'அந்த மாணவரின் சிலை பற்றி அறிந்தபோது…’ – பாளையங்கோட்டை பாரம்பர்ய நடைபயணத்தில் கல்லூரி மாணவிகள்!

நெல்லை மாவட்டம், நாட்டின் விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட இடம் என்பதால் இங்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அதிகம் உள்ளன. அவற்றை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், பாடநூல்களில் மட்டும் படித்து அறிவதைவிடவும் நேரில் சென்று அறிவது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்பதால் அவர்களுக்குப் பாரம்பர்ய நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. லூர்துநாதன் சிலை குறித்த விளக்கம் வரலாற்றுச் சின்னங்களையும், சிறப்பு வாய்ந்த இடங்களையும் அறிந்து கொள்ளும் வகையில், நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மற்றும் பாளையங்கோட்டை … Read more

முன்னாள் அதிமுக அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான வழக்கு ரத்து! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை:  கொரோனா காலத்தில், திமுக அரசின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று காரணமாக இறந்தவர்கள் குறித்து விவரங்களை திமுக அரசு முறையாக வெளியிடவில்லை என்று குற்றம் சாட்டி, கடந்த 2021ம் ஆண்டு அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.   தர்மபுரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் கொரோனா தொற்று வழிகாட்டு … Read more

தூரத்தில் உள்ள குட்டி நாடு ஆர்மீனியா! சீக்ரெட்டாக ஆயுதங்களை அனுப்பும் இந்தியா? பின்னணியில் பாக்.?

International oi-Vigneshkumar ஆர்மீனியா: மத்திய கிழக்கு பகுதிக்கு அருகே அமைந்துள்ள குட்டி நாடான ஆர்மீனியாவுக்கு இந்தியாவில் இருந்து ஆயுதங்கள் அனுப்பப்பட்ட விவகாரம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். மேற்கு ஆசியாவில் மத்திய கிழக்கு பகுதிக்கு அருகே அமைந்துள்ள நாடுகள் ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான். அருகருகே அமைந்துள்ள இந்த இரு நாடுகளுக்கும் இடையே கடந்த சில காலமாக மோதல் தொடர்ந்து வருகிறது. நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தை யார் கட்டுப்படுத்துவது என்ற விவகாரத்தில் இரு தரப்பிற்கும் இடையே கடுமையான … Read more

`இப்படி தயாரானால் போட்டித் தேர்வில் நிச்சயம் வெற்றி!’ – மாணவர்களுக்கு வெ. இறையன்பு சொன்ன அறிவுரை!

“இந்திய ஆட்சிப்பணி போட்டித் தேர்வுக்குத் தயாராகும்போது, தினமும் குறைந்தது 17 மணி நேரம் ஒதுக்க வேண்டும். பாடத்திட்டங்களை தாண்டி அனைத்து மேற்கோள் புத்தகங்களையும் வாங்கிப் படிக்க வேண்டும்” என்று ஓய்வுபெற்ற முன்னாள் அரசு தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மாணவர்களிடம் உரையாற்றினார். நூலகத்தை பார்வையிடும் வெ.இறையன்பு மாதவிடாய் நாள்களில் தனி வீடு; வைரலான வீடியோ, மன்னிப்புக் கேட்ட யூடியூபர்… ஊரில் நடப்பது என்ன? கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், `படிப்பது … Read more

சீனா பாகிஸ்தானுக்கு ரூ.19600 கோடி கடன் உதவி

இஸ்லாமாபாத் சீனா பாகிஸ்தானுக்கு 2.4 பில்லியன் அமெரிக்க டாலரை கடனாக வழங்கி உள்ளது கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் க தத்தளித்து வருகிறது. பாகிஸ்தானின் அன்னிய செலாவணி கையிருப்பு முழுவதுமாக தீரும் நிலையில் உள்ளது. எனவே பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனா, அந்த நாட்டுக்கு 2.4 பில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.19 ஆயிரத்து 600 கோடி) கடனாக வழங்கியுள்ளது. இந்த கடனை அடுத்த 2 நிதியாண்டுகளில் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையில் … Read more

விளைநிலங்கள் அழிப்பு.. கொந்தளிக்கும் பாமக.. அன்புமணி தலைமையில் நெய்வேலி என்எல்சி முற்றுகை போராட்டம்

Tamilnadu oi-Jeyalakshmi C நெய்வேலி: என்எல்சி நிறுவனத்திற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை உடனடியாக தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று நெய்வேலியில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக கத்தாழை ,கரிவெட்டி மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களை என்எல்சி நிர்வாகம் விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தி இழப்பீடு வழங்கியுள்ளது. … Read more

ED இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா பணி நீட்டிப்பு விவகாரம்; மத்திய அரசு ‘அடம்பிடிப்பது’ ஏன்?!

எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்கு அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு பா.ஜ.க அரசுக்கு எதிராக முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, கடந்த நான்கைந்து ஆண்டுகளாக இந்தக் குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப்படுகிறது. உச்ச நீதிமன்றம் இந்த நிலையில், அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியது சட்டவிரோதம் என்றும், அவர் பதவி விலக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. அதன் பிறகும், அவருக்கு பதவிநீட்டிப்பு வழங்க அனுமதிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கேட்கிறது. உத்தரப்பிரதேசத்தைச் … Read more

பலத்த காற்று மழை : நீலகிரியில் வீடுகள் மற்றும் சாலைகள் கடும் சேதம்

ஊட்டி நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால்  பல வீடுகள் மற்றும் சாலைகள் கடும் சேதம் அடைந்துள்ளன. கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் கனத்த மழை பெய்து வருகிறது. ஊட்டி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பலத்த மழை பெய்வதால் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. அணைகள் மற்றும் நீர் நிலைகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்து வனப்பகுதி முழுவதும் பசுமைக்குத் திரும்பியுள்ளது. நேற்று முன்தினம் வரை தொடர்ச்சியாக பெய்த மழை நேற்று … Read more

கேரளா போலீஸ் ஸ்டேசனில் கோழிக்கறி சமையல்.. ரசித்து ருசித்து ஊட்டி விட்ட காவலர்கள்.. ஐஜி நோட்டீஸ்

India oi-Jeyalakshmi C பத்தனம் திட்டா: கேரளாவில் இலவம்திட்டா போலீசார் பத்தனம்திட்டாவில் காவல் நிலையத்திற்குள் கோழிக்கறி கிரேவி சமைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டதை அடுத்து, காவல்துறை கண்காணிப்பாளர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். காவல் நிலையம் என்றாலே அங்கே குற்றவாளிகளை அடித்து உதைப்பது, காவலர்கள் கொடூரமாக தாக்குவது, சத்தம் போடுவது போன்ற விசயங்களைத்தான் சினிமாவிலும் நேரிலும் பார்த்திருப்பதார்கள். ஆனால் காக்கி யூனிபார்ம் போட்ட உடம்புக்குள் அருமையான நளபாக சக்கரவர்த்திகள் ஒளிந்திருப்பார்கள் என்று யாருக்கும் தெரிந்திருக்காது. … Read more