திண்டிவனம் நகராட்சி சலசலப்பு; `நாளை நம்பிக்கையில்லாத் தீர்மானமா?!' – மறுக்கும் திமுக கவுன்சிலர்
விழுப்புரம் மாவட்டத்தில், முக்கிய நகராட்சியாக இருந்து வருகிறது திண்டிவனம். மொத்தம் 33 வார்டுகளைக் கொண்ட இந்த நகராட்சியில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், 23 இடங்களைக் கைப்பற்றியது தி.மு.க. அதன்படி, நகராட்சி சேர்மன் பதவியையும் தன்வசப்படுத்தியது. இம்முறை பெண் (பொது) வேட்பாளருக்கு சேர்மன் பதவி ஒதுக்கப்பட்ட நிலையில், அமைச்சர் மஸ்தானின் ஆதரவாளரும் 9-வது வார்டு கவுன்சிலருமான நிர்மலா என்பவர் சேர்மனாக அறிவிக்கப்பட்டார். 22-வது வார்டு வி.சி.க கவுன்சிலர் ராஜலட்சுமி, துணை சேர்மன் ஆனார். திண்டிவனம் நகராட்சிக் கூட்டம் … Read more