செப்டம்பர் 30க்குள் விலகும் கல்லூரி மாணவர்களுக்கு முழு கட்டணம் வாபஸ் :யுஜிசி ஆணை

டில்லி கல்லூரியில் சேர்ந்து செப்டம்பர் 30  ஆம் தேதிக்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணமும் திருப்பித் தர யுஜிசி உத்தரவு இட்டுள்ளது. பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட கல்விக்கூடங்களில் மாணவர் சேர்க்கை சற்று தாமதமாக தொடங்குவது ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாகும்.   எனவே அதற்குள் மற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்து இங்கு இடம் கிடைத்ததும் அந்த கல்லூரிகளிலிருந்து விலகி இங்குச் சேருவதை மாணவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இவ்வாறு விலகும் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய கட்டணம் திருப்பித் தருவது கிடையாது.  … Read more

Tenpennayaru issue: Central governments response | தென்பெண்ணையாறு விவகாரம்: மத்திய அரசு பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: தென்பெண்ணையாறு நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயம் அமைப்பது தொடர்பான முன்மொழிவு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளதாக, மத்திய ஜல் சக்தி அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. கர்நாடக மாநிலம் சென்னகேசவா மலையில் தென்பெண்ணை ஆறு உற்பத்தி ஆகிறது. இது, அங்கிருந்து ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் வழியாக 432 கி.மீ., பயணித்து, கடலுார் அருகே கடலில் கலக்கிறது. இந்நிலையில், தமிழக எல்லையை ஒட்டி, கர்நாடக பகுதியில் … Read more

ம.பி. மாநில பாஜக எம்எல்ஏ.வின் உதவியாளர் பழங்குடி இன இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த சம்பவம்… சமூகவலைத்தளத்தில் கொந்தளிப்பு

மத்திய பிரதேச மாநில பாஜக எம்.எல்.ஏ.வின் உதவியாளர் பழங்குடி இன இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த மனிதாபிமானமற்ற செயல் சமூகவலைத்தளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் சித்தி தொகுதி பாஜக எம்எல்ஏ கேதர் நாத் சுக்லாவின் உதவியாளர் பிரவேஷ் சுக்லா என அடையாளம் காணப்பட்டுள்ளார். பழங்குடியினர் மீது கரிசனமாக பேசிவரும் பாஜக தனது மற்றொரு முகத்தை காட்டியுள்ளது இந்த சம்பவத்தின் மூலம் தெரியவந்துள்ளது. आदिवासियों के हितों की झूठी बात करने वाली भाजपा … Read more

Mega size rock falls on cars: 2 killed | கார்கள் மீது உருண்டு விழுந்த மெகா சைஸ் பாறை: 2 பேர் பலி

கோஹிமா: நாகாலாந்தில் நிலச்சரிவால் உருண்டு வந்த மெகா சைஸ் பாறை கார்கள் மீது விழுந்ததில் 2 பேர் பலியாயினர். நகாலாந்து மாநிலம் கோஹிமா-திமாப்பூர் இடையே தேசிய நெடுஞ்சாலை வழியாக மலைப்பாதை உள்ளது. இப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாலை மோசமடைந்துள்ளது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. அப்போது சுமோக்கிதிமா என்ற பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ‘ மொ சைஸ் ‘பாறை ஒன்று உருண்டு இரு கார்கள் மீது விழுந்ததன. இதில் இரு கார்களும் … Read more

சபரிமலை விமான நிலைய திட்டம் – 579 குடும்பங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தகவல்

திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், அவர்களின் வசதிக்காக கோட்டயம் மாவட்டம் எருமேலியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் ஏற்படும் சமூக பாதிப்பு தொடர்பான இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் விமான நிலைய திட்டத்தால் மொத்தம் 579 குடும்பங்கள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் போது நியாயமான இழப்பீடு மற்றும் மறுவாழ்வு உறுதி செய்யப்பட வேண்டும் என … Read more

ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை | தூத்துக்குடி, குமரி கடற்கரையில் சுழல் காற்று – News In Photos

கோவையில் பாதுகாக்கப்பட்டு வரும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் சரிபார்ப்பு பணியை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி. மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் மனு கொடுக்கும் போராட்டம். தென்காசி: சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் மேல்நிலை படிப்பு முடித்து கல்லூரியில் சேர முடியதவர்களுக்காக `நான் முதல்வன் திட்டம்’ முலம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் … Read more

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யலாம்

சென்னை தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   தற்போது தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் வரும் 7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும் , மிதமான மழை பெய்யக்கூடும் என … Read more

தக்காளி விவசாயிக்கு அடித்தது ஜாக்பாட்.. கொண்டு போனது கொஞ்சம் தான்.. கொட்டியது பண மழை

India oi-Velmurugan P பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் தக்காளியுடன் சந்தைக்கு போன விவசாயிக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. தக்காளி விலை கிலோ 130க்கு விற்பனையாவதால், அவரது தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டதால் அவருக்கு பணமழை கொட்டியது. தக்காளி விலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. பெங்களூருவில் ஒரு தக்காளி ரூ.130-க்கு விற்பனை ஆகியது. சரியான நேரத்தில் பருவமழை பெய்யாதது, மாறுபட்ட சிதோஷண நிலை, திடீரென தக்காளி விளைச்சல் வரும் நேரத்தில் பெய்த மழை, … Read more

Supreme Court bans appointment of Electricity Commission | மின்சார ஆணைய நியமனம் உச்ச நீதிமன்றம் தடை

புதுடில்லி:புதுடில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் பதவியேற்பதை ஒத்தி வைத்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், புதுடில்லி துணை நிலை கவர்னருக்கும், ‘நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிட்டுள்ளது. புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. அரசு நிர்வாக அதிகாரம் தொடர்பான வழக்கில், ‘அதிகாரிகள் நியமனம், பணியிடமாற்றம் உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கைகளில் முடிவு எடுக்க, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் உள்ளது’ என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. … Read more

அதிவேகமாக வந்த கார் மோதி காலை நடைபயிற்சிக்கு சென்ற தாய், மகள் பலி – அதிர்ச்சி வீடியோ

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாவட்டம் நர்சிங்கி பகுதியை சேர்ந்த அனுராதா அவரது மகள் மம்தா மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் கவிதா ஆகிய 3 பேரும் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டனர். சன்சிட்டி பகுதியில் உள்ள சாலையோரம் இன்று காலை 6 மணியளவில் 3 பேரும் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது, வளைவான சாலையில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த 3 பேர் மீதும் மோதியது. இந்த கோர விபத்தில் அனுராதா மற்றும் … Read more