தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டம்

தமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சை மாவட்டத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகள் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக கடந்த 2020ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள வடசேரி, மகாதேவப்பட்டணம், புள்ளிக்கோட்டை, குப்பச்சிக்கோட்டை, பரவன்கோட்டை, கீழ்குறிச்சி, அண்டமி, கருப்பூர், பரவத்தூர், கொடியாளம், நெம்மேரி ஆகிய 11 கிராமங்களில் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக 66 இடங்களில் … Read more

“கலவரம் செய்வோரைத் தலைகீழாகத் தொங்கவிடுவோம்!” – அமித் ஷாவின் அதிரடிப் பேச்சும் எதிர்வினையும்!

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவற்றின் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. பா.ஜ.க-வைத் தீவிரமாக எதிர்த்துவருபவர், நிதிஷ்குமார். முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகனான தேஜஸ்வி யாதவ் பீகாரின் துணை முதல்வராக இருக்கிறார். ரயில்வே பணிகளுக்கு லஞ்சமாக நிலம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்படும் வழக்கில், தேஜஸ்வி உட்பட லாலு பிரசாத்தின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் சி.பி.ஐ-யும் அமலாக்கத்துறையும் தீவிரமாக விசாரித்துவருகின்றன. அதனால், பீகார் அரசியலில் பரபரப்பு அதிகரித்திருக்கிறது. நிதிஷ்குமார் இத்தகைய … Read more

IAS அதிகாரி கேட்ட வரதட்சணை! பல மணப்பெண்கள் திருமணம் வேண்டாம் என்று ஓட்டம்

மணமுடித்தால் ஒரு வைத்திய பெண்ணை தான் திருமணம் செய்வேன் என்று பல ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் இருந்த IAS அதிகாரிக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. IAS அதிகாரி பேராவூர்யணி அருகில் ஒட்டங்காடு என்ற ஒரு கிராமத்தில் வசிப்பவர் IAS அதிகாரி சிவகுரு பிரபாகரன். இவர் படிப்பு முடிந்த நிலையில் பெற்றோர்கள் திருமணத்திற்காக பல படித்த பெண்களை பார்த்துள்ளனர். இவருக்கு யாரையும் பிடிக்கவில்லை. ஏனென்றால் இவருக்கு தனது மனைவியாக வருபவர் ஒரு வைத்தியராக இருக்க வேண்டும் என்பதே ஆசை … Read more

தொப்புள் கொடியுடன் மீட்ட துருக்கி அதிசய குழந்தையை ஞாபகம் இருக்கா? இப்போ அம்மாவை கண்டுபிடிச்சாச்சி!

International oi-Vishnupriya R அங்காரா: துருக்கியில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல் உயிர் பிழைத்த அதிசய குழந்தையின் தாய் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துருக்கி- சிரியா எல்லையில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இங்கு அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதிக உயரமான கட்டடங்கள் எல்லாம் சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் நிறைய பேர் சிக்கினர். இதுவரை இந்த நிலநடுக்கத்தால் தோராயமாக 50 … Read more

பேரிடர் மீட்பு பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும்: பிரதமர்| PM Modi calls for integrated response to disasters

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பேரிடர் காலங்களில் நடக்கும் மீட்பு பணி மற்றும் முயற்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பேரிடர்களை தாங்கும் உள்கட்டமைப்பு குறித்த மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பேரிடர்களை தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணியில் இன்னும் சில ஆண்டுகளில் 40 நாடுகள் இணைய உள்ளன. இந்த மாநாடு, வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதாரங்கள், சிறிய மற்றும் பெரிய நாடுகள், வட மற்றும் … Read more

பிரித்தானியாவில் குத்திக் கொல்லப்பட்ட 18 வயது சிறுவன்: பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிட்ட பொலிஸார்

பிரித்தானியாவின் லீட்ஸில் 18 வயது இளைஞன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட நிலையில், பொலிஸார் இளைஞனின் பெயரை ஜேமி மீஹ் என்று தெரிவித்துள்ளனர். 18 வயது இளைஞனுக்கு கத்தி குத்து பிரித்தானியாவின் ஆர்ம்லி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் 18 வயது இளைஞர் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவர் கத்தியால் குத்தப்பட்டு பயங்கரமாக தாக்கப்பட்டனர். இதில் 18 வயது இளைஞர் ஜேமி மீஹ் (Jamie Meah) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவர்கள் இருவரும் … Read more

திருச்சி: தங்கம் கடத்தல்காரரை `ஸ்கெட்ச்' போட்டு தூக்கிய டீம்; போலீஸில் சிக்கியது எப்படி?

திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, குவைத் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து டிஸைன் டிஸைனாக தங்கம் கடத்தி வரப்படும், விமான நிலைய அதிகாரிகளின் சோதனையின் போது கடத்தல் தங்கம் பிடிபடுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. ஆனால், இந்த முறை விமான நிலையத்தில் இறங்கிய கடத்தல் தங்கத்தை வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய, சாதிக் பாட்சா எனும் தங்கக் கடத்தல் பிசினஸ் செய்யும் நபரையே ஒரு டீம் ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கிறது. கடத்தப்பட்ட சாதிக் … Read more

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி, ஈரோடு, புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.