சிவகங்கை : விளையாடுவதில் ஏற்பட்ட பிரச்னை; பிளஸ் டூ மாணவர் வெட்டிக்கொலை – போலீஸ் விசாரணை!

பள்ளி விட்டு வரும்போது பிளஸ் டூ மாணவர் ஆயுதங்களால் கொடூரமாக தாக்கப்பட்டு, மரணமடைந்த சம்பவம் சிவகங்கை வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர் திருமுருகன் நேற்று மாலை பள்ளியிலிருந்து சைக்கிளில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது, மறக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சாத்தரசன் கோட்டையைச் சேர்ந்த சிலர் திருமுருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திருமுருகனை ஆயுதங்களால் தாக்கியிருக்கின்றனர். இதில் படுகாயமடைந்த திருமுருகனை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். கொலை உயிருக்கு … Read more

ஜூலை 27: ஏவுகணை நாயகன் அப்துல் கலாமின் 8வது நினைவு தினம் இன்று…

ஏவுகனை நாயகன் APJ அப்துல் கலாமின் 8வது  நினைவு தினம் இன்று (ஜூலை 27)  நாடு முழுவதும்  அனுசரிக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் மரியாதை செய்து வருகின்றனர். இந்தியாவின் ஏவுகணை நாயகன் என அழைக்கப்படும் அப்துல் கலாம் என்ற ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) 1931ம் ஆண்டு அக்டோபர் 15ந்தேதி அன்று ராமேஸ்வரத்தில் ஏழை வீட்டில் பிறந்தார். தனது 10 வயதிலேயே குடும்பத்தை ஆதரிப்பதற்காக  செய்தித்தாள்களை … Read more

திமுகவினர் வயிற்றில் பால் வார்த்த ஸ்டாலின்! அமைச்சர்கள் -மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கியக் கட்டளை!

Tamilnadu oi-Arsath Kan திருச்சி: வாக்குச் சாவடிப் பொறுப்பாளர்கள் கொண்டு வரும் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என திமுக மாவட்டச் செயலாளர்களுக்கும், அமைச்சர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கட்டளை பிறப்பித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அமைச்சர்களின் அலுவலகங்களில் நாம் வைக்கும் எந்தக் கோரிக்கையும் நிறைவேறவில்லையே என்ற மனப்புழுக்கத்தில் இருந்து வந்த கட்சிக்காரர்கள், ஸ்டாலின் போட்டுள்ள உத்தரவால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்சியில் நேற்றைய தினம் நடைபெற்ற வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் … Read more

Kanguva: `ஒருநூறு புலிநகமும் மாரறைய' `கங்குவா' முழுப் பாடல் வரிகள் இவைதான்!

நடிகர் சூர்யாவின் 42 ஆவது திரைப்படமான ‘கங்குவா’ படத்தின் GLIMPSE வீடியோ இரண்டு நாட்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி மூன்று கோடி பார்வையாளர்களைக் கடந்து வைரலாகி வருகிறது. இப்படம் சூர்யாவின் மற்ற படங்களைவிட அதிக பட்ஜெட்டில் 3டி தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக பத்து மொழிகளில் தயாராகி வருகிறது. இதன் பீரியட் போர்ஷன் காட்சிகள் முழுவதையும் கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப் பகுதியில் எடுத்து வருகின்றனர். சூர்யாவின் வித்தியாசமானத் தோற்றத்திற்கான மேக்கப் போடுவதற்கு மட்டுமே தினமும் இரண்டரை மணி நேரம் எடுக்கும் … Read more

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் இருக்காது! திருச்சி திமுக பயிற்சி பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…

திருச்சி: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் என்பதே இருக்காது என திருச்சி திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். மத்திய பாஜகஅரசுக்கும், திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் காரணமாக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி கூட்டணிகளுடன் இணைந்து, அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில்,  திருச்சியில்  திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டம்  நடைபெற்றது. இதில் 15 மாவட்டங்களைச் … Read more

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை.. ஒரே நாளில் கிடுகிடுவென 30 ரூபாய் அதிகரிப்பு.. என்ன காரணம்?

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை: கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று கிலோ ரூ.110க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 30 ரூபாய் அதிரடியாக உயர்ந்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினசரி பெட்ரோல், டீசல், தங்கம், வெள்ளி விலையை கவனித்து வந்த பொதுமக்கள் தற்போது தினமும் தக்காளி, வெங்காயம் விலையை அச்சத்தோடு பார்த்து வருகின்றனர். தக்காளி விலை 140 வரை உயர்ந்த நிலையில், படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில், … Read more

A case has been registered against 307 people who chanted separatist slogans in the rally | பேரணியில் பிரிவினை கோஷம் 307 பேர் மீது வழக்கு பதிவு

காசர்கோடு, மணிப்பூர் கலவரத்தை கண்டித்து, கேரளாவின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞர் அணி நடத்திய பேரணியில், மதக் கலவரத்தை துாண்டும் விதமாக கோஷமிட்ட 300க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தை கண்டித்து, காசர்கோடு மாவட்டத்தின் கன்னங்காடு என்ற இடத்தில், இந்திய யூனியன் … Read more

TVS XL Electric – டிவிஎஸ் எக்ஸ்எல் எலக்ட்ரிக் மொபட் அறிமுகம் எப்பொழுது

TVS-XL-100 டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற XL மொபட் அடிப்படையில் XL எலக்ட்ரிக் மாடலை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்திய முழுவதும் நல்ல வரவேற்பினை பெற்ற எக்ஸ்எல் எலக்ட்ரிக் மாடலாக வரும் பொழுது பல வாடிக்கையாளர்களை கூடுதலாக கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் கைனடிக் நிறுவனம் லூனா மாடலை எலக்ட்ரிக் ஆக வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், எக்ஸ்எல் மாடலும் இணைந்துள்ளது. குறிப்பாக பல்வேறு எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் எக்எஸ்எல் போன்ற வடிவமைப்பினை பெற்ற எலக்ட்ரிக் … Read more

Exclusive: `3 வருஷம், 20 தேர்வுகள் எழுதினேன்' – `சொமேட்டோ டு அரசுப்ணி' குறித்து பகிரும் விக்னேஷ்

கடந்த இரண்டு நாட்களாக சோசியல் மீடியா எங்கும், சொமேட்டோவில் வேலை செய்து, அரசு வேலை கிடைத்த விக்னேஷ் பற்றிய செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மும்பையில் போஸ்டிங் கிடைத்து, அங்கு வேலை செய்துகொண்டிருக்கும் விக்னேஷைத் தொடர்பு கொண்டு பேசினோம்.  Zomato Dellivery Vignesh ”எனக்கு மார்ச் மாசத்துலயே வேலை கிடைச்சு இங்க மும்பைக்கு வந்துட்டேன். என் சொந்த ஊர் தர்மபுரி. ப்ளஸ் டு -ல நல்ல மார்க் வாங்கினதால, சென்னையில பொறியியல் படிக்கும் வாய்ப்பு கிடைச்சது. மூன்றாமாண்டு … Read more

இன்று நாடாளுமன்றத்தில் கருப்பு உடையில் பங்கேற்கும் எதிர்க்கட்சிகள்

டில்லி இன்று எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் கருப்பு உடையில் பங்கேற்கின்றனர்.. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இன்று இந்த பிரச்சினையில் விவாதத்தை அனுமதிக்காதது, நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதத்தைத் தொடங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு உடை அணிந்து கூட்டத்தொடரில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள், தங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது குறித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். … Read more