தலைப்பு செய்திகள்
`இடிந்து விழும் ஆபத்தில் பிரிட்டன் நாடாளுமன்றம்’… எச்சரிக்கும் உறுப்பினர்கள் குழு – பின்னணி என்ன?!
பிரிட்டனின் 147 வருட பாரம்பர்யமிக்க மற்றும் யுனெஸ்கோவின் உலக பாரம்பர்ய சின்னமாக அறிவிக்கப்பட்ட வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையே பிரிட்டன் அரசின் நாடாளுமன்றமாக இயங்கிவருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மறுசீரமைப்புப் பணிகளின் தாமதத்தினால், நாடாளுமன்றம் இடிந்துவிழும் ஆபத்திலிருப்பதாகப் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பிரிட்டன் நாடாளுமன்றம் இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “நாடாளுமன்றத்தை மறுசீரமைப்பதை நீண்ட காலமாக தள்ளிப்போட்டுவருவதால் அதிகரிக்கும் அபாயமானது, நாடாளுமன்றம் இடிந்துவிழுமளவுக்கு அழிவை ஏற்படுத்தும். இதனை மேலும் மேலும் தாமதப்படுத்துவது மறுசீரமைப்புக்கான செலவை அதிகரிக்கச்செய்யும். … Read more
2026ல் விஜய்யின் அரசியல் பயணம்! சீமான் பரபரப்பு பேட்டி
சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய், இதுமட்டுமா கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்து வைத்துள்ளார். சமீபகாலமாக ரசிர்களின் எதிர்பார்ப்பே விஜய் அரசியலுக்குள் நுழைவாரா இல்லையா என்பது தான். 30 ஆண்டுகளாக கடின உழைப்புடன் தற்போதைய நிலையை எட்டியுள்ள விஜய், இந்த புகழை அரசியலுக்குள் நுழைய பயன்படுத்திக் கொள்வாரா என்ற கேள்வி பலரிடத்திலும் எழாமல் இல்லை. அவர் படங்களில் அரசியல் ரீதியான வசனங்களோ, பாடல் வரிகளோ இருந்தாலும் இந்த எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே செல்கிறது. … Read more
இன்று 10, 11ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை இன்று பத்து மற்றும் பதினோராம் வகுப்புத் தேர்வு முடிவுகல் வெளியாக உள்ளன. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 12,11, மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து முடிந்தது. இதில் +2 பொதுத் தேர்வை எழுதிய மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முடிவு கடந்த 8-ந்தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முடிவு தனித்தனியாக வேறொரு நாட்களில் வெளியிட அரசு தேர்வுத் துறை திட்டமிட்டு இருந்தது. இந்த 2 தேர்வு முடிவுகளையும் ஒரே நாளில் வெளியிட ஆலோசித்து … Read more
ஆரம்பம் அதிரடி.. \"ஜி7\".. குவாட் உள்ளிட்ட மாநாடுகளில் பங்கேற்க வெளிநாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி
International oi-Halley Karthik டோக்கியோ: ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் செல்கிறார். ஜப்பானை தொடர்ந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் மோடி செல்கிறார். சர்வதேச அளவில் கனடா, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ஜி7 எனும் கட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் வருடாந்திர மாநாடு இன்று (மே19) ஜப்பானில் தொடர்கிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு … Read more
Law Minister Rijiju transferred to another department | சட்ட அமைச்சர் ரிஜிஜு வேறு துறைக்கு மாற்றம்
புதுடில்லி, மத்திய அமைச்சரவையில் நேற்று அதிரடி மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இணை அமைச்சரான அர்ஜுன் ராம் மேக்வால் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதுவரை சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு, புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டார். நரேந்திர மோடி இரண்டாவது முறையாக, 2019 மே மாதம் பிரதமராக பதவியேற்றார். அவரது அமைச்சரவை, 2021 ஜூலையில் மாற்றப்பட்டது. சட்ட அமைச்சராக இருந்த, பா.ஜ., மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, இளைஞர் விவகாரத் … Read more
Tamil News Live Today: 6 நாள்கள்… 3 நாடுகள் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார் பிரதமர் மோடி!
6 நாள்கள்… 3 நாடுகள் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார் பிரதமர் மோடி! இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று தொடங்கி வரும் 24-ம் தேதி வரை 6 நாள்கள் ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் அழைப்பின் பெயரில் அந்நாட்டின் ஹிரோஷிமா நகரில் நடைபெறும் ஜி7 உச்ச மாநாட்டில் பிரதமர் … Read more
எலிசபெத் ராணியின் இறுதிச்சடங்குகளுக்கு செலவான மொத்த தொகை எவ்வளவு?
மறைந்த எலிசபெத் ராணியாரின் இறுதிச்சடங்குகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி என செலவிடப்பட்ட மொத்த தொகை தொடர்பில் அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. மொத்தம் 161.7 மில்லியன் பவுண்டுகள் கடந்த செப்டம்பர் மாதம் ராணியார் இரண்டாம் எலிசபெத் காலமானார். அவரது இறுதிச்சடங்குகளுக்காக மொத்தம் 161.7 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. @getty செப்டம்பர் 8ம் திகதி ராணியார் மறைவுக்கு பின்னர் 10 நாட்கள் துக்கமனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து செப்டம்பர் 19ம் திகதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஸ்கொட்லாந்தில் உள்ள … Read more
பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம்
டில்லி பிரதமர் மோடி இன்று முதல் 5 நாள் பயணமாக ஜப்பான், பப்புவா நியுகினியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் செய்கிறார் ஜி7 நாடுகள் என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆகும். உலகில் இருக்கும் சக்திவாய்ந்த குழுக்களில் இந்த குழுவும் ஒன்றாகும். இந்த வருட உச்சி மாநாடு ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமாவில் நடக்கிறது. இந்த ஜி7 குழுவில் உள்ள நாடுகள் இன்று உணவு நெருக்கடி, ஆற்றல் … Read more
ஐஐடி சென்னை – பர்மிங்காம் பல்கலை. இணைந்து Data Science, Artificial Intelligence முதுநிலை படிப்புகள்!
Tamilnadu oi-Mathivanan Maran சென்னை: இந்திய தொழில்நுட்பக் கழகமும் (ஐஐடி சென்னை), பர்மிங்காம் பல்கலைக்கழகமும் இணைந்து தரவு அறிவியல் (Data Science) மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence ) ஆகியவற்றில் புதிய முதுநிலைப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கின்றன. இப்படிப்புக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் இரு பல்கலைக்கழகங்களாலும் வழங்கப்படும் பட்டத்தைப் பெறுவதோடு, பர்மிங்காம் மற்றும் சென்னையில் படிக்கலாம். அவர்கள் ஆராய்ச்சித் திட்டத்தையும் மேற்கொள்வர். இதர சர்வதேச படிப்புகளுக்கான கட்டணத்தை விட இதற்கான கட்டணம் குறைவாகும். இப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான … Read more