Pushpa 2 படப்பிடிப்பு துவக்கம்: ரசிகர்களின் பாச மழையில் நனைந்த அல்லு அர்ஜுன்!!

புஷ்பா 2 படப்பிடிப்பு: தெலுங்கு திரைப்படத்துறை சமீபத்திய நாட்களில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. பல தெலுங்கு திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசில் சக்கை போடு போட்டு வருகின்றன. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படம் இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கும். இந்த ஆண்டும் பல அதிரடி தெலுங்கு படங்கள் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. இப்படிப்பட்ட மாஸ் எண்டர்டெய்னர் படங்கள், பெரும்பாலும் பல மொழிகளில் எடுக்கப்படுகின்றன, அல்லது மொழிபெயர்க்கப்படுகின்றன. இவை இந்திய அளவிலும், பெரும் வெற்றிகளை … Read more

‘”ஒரு பெண்ணிடம் நடந்து கொள்ளும் முறையா இது! அதுவும் சட்டக்கல்லூரி மாணவர்’- அபர்ணா பாலமுரளி

கேரளாவில் சட்டக்கல்லூரி மாணவர் தன்னிடம் நடந்துகொண்ட விதம் குறித்து நடிகை அபர்ணா பாலமுரளி தனது வேதனையை பதிவுசெய்துள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள சட்டக்கல்லூரியின் விழாவில், தனது ‘தங்கம்’ பட புரமோஷனுக்காக சென்ற நடிகை அபர்ணா பாலமுரளியிடன் மாணவர் ஒருவர் நடந்துகொண்ட விதம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இதற்கு ரசிகர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து அபர்ணா பாலமுரளி தெரிவித்துள்ளதாக ஆன்மனோரமா தனது இணையதளபக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது, “ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவளைத் தொடுவது சரியல்ல என்ற … Read more

ஒரு வழியாக 73 வயதில் பத்தாம் வகுப்பு பாஸான லீனா ஆண்டனி

படிப்பதற்கு ஆர்வம் இருந்தால் வயது ஒரு தடை இல்லை என நிரூபித்திருக்கிறார் கேரளாவை சேர்ந்த குணச்சித்திர நடிகை லீனா ஆண்டனி. மலையாளத்தில் பஹத் பாஸில் நடிப்பில் வெளியான மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் நாயகி அபர்ணா பாலமுரளியின் அம்மாவாக நடித்திருந்தவர் தான் இந்த லீனா ஆண்டனி. குணச்சித்திர நடிகையான இவரது கணவரும் நாடக நடிகர் தான். கணவரின் மனைவிக்கு பிறகு மகனும் மருமகளும் கொடுத்த ஊக்கத்தில் பாதியிலேயே நிறுத்தி இருந்த படிப்பை தொடரும் விதமாக பத்தாம் வகுப்பிற்கு தேர்வு … Read more

நடிகையிடம் அத்துமீறிய கல்லூரி மாணவர் சஸ்பெண்ட்!!!

நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய சட்டக் கல்லூரி மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி, தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அபர்ணா பாலமுரளியின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததோடு, அதனை அங்கீகரிக்கும் விதமாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. இதையடுத்து தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் … Read more

Thalapathy 67: முன்னணி ஹீரோவை புக் செய்த லோகேஷ் கனகராஜ்..வெளியான வேற லெவல் அப்டேட்..!

மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கின்றார். கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றிகளை கொடுத்துவந்த லோகேஷ் அடுத்ததாக விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்கி வருகின்றார். லோகேஷ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றி லோகேஷை இந்தியளவில் பிரபலமாக்கியது. இதையடுத்து பல முன்னணி நடிகர்கள் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் … Read more

சென்னை திரும்பினார் நடிகர் விஜய் ஆண்டனி; வீடியோ காலில் பேசுவார் – இயக்குநர் சுசீந்திரன்

பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த நடிகர் விஜய் ஆண்டனி எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார். ஸ்கூட்டர் போட் இயக்கும்போது அவர் விபத்தில் சிக்கியிருக்கிறார். இதில் காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கொடுக்கப்பட்ட சிகிச்சையினால் உடனடியாக நல்ல நிலைக்கு திரும்பினார் விஜய் ஆண்டனி. சினிமாத்துறையை சேர்ந்த தனஞ்ஜெயன் கூட தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி நலமாக இருப்பதாக தெரிவித்தார்.  … Read more

”வேதனையா இருக்கு” – வாடகைத் தாய் முறையே தேர்ந்தெடுத்தது ஏன்? – பிரியங்கா சோப்ரா உருக்கம்!

வாடகைத் தாய் முறையை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவைச் சேர்ந்தப் பிரபல பாடகரான நிக் ஜோனஸை கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். தன்னைவிட பத்துவயது இளையவரை திருமணத் செய்துகொண்டதாக அப்போது கிண்டலுக்கு உள்ளானார் பிரியங்கா சோப்ரா. எனினும் இதனையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தங்களது திருமண வாழ்க்கையை இவர்கள் சந்தோஷமாக எடுத்துச் சென்றுக்கொண்டிருந்த நிலையில், 3 ஆண்டுகள் கழித்த இந்தத் … Read more

தமிழுக்கு வரும் அன்னா பென்

கும்பளங்கி நைட்ஸ் படத்தில் அறிமுகமானவர் அன்னா பென். அதன்பிறகு அவர் நடித்த ஹென்னா படத்தின் மூலம் புகழ்பெற்றார். இந்தப் படம்தான் தமிழில் அன்பிற்கினியாள் என்ற பெயரிலும், இந்தியில் மிலி என்ற பெயரிலும் ரீமேக் ஆனது. அதன்பிறகு கப்பெல்லா, சாராஸ், நாரதன், நைட் டிரைவ், கப்பா படங்களில் நடித்தார். தற்போது என்னிட்டு அவசானம், அஞ்சு சென்டு செல்லினியம் படங்கள் நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழுக்கு வருகிறார் அன்னா பென். கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கும் … Read more

நடிகை ஓவியாவுக்கு முத்தம் கொடுத்த இளைஞர்!!..வைரல் வீடியோ!!

நடிகை ஓவியாவுக்கு இளைஞர் ஒருவர் முத்தம் தரும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகை ஓவியா, நடிகர் ஆரவ்வை காதலித்து வந்தார். இவர்களிடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர். பிறகு, மற்றொருவரை காதலிப்பதாக ஓவியா கூறினார். இந்த காதலும் முறிந்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் புதிதாக ஒரு வீடியோவை ஓவியா வெளியிட்டு இருக்கிறார். அதில், ஓவியா சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார். அவருக்கு, இளைஞர் ஒருவர் முத்தம் தருகிறார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஓவியாவிற்கு முத்தம் கொடுக்கும் இளைஞர் … Read more

Varisu vs Thunivu: மீண்டும் மோதலில் விஜய் – அஜித்: உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

வாரிசு, துணிவு படங்கள் ரிலீஸில் மோதி தற்போது வசூலில் மோதி வருகின்றனர். ஒரே தினத்தில் வெளியான இந்த இரண்டு படங்களில் எந்த படம் வசூலில் முந்தும் என்பது ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிவரும் வாரிசு, துணிவு படங்களில் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘துணிவு’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. துணிவு படம் நள்ளிரவு 1 … Read more