்ஃபி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கி வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரன்பீர் கபூருக்கு அருகில் நின்றுகொண்டு அவரது ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயல்கிறார். இரண்டு, மூன்று முறை க்ளிக் செய்தும் புகைப்படம் விழவில்லை என தெரிகிறது. இதனையடுத்து தனது மொபைலை ரசிகர் பரிசோதித்து பார்க்கிறார். அப்போது ரசிகரிடம் செல்ஃபோனைக்கேட்கும் ரன்பீர் கபூர் அதை வாங்கி தூக்கி எறிந்துவிடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. … Read more

ஒருவேள ஸ்பூஃப் கல்லூரியா இருக்குமோ! எந்த ஊர் காலேஜுங்க இது..? எப்படியிருக்கு Engga Hostel

கனவுகளுடன் பொறியியல் கல்லூரிக்கு வரும் ஜூனியர்களும், அவர்களை ரேகிங் செய்யும் சீனியர்களும், இவர்கள் படிக்கும் கல்லூரியில் நடக்கும் தில்லுமுல்லுகளுமே அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் #EnggaHostel கதைக்களம். எல்லா பொறியியல் கல்லூரிகளைப் போலவும் இந்தக் கல்லூரியிலும் ரேகிங் கொடிகட்டிப் பறக்கிறது. அதென்ன எல்லா பொறியியல் கல்லூரிகளிலும் என்கிறீர்களா? அதாவது சினிமாக்களில் காட்டப்படும் எல்லா பொறியியல் கல்லூரிகளிலும். என்னதான் ரேகிங் என்பதெல்லாம் அப்பாஸ், வினித் நடித்த காதல் தேசத்து காலத்திலேயே பல கல்லூரிகளில் மறைந்துவிட்டாலும், தமிழ் சினிமாவில் மட்டும் இன்னும் … Read more

யாராக வேண்டுமானாலும் இரு, விவசாயியாகவும் இரு: கார்த்தி வேண்டுகோள்

நடிகர் கார்த்தி உழவன் பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். விவசாயிகளை ஒருங்கிணைப்பது, இயற்கை விவசாயத்தை பரப்புவது உள்ளிட்ட பணிகளை இவர்கள் செய்து வருகிறார்கள். அதோடு ஆண்டு தோறும் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து அவர்களுக்கு உழவர் விருதும், ஒரு லட்சம் ரூபாய் பரிசும் வழங்கி வருகிறார். இந்த ஆண்டுக்கான உழவர் விருது விழா நடந்தது. இதில் 4 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நடிகர்கள் சிவகுமார், ராஜ்கிரன், பொன்வண்ணன், இயக்குனர் பாண்டிராஜ், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக … Read more

புதிதான ஒரு களத்திற்கு அழைத்துச் செல்லும் ‘அயலி’ -வித்தியாசமான முயற்சியில் கவனம் ஈர்த்ததா?

தொடர்ச்சியாக த்ரில்லர், கொலை, கொள்ளை என நம் மேல் ரத்தம் தெறிக்கும் படியான கண்டெண்ட்களைத் தந்து கொண்டிருக்கும் வெப் சீரிஸ் உலகில், புதிதான ஒரு களத்திற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறது ஜீ5 தளத்தில் வெளியாகியிருக்கும் ‘அயலி’. உலகின் பல மொழி சினிமாக்களில் Utopian and dystopian fiction என்ற ஒரு வகைமை உண்டு. நிகழ்கால பிரச்சனைகளை மையமாக வைத்து எதிர்காலத்தில் நடக்கும் ஒரு கதையைச் சொல்லும் வடிவம் அது. அதன் ரிவர்ஸ் வடிவமாக, ‘அயலி’-ஐ எடுத்துக் கொள்ளலாம். … Read more

மீண்டும் பெரிய திரைக்கு திரும்பிய சாந்தினி தமிழரசன்

சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் குடிமகான். நாளைய இயக்குநர் டிவி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிரகாஷ் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்துள்ளார். விஜய் சிவன் அறிமுக நாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன் கதாநாயகியாக நடித்துள்ளார். சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது, ஹானஸ்ட் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . தனுஜ் மேனன் இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் பிரகாஷ் கூறியதாவது: வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு … Read more

Thalapathy 67: தளபதி 67 ..இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…அதுக்குன்னு இப்படியா ?

தற்போது திரைவட்டாரங்களில் எங்கு திரும்பினாலும் தளபதி 67 படத்தை பற்றிய பேச்சு தான் போய்க்கொண்டிருக்கிறது. என்னதான் விஜய் நடிப்பில் திரையரங்கில் வாரிசு திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தாலும் அனைவரது கவனமும் தளபதி 67 மீது தான் இருக்கின்றது. அதற்கு மிகமுக்கிய காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். அவர் கடைசியாக உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இயக்கிய விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. குறிப்பாக விக்ரம் படத்தில் அவர் பயன்படுத்திய LCU ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. எனவே இவர் … Read more

மாலத்தீவுக்கு டூர் : ராஷ்மிகா பதிலடி

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்தார் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று இருவரும் பதில் கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் இருவரும் மாலத்தீவிற்கு சென்று வந்த போட்டோக்களை தனித்தனியாக பகிர்ந்தனர். அதையடுத்து அவர்கள் இருவரும் சேர்ந்து மாலத்தீவிற்கு ஜாலி டூர் சென்றதாகவும் சோசியல் மீடியாவில் செய்திகள் வைரலாகின. இதைவைத்து பலரும் பலவிதமான கருத்துக்களை … Read more

பெரும் அதிர்ச்சி! டான்ஸர் ரமேஷ் தற்கொலை!!

சென்னையை சேர்ந்த டான்ஸர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் சாலையில் நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் மூலம் பிரபலமானார். 50 வயதான ரமேஷ் மூர் மார்க்கெட் பகுதியில் சாலையோர கடைகளில் தினக்கூலி வேலை பார்த்து வந்தார். சிறுவயது முதல் மேடை நிகழ்ச்சிகளில் நடனமாட அவ்வப்போது செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் நண்பர்களின் உதவியால் இன்ஸ்டாகிராமில் தனது நடனத்தை ரீல்ஸ் வீடியோவாக போடத் தொடங்கினார். அவரது வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பிரபலமாக்கியது. … Read more

Thangalaan: 'தங்கலான்' படத்திற்காக ஜிவி பிரகாஷ் செய்யும் காரியம்: வேறலெவல் அப்டேட்.!

பா. ரஞ்சித், விக்ரம் இருவரும் முதன்முறையாக ‘தங்கலான்’ படத்தில் இணைந்துள்ளனர். விக்ரம் நடிப்பில் அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மணிரத்னம் இயக்கிய இந்தப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம் இந்தப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் விக்ரம் தற்போது நடித்து வரும் ‘தங்கலான்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. விக்ரம் நடிப்பில் அண்மையில் வெளியான கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து … Read more