அரியானாவில் வன்முறை: பதற்றம் நீடிப்பு – ஊரடங்கு அமல்
குருகிராம், அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின் ஊர்வலத்தில் சிலர் கல் வீசித் தாக்கினர். அதைத்தொடர்ந்து இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல், பயங்கர வன்முறையாக மாறியது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதுடன், கும்பல் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 2 ஊர்க்காவல் படை வீரர்கள் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். ஏராளமான போலீசார் காயமடைந்தனர். நூ மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்ததால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணைய சேவை முடக்கப்பட்டது. பலி எண்ணிக்கை உயர்வு … Read more