The man who stole 12 pounds of jewelry was arrested | 12 பவுன் நகை திருடியவர் கைது

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, சேட்லைன் பகுதியை சேர்ந்தவர் பூங்கொடி,31. இவர் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 12 பவுன் நகை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பூங்கொடி அளித்த புகாரின் பேரில், கோத்தகிரி போலீசார் வழக்குபதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த முத்துவேல்,41 என்பவர், நகையை திருடியது தெரியவந்தது. கோத்தகிரி போலீசார் நேற்று முத்துவேலை கைது … Read more

2024 Mahindra XUV300 Spied – மஹிந்திரா எக்ஸ்யூவி 300 சோதனை ஓட்ட படங்கள் வெளியானது

மஹிந்திரா நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவி மாடலான XUV300 மேம்பட்ட வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு அடுத்த ஆண்டின் மத்தியில் எதிர்பாரக்கலாம். எக்ஸ்யூவி 300 காரில் பனோரோமிக் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகளுடன் போட்டியாளர்களில் இல்லாத பல்வேறு வசதிகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. தற்பொழுது எக்ஸ்யூவி 300 மாடலில் உள்ள என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல்,  110hp பவர் மற்றும் 131hp என இருவிதமான பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல்,  117hp பவர், வெளிப்படுத்தும் … Read more

`பாஜக ஆட்சியில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இவை…'- தரவுகளுடன் பட்டியலிட்ட அசோக் கெலாட்

மணிப்பூரில் அரங்கேற்றப்படும் கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கிய நிலையில், இப்போதுவரை மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை. இது தொடர்பாக கேள்வி எழுப்பும் போதெல்லாம் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க-வினர், `ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் பேசப்பட வேண்டும்’ எனக் கூறிவருகின்றன. அசோக் கெலாட் இந்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் … Read more

மத்திய அரசுக்கு ரூ.155.6 லட்சம் கோடி கடன்! நாடாளுமன்றத்தில் மத்திய இணைஅமைச்சர் தகவல்…

டெல்லி: மத்திய அரசுக்கு ரூ.155.6 லட்சம் கோடி கடன் உள்ளதாக  நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளது. நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் கூறிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி.  “மார்ச் 31, 2023 நிலவரப்படி, மத்திய அரசின் கடன்  ரூ.155.6 லட்சம் கோடியாக இருந்தது. இது 2021 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 61.5 சதவீதத்தில் இருந்து 23ஆம் நிதியாண்டில் ஜிடிபியில் 57.1 சதவீதமாகக் குறைந்துள்ளது” என்று  தெரிவித்துள்ளார். மொத்த … Read more

மும்பை அருகே பாலம் கட்டும் பணியின்போது ராட்சத கிரேன் சரிந்து 20 பேர் பலி

மும்பை- நாக்பூர் இடையே 701 கி.மீ. தூரத்துக்கு சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே பெயரில் விரைவு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. 3-வது கட்ட பணி இந்த பிரமாண்ட சாலை திட்டத்தின் 2 கட்ட பணிகள் முடிந்துள்ளது. நாக்பூர்- ஷீரடி இடையே 520 கி.மீ. தூரத்துக்கு முதல் கட்டமாக அமைக்கப்பட்ட சாலையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 2-ம் கட்ட பணிகள் முடிந்து கடந்த மே மாதம் ஷீரடி முதல் இகத்புரி … Read more

Harley-Davidson X440 Price hiked – ரூ.10,500 வரை ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கின் விலை உயர்ந்தது

ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் X440 பைக்கின் விலை ரூ.10,500 உயர்த்தப்பட்டு தற்பொழுது ஆரம்ப விலை ரூ.2,39,500 முதல் துவங்கி ரூ.2,79,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. முன்பாக ரூ.2.29 லட்சம் முதல் ரூ.2.69 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை மட்டுமே ஆன்லைன் புக்கிங் நடைபெற உள்ள நிலையில், ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் முன்பதிவு நிறுத்தப்பட உள்ளது. இந்நிலையில் எக்ஸ்440 விலை உயர்வு ஆகஸ்ட் 4 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. Harley-Davidson … Read more

“திமுக பினாமிபோல்… மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" – ஓ.பி.எஸ்ஸை சாடிய ஆர்.பி.உதயகுமார்

மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி அதிமுக மாநில மாநாட்டுப் பணிகள் தீவிரமாகியிள்ள நிலையில், ஓ.பன்னீர்ச்செல்வமும், டி.டி.வி தினகரனும் இணைந்து கொடநாடு கொலை-கொள்ளை சம்பவத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆர்.பி.உதயகுமார் இது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள். இது குறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஓ.பன்னீர்செலவத்துக்கு எதிராக கடுமையாக பேசி வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள … Read more

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழகஅரசு, மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தை செப்டம்பர் 15ந்தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது  திமுக அளித்த தேர்தல்  வாக்குறுதிப்படி, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் அமலுக்கு வரு உள்ளது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில்,  இந்த திட்டம் , அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15ந்தேதி தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, இந்த  திட்டத்தை செயல்படுத்தும் முறை, பயனாளிகள் … Read more

அரியானாவில் வன்முறை: பதற்றம் நீடிப்பு – ஊரடங்கு அமல்

குருகிராம், அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின் ஊர்வலத்தில் சிலர் கல் வீசித் தாக்கினர். அதைத்தொடர்ந்து இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல், பயங்கர வன்முறையாக மாறியது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதுடன், கும்பல் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 2 ஊர்க்காவல் படை வீரர்கள் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். ஏராளமான போலீசார் காயமடைந்தனர். நூ மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்ததால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணைய சேவை முடக்கப்பட்டது. பலி எண்ணிக்கை உயர்வு … Read more