புதினுடன் நெருக்கம்.. உளவு பார்ப்பதில் கில்லாடி! திடீரென மர்மமாக உயிரிழந்த ரஷ்ய கோடீஸ்வரர்! கொலையா?

International oi-Vigneshkumar மாஸ்கோ: ரஷ்யாவில் பொதுமக்களை உளவு பார்க்கும் முறையை செட்அப் செய்து கொடுத்த டாப் பணக்காரர்களில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த மிக மோசமான சம்பவம் நடந்துள்ளது. ரஷ்யா ஒரு பக்கம் உக்ரைன் மீது போரைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. கடந்தாண்டு பிப். மாதம் தொடங்கிப் போர் 1.5 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது. உக்ரைனை வெல்ல முடியாமல் போனதே புதினுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோக ரஷ்யாவில் நடக்கும் சம்பவங்களும் அவருக்கு நெருக்கடியாக மாறி … Read more

இரவில் காதலனைச் சந்திக்க ஊருக்கே மின்சாரத்தைத் துண்டித்த பெண்; `இன்ப' அதிர்ச்சி கொடுத்த ஊர்மக்கள்!

பீகாரில், இளம்பெண் ஒருவர் இரவில் தன்னுடைய காதலனைச் சந்திப்பதற்காகத் தினமும் தன் ஊரில் மின்சாரத்தை துண்டித்துவந்த சம்பவமானது, ஊர்மக்கள் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்ததையடுத்து தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மேலும், இந்தச் சம்பவத்தில் ஊர்மக்கள் செய்த மற்றொரு செயல், அந்தக் காதல் ஜோடிக்கே திடீர் சர்ப்ரைஸை ஏற்படுத்தியிருக்கிறது. மின்வெட்டு பீகாரின், மேற்கு சம்பாரனிலுள்ள ஒரு கிராமத்தில் ப்ரீத்தி குமாரி என்பவர், பக்கத்துக் கிராமத்து இளைஞரான ராஜ்குமாரைக் காதலித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் ப்ரீத்தி குமாரி, இரவில் தன்னுடைய … Read more

ஜூலை 24: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5 ஆயிரத்து 545 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 80 ரூபாய் 50 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

\"மகள் உயிரோட வேண்டுமா! பிணமா வேண்டுமா..\" போனில் தாய்க்கு அதிர்ச்சி! மணிப்பூரில் மற்றொரு பயங்கரம்

India oi-Vigneshkumar இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் தனது மகள் நலமாக இருக்கிறாரா என அறிந்து கொள்ள போன் செய்த தாய்க்கு பேரதிர்ச்சி கிடைத்துள்ளது. அதில் இருந்து அவரால் இன்னுமே மீண்டு வர முடியவில்லை. மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு மேலாக இனமோதல் நடந்து வருகிறது. இதில் அங்குப் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை குறித்த தகவல்கள் உறைய வைப்பதாக இருக்கிறது. அப்படி அங்கே நடந்த ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் குறித்த தகவல்கள் தான் இப்போது வெளியாகியுள்ளது. … Read more

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் தேரோட்டம்: கோவிந்தா; கோபாலா முழக்கத்துடன் கோலாகலம்!

108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், 12 ஆழ்வார்களில் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த புண்ணியத் தலமாகவும் அறியப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில். ஸ்ரீஆண்டாள் மனிதப்பிறவியெடுத்து இறைவனுக்குப் பாமாலை பாடி, பின் பூமாலை சூட்டிய தலம் என்றும் பெரியாழ்வார் பாடிய கோயில், பெரிய பெருமாள் எனும் சிறப்புப்பெயர் உள்பட பல்வேறு பெருமைகளைக் கொண்டது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில். இத்தகைய பிரசித்திப் பெற்ற ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆண்டாள் அவதரித்த தினமான பூரம் நட்சத்திர நாளையொட்டி தேரோட்டத் … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான விபத்து உதவித் தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!

சென்னை: தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.1 லட்சமாக இருந்த நிலையில், அதை  ரூ.2லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் பல நிவாரண தொகைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. திமுக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்த 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மாற்றுத்திறநாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தது.  உலக வங்கியின் நிதியுதவியுடன் 1763 கோடி மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரைட்ஸ் திட்டம் எனப்படும் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும்,  மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்து அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதே இதன் நோக்கம் … Read more

உ.பி. ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வுக்கு ஜூலை 26 வரை உச்சநீதிமன்றம் அதிரடி தடை!

India oi-Mathivanan Maran வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை வல்லுநர்கள் ஜூலை 26-ந் தேதி வரை அகழாய்வு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தடை விதித்தது. உ.பி. வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பகுதியிலேயே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. காசி விஸ்வநாதர் ஆலயத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுதான் மசூதி கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. வாரணாசி கோர்ட் உத்தரவு: இதில் ஒன்று … Read more

2023 கியா செல்டோஸ் காரின் ஆன்-ரோடு விலை விபரம் – Kia Seltos On-Road Price

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற எஸ்யூவி மாடலான 2023 செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியல் மற்றும் என்ஜின் விபரம் மற்றும் முக்கிய சிறப்புகளை அறிந்து கொள்ளலாம். செல்டோஸ் காருக்கு இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், வரவிருக்கும் ஹோண்டா எலிவேட், மற்றும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஆகியவற்றை செல்டோஸ் எதிர்கொள்ளுகின்றது. 2023 Kia Seltos On-Road Price in Tamil … Read more

வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை – விவசாயிகள் கண்காட்சி: திருச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் 2 நாள் முகாம்!

சென்னை: 15 மாவட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை  மற்றும் விவசாயிகள் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் 2 நாள் முகாமிடுகிறார். ஜூலை 25ந்தேதி திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.  26-ந் தேதி  விவசாயிகள் கண்காட்சி உள்பட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார் மேலும், ரூ.140 கோடி மதிப்பில் நிறை வேற்றப்பட்ட 14 திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் இப்போதே தங்களது … Read more