சாத்தூர்: சட்டவிரோத வெடி தயாரிப்பு; பட்டாசுக்கடை வெடிவிபத்தில் ஒருவர் உடல் கருகி பலி!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சட்டவிரோத பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட வெடிவிபத்தில், பட்டாசுக்கடை முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, “விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வின்சென்ட் என்பவரின் மகன் வைரமுத்து (வயது 40). அதே கிராமத்தில் `ஸ்ரீ வேணி’ எனும் பெயரில் பட்டாசுக்கடை நடத்தி வருகிறார். இந்தப் பட்டாசுக்கடை அருகே, ஷெட் அமைத்து விதிகளை மீறி சட்டவிரோதமாக வைரமுத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு … Read more

தூக்கத்திலேயே பிரிந்த உயிர்… பிரபல நடிகையின் மரணம் குறித்து மகளின் உருக்கமான பேட்டி

பிரபல நடிகை விஜயலட்சுமி (70) உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை வரவழைத்துள்ளது. பிரபல நடிகை விஜயலட்சுமி உயிரிழந்தார் தமிழில் ‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை விஜயலட்சுமி. இதனையடுத்து, ரஜினி கமல் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையாக மக்கள் மத்தியில் வலம் வந்தார். மேலும், சின்னத்திரையில் இவர் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் … Read more

கங்குலிக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது. *கங்குலிக்கு வழங்கப்பட்ட ‘Y’ பிரிவு பாதுகாப்பு பதவிக்காலம் நேற்று முடிவடைந்த நிலையில் மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.

அன்று டி.ஆர்.பாலு.. இன்று டி.ஆர்.பி.ராஜா.. அத்தனை பேருக்கு மத்தியில் கண்ணீர்.. ஏன் என்னாச்சு?

Tamilnadu oi-Vishnupriya R திருவாரூர்: திருவாரூரில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசிய போது டிஆர்பி ராஜா கண்கலங்கி பேசிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியடைய செய்தது. உதயநிதியை போல் டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் திமுகவில் இணைவதற்கு முன்னர் சிறு பிள்ளைகளாக இருந்த போது கருணாநிதியை தாத்தா என்றே அழைத்து பழகினர். அந்த வகையில் கருணாநிதியின் புகைப்படம் வைக்கப்பட்ட இடத்திற்கு கீழ் எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா அமர்ந்த போது அந்த புகைப்படத்துடன் ஒரு … Read more

Flyer Caught Smoking Mid-Air On Ahmedabad-Bengaluru Akasa Air Flight | நடுவானில் விமானத்தில் புகைத்த பயணி: பெங்களூருவில் கைது

பெங்களூரு: ஆமதாபாத்தில் இருந்து கிளம்பிய விமானம் நடுவானில் பயணித்து கொண்டு இருந்த போது, புகைத்த பயணி, பெங்களூருவில் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து கிளம்பிய ஆகாஷா ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் பெங்களூரு நோக்கி நேற்று பயணித்து கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பயணம் செய்த போது, பயணி ஒருவர் விமானத்திலேயே புகைபிடித்தார். இதனை பார்த்த ஊழியர்கள், விமானம் பெங்களூருவில் தரையிறங்கியதும், சிஐஎஸ்எப் வீரர்களின் உதவியோடு அந்த பயணியை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். இது குறித்து … Read more

கேரளா: மருத்துவமனை பாதுகாப்பு சட்ட திருத்த அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

திருவனந்தபுரம், கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கொட்டரக்காரா பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்றில் டாக்டராக வந்தனா தாஸ் (வயது 22) என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், சிகிச்சைக்காக வந்த நபர் ஒருவருக்கு பெண் டாக்டர் சிகிச்சை அளித்து கொண்டிருந்தபோது, அந்த நபர் திடீரென டாக்டரை கத்தியால் குத்தி கொலை செய்தார். . இந்த சம்பவத்தில், போலீசார் உள்பட பலர் மீதும் அந்த நோயாளி தாக்குதல் நடத்தினார். இதில் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. … Read more

நாட்டு… நாட்டு… நடிகர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன் – Pirates of the Caribbean இயக்குநர்

பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குநர்களில் ஒருவர் ராப் மார்ஷல். ‘Pirates of the Caribbean’, ‘Into the Woods’, ‘Chicago’ போன்ற பல பிரபல திரைப்படங்களை இவர் இயக்கி இருக்கிறார். அவர் இயக்கிய  ‘The Little Mermaid ’ என்ற புகழ்பெற்ற அனிமேஷன் திரைப்படத்தை டிஸ்னி இந்தியா மே 26 ஆம் தேதி  ஆங்கிலத்தில் திரையரங்குகளில் வெளியிட இருக்கிறது.   ராப் மார்ஷல் சமீபத்தில் ராப் மார்ஷல் அளித்த பேட்டி ஒன்றில்,  `இந்திய நடிகர்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் இருக்கிறதா?’ என்ற … Read more

வெறும் துண்டோடு பொலிஸ் நிலையம் வந்த சிறுவன்! மாற்றாந்தாயின் மீது அவன் அளித்த புகார்

இந்திய மாநிலம் ஆந்திராவில் சிறுவன் ஒருவன் சட்டை ஏதும் அணியாமல்,  தனது மாற்றாந்தாய் மீது புகார் அளிக்க வந்த சம்பவம் பேசு பொருளாகியுள்ளது. துண்டோடு வந்த சிறுவன் ஆந்திர மாநிலம் கோட்டபேட் பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற சிறுவன், சட்டை ஏதும் அணியாமல் அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். @google அப்போது அங்கிருந்த பொலிஸார் சிறுவனிடம் விசாரிக்கும் போது, தனது தாய் தனக்கு பிடித்த சட்டையை போட விடாமல் தடுத்ததாகவும், அதனை எதிர்த்து கேட்டதற்காக தன்னை அடித்து … Read more

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. தமிழக அரசு அறிவிப்பு…

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தற்போது 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 42 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மேலும், இந்த உயர்வு 2023 ஏப்ரல் 1 ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இனிவரும் காலங்களில் மத்திய அரசு அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் அதைப் பின்பற்றி தமிழ்நாடு அரசும் செயல்படுத்தும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.