தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா!

சென்னை:  நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக மருத்துவமனை அறிவித்து உள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 10ந்தேதி எம்எல்ஏவாக பதவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து அவர் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு கடந்த வாரம் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.  இதையடுத்து,  அவர் சென்னை … Read more

தமிழகத்தில் 2,761 யானைகள் உட்பட நாட்டில் 29,964 யானைகள் உள்ளன: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: தமிழகத்தில் 2,761 யானைகள் உட்பட நாட்டில் 29,964 யானைகள் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் யானைகள் எண்ணிக்கை தொடர்பான கேள்விக்கு அமைச்சர் அஷ்வினி குமாரி செளபே பதில் அளித்துள்ளார். 2019 – 2022 காலகட்டத்தில் 274 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

நேரலை நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த செய்தி வாசிப்பாளர்|புதினை சந்திக்கும் சீன அதிபர்- உலகச் செய்திகள்

அமெரிக்கா, தென் கொரியா ராணுவத்தினர் கூட்டு பயிற்சியை தொடர்ந்து வருகின்றனர். வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் அவ்வப்போது பதற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது நாட்டு மக்களை போருக்கு தயாராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். இரானில் பெண்கள் பொது இடங்களில் நடனமாடத் தடையிருக்கும் நிலையில், சமீபத்தில் காம் டவுன் பாடலுக்கு நடனமாடியிருக்கும் இரானில் பெண்களின் வீடியோவை பிரபல பாப் ஸ்டார் செலீனா கோம்ஸ் … Read more

எரிவாயுக் குழாய் தகர்ப்பின் பின்னணியில் இருப்பது இந்த நாடுதான்: பிரான்ஸ் தரப்பு பகிரங்கக் குற்றச்சாட்டு…

ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவிற்கு எரிவாயு கொண்டுசெல்லும் எரிவாயுக் குழாய்களை சேதப்படுத்தியது அமெரிக்காதான் என பிரான்ஸ் தரப்பிலிருந்து ஒரு பரபரப்புக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொள்கைகளிலேயே அது உள்ளது 2022ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், ரஷ்யாவிலிருந்து ஜேர்மனி முதலான ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு கொண்டு செல்லும் Nord Stream 1 மற்றும் 2 என்னும் இரண்டு எரிவாயுக் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்நிலையில், அந்த எரிவாயுக் குழாய்களை சேதப்படுத்தியது அமெரிக்காதான் என பிரான்ஸ் வலதுசாரிக் கட்சியான The Patriots கட்சியின் தலைவரான … Read more

சென்னையில் 333 இடங்களில் சாலைகளில் தேங்கிய மணல், வாகனம் மூலம் சுத்தம் செய்யப்பட்டது என மாநகராட்சி தகவல்… அறிவிப்பு

சென்னை: மாநகராட்சிக்கு உட்பட்ட  333 இடங்களில் சாலைகளில் தேங்கிய மணல், வாகனம் மூலம் சுத்தம் செய்யப்பட்டது என மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னையில் குப்பை கூளங்கள் மட்டுமின்றி சாலையில் தேங்கும் மணல் மற்றும்  கட்டிட கழிவுகளையும் மாநகராட்சியினர் அகற்றி வருகின்றனர். மேலும்,  மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் என மொத்தம் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளதால், முக்கிய பகுதிகளில்,   இரவு நேரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. … Read more

அனைத்து சமூக பள்ளிகளையும் பள்ளிக் கல்வித்துறை கீழ் கொண்டுவரும் தமிழ்நாடு அரசின் துணிச்சலான முடிவை வரவேற்கிறேன்: திருமாவளவன்

சென்னை: அனைத்து சமூக பள்ளிகளையும் பள்ளிக் கல்வித்துறை கீழ் கொண்டுவரும் தமிழ்நாடு அரசின் துணிச்சலான முடிவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வரவேற்பு அளித்துள்ளார். பள்ளிகளின் பெயர்களில் இருந்த சாதி அடையாளங்களை நீக்க முன்வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் என திருமாவளவன் கூறினார்.  

தந்தை, அக்காவைக் கழுத்தறுத்துக் கொலைசெய்த இளைஞர்! – மாங்காட்டில் நடந்த பயங்கரம்

சென்னையை அடுத்த மாங்காடு, அடிசன் நகர்ப் பகுதியில் வசித்துவருபவர் செல்வராஜ். இசை பயிற்சி ஆசிரியரான இவரின் மனைவி சாந்தி, துணை நடிகையாகப் பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதிக்குப் பிரியா என்ற மகளும், ராஜேஷ் பிராங்கோ, பிரகாஷ் என இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். பிரியாவுக்கும், ராஜேஸுக்கும் திருமணமான நிலையில் பிரகாஷ் மட்டும் பெற்றோருடன் வசித்து வந்திருக்கிறார். பிரகாஷ் சினிமா திரையில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகப் பணியாற்றிவரும் பிரகாஷ், கடந்த சனிக்கிழமை மாலை மாங்காடு பாலாஜி நகரிலுள்ள தன்னுடைய அக்கா பிரியாவின் … Read more

தமிழ்நாட்டில் ஜாதி, மத கலவரம் கிடையாது, ஆபரேஷன் கஞ்சா சோதனையில் 20,000 பேர் கைது: டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீவில்லிபுத்தூர்:  ஆபரேஷன் கஞ்சா சோதனையில் இதுவரை 20,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறிய டிஜிபி சைலேந்திரபாபு,  தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக ஜாதி கலவரம், துப்பாக்கி சூடு,மத கலவரம் உள்ளிட்ட எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே , ராஜபாளையம் பகுதி பட்டாலியன் பகுதிக்கு ஆய்வு செய்ய டிஜிபு சைலேந்திர பாபு , அங்கு புதியதாக அமைக்கப் பட்ட பூங்காவை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,  கடந்த … Read more