‘வந்தான் சுட்டான் ரிப்பிட்டு’.. அதே பேய் பங்களா.. மீண்டும் திகில் கதையை இயக்கும் ராம்பாலா

இயக்குநர் ராம்பாலா இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ’தில்லுக்கு துட்டு’, ’தில்லுக்கு துட்டு 2’ படங்களை இயக்கி கவனம் ஈர்த்த ராம்பாலா இயக்கத்தில் சமீபத்தில் கடந்தஏப்ரல் 1 ஆம் தேதி ‘இடியட்’ வெளியானது. தனது வழக்கமான திகில் ப்ளஸ் காமெடி பாணியிலேயே மூன்று படங்களையும் உருவாக்கியிருந்தார் ராம்பாலா. மூன்றாவதாக இயக்கிய ‘இடியட்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில், தனது நான்கவது படத்தினையும் திகில் கதைக்களத்திலேயே உருவாக்கவுள்ளார். படத்தின் போஸ்டரில் இதற்கு முன்னர் இயக்கிய மூன்று … Read more

மூன்று ஆண்டுகளாக வழக்கு தொடராதது ஏன்? – சிவகார்த்திகேயனுக்கு ஐகோர்ட் கேள்வி

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் ராஜேஷ் எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து கடந்த 2019ல் வெளியான படம் ‛மிஸ்டர் லோக்கல்'. இந்த படத்திற்காக தனக்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், ஆனால் ரூ.11 கோடி மட்டுமே தயாரிப்பாளர் வழங்கியதாகவும் மீதி தொகையை வசூலித்து தரும் படி ஞானவேல்ராஜாவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் சிவகார்த்திகேயன். இதற்கு ஞானவேல்ராஜா ‛மிஸ்டர் லோக்கல்' படத்தால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அந்த படத்தின் கதையே … Read more

பிரபல் ஓடிடி தளத்தின் பிராண்ட் அம்பாசிடராக மாறிய சிலம்பரசன்…!

‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ ஆக அறிமுகமானதில் இருந்து இன்று பெரிய ஸ்டாராக வலம் வருவது வரை தமிழ் சினிமாவில் சிம்பு ஒரு தனி அடையாளம். சில வருடங்களாக அவர் நடிக்காமல் இருந்தபோதும் கூட அவரை விட்டு அவரது ரசிகர்கள் அகலாமல் இருந்ததை கண்டு பல நடிகர்கள் குறிப்பிட்டு பேசியுள்ளனர். முதலில் விஜய டி ராஜேந்தரின் மகனாக அவர் திரைதுறையில் அறிமுகமாகி இருந்தாலும் அந்த அடையாளம் அவருக்கு கொஞ்ச காலத்திற்குதான் உதவியது.அதனையெல்லாம் தாண்டி, இன்று தந்தையை மீறி செல்வாக்கு … Read more

`பூ' தொடங்கி `உயரே' வரை 'நடிப்பின் நாயகி' பார்வதியின் திரைப்பயணம்!|HBDParvathy

கேரளாவில் உள்ள கோழிகோட்டில் பிறந்த இவர், தனது திரைப்பயணத்தை தொலைக்காட்சியிலிருந்து தொடங்கியவர். மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக பணி செய்த பார்வதி 2006-ல் `Out of syllabus’ என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் 2008-ல் அசரவைக்கும் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ‘பூ’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன் பின் மரியான், உத்தமவில்லன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். பிரத்திவ் ராஜுடன் இவர் நடித்த ‘என்னு நிண்டே மொய்தீன்’ படத்தின் … Read more

இரண்டு ஓடிடி தளங்களில் வெளியானது சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது. ‘ஜெய் பீம்’ வெற்றிக்குப்பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ கடந்த மார்ச் 10 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இமான் இசையமைத்திருக்கிறார். சத்யராஜ், வினய், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப்பிறகு தியேட்டரில் வெளியான சூர்யா படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு இருந்தது. அதனை நிறைவேற்றும் விதமாகவே சூர்யா … Read more

விஷ்ணு விஷால் படத்தில் நடிக்கும் மலையாள நடிகை

விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான எப்ஐஆர் திரைப்படம் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படத்திற்கு பிறகு கட்டா குஸ்தி என்ற படத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்த படத்தை விஷ்ணு விஷால் உடன் இணைந்து தெலுங்கு நடிகர் ரவி தேஜா தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார் . இதற்கு முன்பு ஐஸ்வர்யா லட்சுமி விஷாலின் ஆக்ஷன், தனுஷின் ஜகமே தந்திரம் போன்ற … Read more

'அந்த' சம்பவம் பண்ண அதே தேதியில் ஸ்டாலினை சந்தித்த விஜய்

பிரபல தயாரிப்பாளரான கல்பாத்தி எஸ். அகோரத்தின் மகள் ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும், தளபதி விஜய்யும் சந்தித்து பேசிக் கொண்டார்கள். கையெடுத்து கும்பிட்டபடியே இருவரும் நடந்து வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் இரண்டு தளபதியும் சந்தித்த தேதியின் முக்கியத்துவம் பற்றி பேச்சு கிளம்பியிருக்கிறது. 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் சென்றார் விஜய் . வீட்டில் வரிசையாக … Read more

விஜய்யுடன் நடிக்கும் சரத்குமார்

விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு பட இயக்குனர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் . விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்வில் நடிகர் சரத்குமாரும் பங்கேற்றார். இதை வைத்து பார்க்கும்போது விஜய்யுடன் … Read more

புதிய படத்தின் அப்டேட் கொடுத்த லிஜோ மோல் ஜோஸ் மற்றும் லாஸ்லியா ….!

லிஜோ மோல் ஜோஸ் மற்றும் லாஸ்லியா நடிப்பில் உருவாகும் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. நடிகை லிஜோ மோல் ஜோஸ் மற்றும் பிக் பாஸ் புகழ் லாஸ்லியா இருவரின் நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. படத்திற்கு ‘ அன்னபூர்ணி ‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தை லயனல் ஜோஷ்வா இயக்குகிறார். நடிகை லிஜோ ஜோஸ் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஜெய் பீம் … Read more

வெப் தொடரை இயக்கும் கிருத்திகா உதயநிதி

வெப் தொடரை இயக்கும் கிருத்திகா உதயநிதி 4/7/2022 11:33:45 AM வணக்கம் சென்னை, காளி படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி தற்போது பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடரை இயக்குகிறார். இந்த தொடரில் காளிதாஸ் ஜெயராமன், தன்யா ரவிச்சந்திரன், கௌரி கிஷன், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், தரண்குமார் இசை அமைத்துள்ளார். ஜீ5 ஒடிடி தளத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது. Tags: Web Series Krithika Udayanithi