தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.949 கோடி ஒதுக்கீடு! தமிழக அரசு

சென்னை: கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி, தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.949 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்பது இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் உத்தரவாதத்தை வழங்குகிறது. இது 100 நாள் வேலைத் திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த  தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் 75% … Read more

உத்தப்பா, ஷிவம் துபே அபாரம்… லக்னோ அணிக்கு 211 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சிஎஸ்கே

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7வது லீக் ஆட்டம், மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்கோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற  லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.  முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர் கெய்க்வாட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு துவக்க வீரர் ராபின் உத்தப்பா, அதிரடியாக ஆடி பந்துவீச்சாளர்களை திணறடித்தார். 27 பந்துகளில் … Read more

சென்னையில் மதுரவாயல் சாலையில் கண்டெய்னர் லாரி மோதி தனியார் கல்லூரி மாணவன் உயிரிழப்பு

சென்னை: சென்னை மதுரவாயல் பைபாஸ் சாலையில் கண்டெய்னர் லாரி மோதியதில் தனியார் கல்லூரி மாணவன் உயிரிழந்துள்ளார். லாரி மோதியதில் உயிரிழந்த முகமது யாசின் சடலத்தை கைப்பற்றி போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஏப்., 3ல் பெங்களூரு வணிக வைசிய சங்க 53வது திருமண ஜாதக பரிவர்த்தனை கூட்டம்| Dinamalar

பெங்களூரு-பெங்களூரு வணிக வைசிய சங்கத்தின் 53வது திருமண ஜாதக பரிவர்த்தனை கூட்டம், ஏப்ரல் 3ல் நடக்கிறது.பெங்களூரு வணிக வைசிய சங்கம் சார்பில் 53வது திருமண ஜாதக பரிவர்த்தனை கூட்டம், ஏப்ரல் 3 மதியம் 1:00 மணிக்கு, ஹலசூரு ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் தண்டாயுதபாணி கோவில் மண்டபத்தில் நடக்கிறது.சங்க தலைவர் மோகன் தலைமையில், செயலர் சங்கர் முன்னிலையில் நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர்.கூட்டத்துக்கு வருபவர்கள் அனைவருக்கும் மதிய உணவு, மாலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.துணைத்தலைவர் அண்ணாதுரை தலைமையில் குத்து … Read more

இயற்கை எரிவாயு விலை தொடர்ந்து அதிகரிக்கலாம்.. ஏன் தெரியுமா?

உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு எரிபொருட்கள் விலையானது அதிகரித்தது. எனினும் இது தற்போது சற்றே குறைந்திருந்தாலும், தொடர்ந்து தேவை அதிகரித்து வரும் நிலையில் விலை அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பல நாடுகளும் கச்சா எண்ணெய், நேச்சுரல் கேஸ் இறக்குமதிக்கு ரஷ்யாவுக்கு தடை விதித்துள்ள நிலையில், ஜெர்மனியின் நேச்சுரல் கேஸ் குறித்து எச்சரித்துள்ளது. இப்படி பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் விலை இன்னும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த சமயத்தில் … Read more

“நெருங்க முடியாத நெருப்பைப் போன்றவர் பிரதமர் மோடி!" – எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நாடகத்திற்குப் பிரதமர் மயங்கமாட்டார் என எடப்பாடி பழனிசாமி முதல்வரின் டெல்லி பயணம் குறித்து விமர்சித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தி.மு.க செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட விமானத்தில் அரசு அதிகாரிகள் செய்தது சட்டவிரோதம் என்று மத்திய அரசுக்குப் புகார் போயிருக்கிறது. பிரதமர் மோடி 2019-ம் ஆண்டு தமிழகம் வந்த போது கோ பேக் மோடி என்று கருப்பு பலூன் பறக்க விட்டவர். அதுமட்டுமல்லாமல் பிரதமரின் தனிப்பட்ட … Read more

உக்ரைன் தொடர்பில் பதவியை இழக்கும் பிரெஞ்சு ராணுவ உளவுத்துறை தலைவர்

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க இருப்பதை கணிக்கத் தவறியதாக கூறி, பிரெஞ்சு ராணுவ உளவுத்துறையின் தலைவர் தமது பதவியை இழந்துள்ளார். உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் திகதி ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்தது. தற்போது 5 வாரங்கள் கடந்தும் ரஷ்ய போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில், பொறுப்புக்கு வந்து 7 மாதங்களில், உக்ரைன் விவகாரம் தொடர்பில் தமது பதவியை இழந்துள்ளார் பிரெஞ்சு ராணுவ உளவுத்துறையின் தலைவர் Eric Vidaud. அவரது பதவியை பறிக்க காரணமாக கூறப்படுவது, … Read more

சாலையோர வியாபாரத்தை ஒழுங்கு முறைப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை முழுவதும் சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மொத்தம் 905 விற்பனை மண்டலங்களை ஒதுக்கியுள்ளது. 4700 பகுதிகள் சாலையோர வியாபாரம் அல்லாத பகுதிகளாக அடையாளப்படுத்தி உள்ளது. புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள 905 விற்பனை மண்டலங்களில் வியாபாரம் செய்ய விரைவில் இ-டெண்டர்கள் வெளியிடப்படும் என்று சென்னை மாநகராட்சி இன்று அறிவித்துள்ளது. மாநகராட்சியின் அனுமதி சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே விற்பனை மண்டலங்களில் கடைகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள். புதிய கடைகள் மற்றும் … Read more

கொரோனா கட்டுப்பாடுகள் இன்றுடன் நீங்கியது- 3 மாதம் முகக்கவசம் அணிவது நல்லது

சென்னை: கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஒரே நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு போக்குவரத்தும் முடக்கப்பட்டது. வீட்டை விட்டு யாரும் வெளியில் வரக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் “என்னடா இது நோய்” என்று புலம்பினார்கள். இதன் பிறகு கொரோனா பரவல் வேகம் எடுத்தது. இதனால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. நாடு முழுவதும் மக்கள் அனைவரும் வீட்டின் மொட்டை மாடியில் விளக்கு ஏற்ற வேண்டும், … Read more

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நாளை சந்திக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

டெல்லி: 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்கிறார். டெல்லி அரசுப் பள்ளிகள் மற்றும் மொகல்லா கிளினிக் போன்றவைகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிடுகிறார்.