பெரும் அதிர்ச்சி! டான்ஸர் ரமேஷ் தற்கொலை!!

சென்னையை சேர்ந்த டான்ஸர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் சாலையில் நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் மூலம் பிரபலமானார். 50 வயதான ரமேஷ் மூர் மார்க்கெட் பகுதியில் சாலையோர கடைகளில் தினக்கூலி வேலை பார்த்து வந்தார். சிறுவயது முதல் மேடை நிகழ்ச்சிகளில் நடனமாட அவ்வப்போது செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் நண்பர்களின் உதவியால் இன்ஸ்டாகிராமில் தனது நடனத்தை ரீல்ஸ் வீடியோவாக போடத் தொடங்கினார். அவரது வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பிரபலமாக்கியது. … Read more

Thangalaan: 'தங்கலான்' படத்திற்காக ஜிவி பிரகாஷ் செய்யும் காரியம்: வேறலெவல் அப்டேட்.!

பா. ரஞ்சித், விக்ரம் இருவரும் முதன்முறையாக ‘தங்கலான்’ படத்தில் இணைந்துள்ளனர். விக்ரம் நடிப்பில் அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மணிரத்னம் இயக்கிய இந்தப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம் இந்தப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் விக்ரம் தற்போது நடித்து வரும் ‘தங்கலான்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. விக்ரம் நடிப்பில் அண்மையில் வெளியான கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து … Read more

விடுதலை படத்தின் டப்பிங் தொடங்கியது

'அசுரன்' படத்திற்குப் பிறகு விடுதலை திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், ஆகியோர் நடித்துள்ளனர். ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இளையராஜா இசை அமைத்துள்ளார் . சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி உள்ளன. இந்த … Read more

Rajini: வாழ்க்கை ஒரு வட்டம்..தலைவர் சொன்ன அட்வைஸ்..இணையத்தில் வைரல்..!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். திரையுலகில் இவர் கண்டிராத வெற்றிகள் இல்லை எனலாம். அந்த அளவிற்கு வெற்றிகளை குவித்த ரஜினி தற்போது ஒரு வெற்றி படத்திற்காக போராடி வருகின்றார். எந்திரன் படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிகளை பெறவில்லை. குறிப்பாக கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. Thalapathy 67: தளபதி 67 படத்தில் விக்ரம் நடிக்கிறாரா? பதில் சொன்ன லோகேஷ்..! இதன் காரணமாக … Read more

2 நாளில் ரூ.200 கோடி வசூலை தட்டித்தூக்கிய ‘பதான்’ – ஷாருக்கானை பார்த்து வியக்கும் பாலிவுட்

ஷாருக்கானின் ‘பதான்’ படம் இதுவரை இல்லாத அளவுக்கு பாலிவுட் பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டி வருவது, திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த 2020-ம் ஆண்டு இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இறப்புக்குப் பிறகு, பாலிவுட்டில் அமீர்கான், ரன்வீர் சிங், ரன்வீர் கபூர், அக்ஷய் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானப் போதெல்லாம் #BoycottBollywood என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட்டாக்கி வந்தனர். ஏனெனில், பாலிவுட் திரையுலகில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்களின் வாரிசுகள் … Read more

மைசூரில் நடைபெற்ற நடிகை ஹரிப்ரியா – நடிகர் வசிஷ்ட சிம்ஹா திருமணம்

கன்னடத்திலிருந்து தமிழுக்கு 'கனகவேல் காக்க' என்ற படம் மூலம் அறிமுகமானவர் ஹரிப்ரியா. “வல்லக்கோட்டை, முரண்,' சமீபத்தில் வெளிவந்த 'நான் மிருகமாய் மாற' உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் பல கன்னடப் படங்களிலும் சில தெலுங்குப் படங்களிலும் நடித்து வருபவர். அவருக்கும் கன்னட நடிகரான வசிஷ்ட சிம்ஹாவுக்கும் நேற்று மைசூரில் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் கன்னட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். வசிஷ்ட சிம்ஹா, கன்னடத்தில் பல படங்களில் … Read more

Ajith Kumar: விஜயண்ணா தம்பியை தட்டித்தூக்கிய அஜித்: 'ஏகே 63' இயக்குனர் இவரா..!

கடந்த 11 ஆம் தேதி வெளியான அஜித்தின் ‘துணிவு’ படம் பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்து வருகிறது. நடிகர் அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக இந்தப்படத்தில் இணைந்தது. விஜய்யின் வாரிசுக்கு போட்டியாக வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. அஜித்தின் முந்தைய படமான ‘வலிமை’ வசூலில் சக்கை போடு போட்டாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பினை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. மேலும் இந்தப்படத்தில் அஜித்தின் லுக் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டது. … Read more

விவசாயத்தை போதித்த கார்த்தி

சென்னையில் நடந்த உழவன் அறக்கட்டளை விழாவில் பேசிய கார்த்தி, விவசாயம் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள உழவன் அறக்கட்டளையைத் தொடங்கினேன். சமுதாயத்தில் விவசாயிகளின் மீதுள்ள மரியாதையும், அறிவும் குறைவாக இருக்கிறது. அவர்களை அங்கீகரிப்பதும், அடையாளப்படுத்துவதும் முக்கியம். …

ஜூடோ ரத்தினத்திற்கு திரையுலகினர் அஞ்சலி : பூரண வாழ்க்கை வாழ்ந்ததாக ரஜினி புகழாரம்

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இந்திய சினிமாவில் 1500 படங்களுக்கு மேல் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றியவர் ஜூடோ ரத்தினம். வயது மூப்பு காரணமாக நேற்று மாலை வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள அவரது சொந்த ஊரில் காலமானார். அவரது உடல் திரையுலகினரின் அஞ்சலிக்காக சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய ஸ்டன்ட் யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ரஜினி, சத்யராஜ், மனோபாலா, எஸ்பி முத்துராமன் உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்களும், ஸ்டன்ட் மாஸ்டர்கள், கலைஞர்களும் அஞ்சலி செலுத்தினார். பூரண … Read more

Pathaan: ரெண்டே நாள்ல இத்தனை கோடிகளா? வாயை பிளக்க வைத்த பதான்!

ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள பதான் திரைப்படம் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் வசூலித்த தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பதான் திரைப்படம்ஷாருக்கான் நடிப்பில் பெரும் சர்ச்சைகளுக்கு இடையில் வெளியாகியுள்ள படம் பதான். இந்தப் படத்தை பிரபல பாலிவுட் இயக்குநரான சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ஷாருக்கான் நடிப்பில் கடந்த 4 ஆண்டுகளாக எந்தப் படமும் ரிலீஸ் ஆகாத நிலையில் பெரும் போராட்டங்களுக்கு பிறகு கடந்த 25 ஆம் தேதி அதாவது நேற்று முன்தினம் இப்படம் வெளியானது. இப்படத்தில் ஷாருக்கானுக்கு … Read more