Paris Olympics 2024 Live Updates : இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்; சாதித்த ஸ்வப்னில்! – Day 6 Updates

 பி வி சிந்து அதிர்ச்சி தோல்வி! பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் ரவுண்டு ஆப் 16 சுற்றில் சீனாவின் ஹீ பிங்ஜியாவ்விடம் 21-19, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார் பி வி சிந்து. லக்ஷயா சென் வெற்றி! பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்திய வீரர்களான பிரணாயும் லக்ஷா சென்னுமே நேருக்கு நேராக மோதியிருந்தனர். இதில் லக்ஷயா சென் 21-12, 21-6 என நேர் செட் கணக்கில் எளிதில் … Read more

நீட் தேர்வில் 705 மதிப்பெண் பெற்ற குஜராத் மாணவி 12 ஆம் வகுப்பில் ஃபெயில்

அகமதாபாத் நீட் தேர்வில் 705 மதிப்பெண் பெற்ற குஜராத் மாணவி ஒருவர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாததால் மருத்துவக் கல்லூரியில் சேர முடிய்வில்லை சமீபத்தில் மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த வீடியோவில், ‘எனக்கு தெரிந்த குஜராத் மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு இயற்பியல் தேர்வில் ஒரு மதிப்பெண்தான் பெற்றார். அகமதிப்பீட்டில் (இன்டர்னல்) பெற்ற 20 மதிப்பெண்களையும் சேர்த்து 21 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தார். ஆனால், இப்போது நீட் … Read more

'வயநாடு மக்களுக்கு உதவ நான் கடமைப்பட்டுள்ளேன்' – ராகுல்காந்தி

வயநாடு, வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மக்களைவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி பார்வையிட்டார். பின்னர், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ராகுல்காந்தி ஆறுதல் கூறினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது; “என் தந்தையை இழந்தபோது எவ்வளவு துக்கமடைந்தேனோ அதே துக்கத்தில்தான் இப்போது இருக்கிறேன். இந்த துயரமான நேரத்தில் மக்களுடன் இருப்பது மிகவும் அவசியம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வந்து சேருவதை உறுதி செய்ய வேண்டும். வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை. … Read more

Wayanad: 190 அடி நீளம், 24 டன் எடையில் ஆற்றின் குறுக்கே பாலம்; உலகப்போர் யுக்தியைக் கையாண்ட ராணுவம்!

நாட்டையே சோகத்தில் மூழ்கடித்திருக்கும் வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு, மூன்று நாள்கள் ஆகிறது. மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 நெருங்கி, அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், அரசு பணியாளர்கள், தன்னார்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தாலும், நிலச்சரிவில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளான முண்டகை பகுதியை அணுக முடியாத நிலையே நீடித்து வந்தது. காரணம், … Read more

“எனது தந்தை இறந்தபோது ஏற்பட்ட வலியை இப்போது உணர்கிறேன்” : வயநாடு நிலச்சரிவு பகுதியை பார்வையிட்ட ராகுல் காந்தி உருக்கம்

வயநாட்டில் நடந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் இது தேசிய பேரிடர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். “வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை..” என்றும் அவர் தெரிவித்துள்ளார். வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்ட ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். “எனது தந்தை இறந்தபோது இருந்த அதே வலியை இப்போது உணர்கிறேன் இங்குள்ள மக்கள் பலர் தங்கள் முழு குடும்பத்தையும் இழந்துள்ளனர், … Read more

லெபனானில் இருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி, ஹமாஸ் குழுவிற்கு ஆதரவு தெரிவிக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா குழுவிற்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் லெபனானில் இருந்து வெளியேற முடியாத இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய அரசு மற்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் லெபனானில் உள்ள இந்தியர்கள் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி … Read more

Wayanad Lanslide: `எனது தந்தை இறந்தபோது உணர்ந்ததை இன்று உணர்கிறேன்!' – வயநாட்டில் ராகுல் காந்தி

வயநாடு நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியிருக்கிறது. நிலச்சரிவில் காணாமல் போன கிராமங்கள், தரைமட்டமாக அடித்துச்செல்லப்பட்ட வீடுகள், கட்டடங்கள், பாலங்கள், வாகனங்கள் மற்றும் மண்ணில் புதையுண்ட மனித உடல்கள் ஆகியவற்றின் காட்சிகள் நிலச்சரிவின் தாக்கத்தை உணர்த்துகின்றன. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 300-ஐ நெருங்கிவிட்டது. Wayanad Landslide | வயநாடு நிலச்சரிவு ஆயிரக்கணக்கானோர் அனைத்தையும் இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்திருக்கின்றனர். முடிந்த அளவுக்கு மீட்புக் குழுவினரும் உயிரைக் கொடுத்துப் போராடிவருகின்றனர். சாமானியன் முதல் பிரபலங்கள் வரையில் பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிவருகின்றனர். தமிழ்நாடு … Read more

16 மணி நேரத்தில் 190 அடி நீள பாலத்தை கட்டிமுடித்த இந்திய ராணுவம்… சூரல்மலையில் இருந்து முண்டகைக்கு விரையும் மீட்பு குழு…

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள முண்டகை பகுதிக்கு செல்ல சூரல்மலையில் இருந்து 190 அடி நீள பாலத்தை இந்திய ராணுவம் கட்டிமுடித்துள்ளது. ராணுவ வழக்கப்படி கர்நாடகா & கேரளா துணைப் பகுதி தளபதி தனது ராணுவ வாகனத்தில் அந்தப் பாலத்தின் மீது சென்று அதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். எஃகு கர்டர்கள் மற்றும் பேனல்களைக் கொண்டு சிறப்பு கருவிகளின் தேவையில்லாமல் இணைக்கப்படும் பெய்லி பாலம் பேரிடர் காலங்களில் ராணுவத்தால் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்படும். 24 டன் … Read more

மாநில உரிமைகளை பறிக்கிறது மத்திய அரசு: கனிமொழி காட்டம்

புதுடெல்லி, மக்களவையில் தி.மு.க. எம்.பி., கனிமொழி பேசியதாவது: அறிவும் மானமும் மனிதருக்கு அழகு என்றார் தந்தை பெரியார். அறிவு என்பது கல்வியின் வழியாக பெறுவது. கல்வியின் வழியாக மானம், சுயமரியாதையை மக்கள் உணர்ந்து கொள்வர். இது நடந்தும்விடக் கூடாது. ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள் என்றும் ஒடுக்கப்பட்டவர்களாக ,ஒதுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதால் எங்களுக்கு வழிவழியாக கல்வி மறுக்கப்பட்டு வருகிறது. அந்த வழியில்தான்- மறுக்கப்பட்ட நியாயங்களுக்கு போராடக் கூடிய சிலர் இன்று ஆட்சி நடத்தும் நிலையில் இருக்கிறோம். பாஜகவின் … Read more

இரண்டாவது திருமணத்தை மறைத்த தீயணைப்பு அலுவலர்; முதல் மனைவி கொடுத்த புகாரால் பணியிலிருந்து நீக்கம்!

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலராக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தவர் வே.பிரபாகரன் (52). இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவதாக ஒரு பெண்ணை பிரபாகரன் திருமணம் செய்துள்ளார். அதன் மூலம் அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். தனது கணவர் பிரபாகரன் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட விவகாரம் முதல் மனைவிக்கு தெரியவர, இது தொடர்பாக அவர் தீயணைப்புத்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இப்புகார் மீது … Read more