உள்ளாட்சித் தேர்தல்: கோவை மாவட்டத்துக்கு சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளரை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலையொட்டி கோவை மாவட்டத்துக்கு சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளரை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்துக்கு சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளராக ஐஏஎஸ் அதிகாரி நாகராஜனை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் 25 ஆயிரமாக குறைந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் நேற்று 30,757 ஆக இருந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு, கடந்த 24 மணிநேரத்தில் 25 ஆயிரம் பேராக குறைந்தது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,920 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,27,80,235 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 66,254 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,19,77,238 ஆனது. தற்போது 2,92,092 … Read more

ரூ.22,842 கோடியை அபேஸ் செய்ய 98 நிறுவனங்கள்.. மாஸ்டர் பிளான் போட்ட ABG தலைவர்கள்..!

இந்தியாவின் முன்னணி தனியார் கப்பல் கட்டுமானம் மற்றும் பழுது நீக்கும் நிறுவனமான ABG ஷிப்யார்டு, குஜராத், கோவாவில் கப்பல் கட்டுமானம் தளத்தை வைத்திருந்தாலும், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. மத்திய அரசு கப்பல் கட்டுமானம் மற்றும் ஏற்றுமதியில் மாபெரும் திட்டத்தைத் தீட்டியுள்ள நிலையில் ABG ஷிப்யார்டு மிகப்பெரிய தொகையை மோசடி செய்துள்ளது. மல்லையா, நீரவ் மோடியை தூக்கி சாப்பிட்ட ABG ஷிப்யார்டு.. இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி..! ABG ஷிப்யார்டு நிறுவனம் ABG ஷிப்யார்டு நிறுவனம் … Read more

“போக்சோ குழந்தைகளை காப்பதற்குதானே தவிர காதலிக்கும் இளைஞர்களை தண்டிக்க அல்ல!" – அலகாபாத் நீதிமன்றம்

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பட்டியலினத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் காதலித்திருக்கிறார். இவர்களின் காதலுக்கு இருதரப்பு வீட்டாரிடமிருந்தும் பெரும் எதிர்ப்பு கிளம்பவே, இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். மேலும் கடந்த 2 ஆண்டுகளாக ஒன்றாக குடும்பம் நடத்தி வந்திருக்கின்றனர். இந்த நிலையில், திருமணத்தின் போது சிறுவனாக இருந்தவர் தற்போது இளைஞராகியுள்ளார். இன்னும் அந்த சிறுமி 18 வயதை அடையவில்லை என்பதால், சிறுமியை திருமணம் செய்துள்ளார் … Read more

சொகுசுக் கப்பலின் 10ஆவது தளத்திலிருந்து கடலில் குதித்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்: வெளியாகியுள்ள வீடியோ

மெகிச்கோ வளைகுடாவில் பயணித்துக்கொண்டிருந்த சொகுசுக்கப்பல் ஒன்றிலிருந்து கடலில் குதித்த பெண் ஒருவர் மாயமான சம்பவம் தொடர்பில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. Carnival Valor என்னும் சொகுசுக்கப்பலில் 2,980 பயணிகளும், 1,180 பணியாளர்களும் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். கடந்த சனிக்கிழமை New Orleans என்ற இடத்திலிருந்து புறப்பட்ட அந்தக் கப்பல் மெக்சிகோ நோக்கி பயணித்துக்கொண்டிருந்திருக்கிறது. அந்தக் கப்பல் புதன்கிழமையன்று மெக்சிகோ வளைகுடா பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அந்தக் கப்பலில் பயணித்த ஒரு 32 வயது பெண் சுடுதண்ணீர் தொட்டியில் குளித்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவருக்கும் … Read more

பாஜக அரசில் ஊழல் செய்தவர்கள் ஆனந்தமாக உள்ளனர் : பாஜக எம்பி வருண் காந்தி தாக்கு

டில்லி பாஜக அரசை அக்கட்சியின் மக்களவை உறுப்பினரான வருண் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பேரனும் மறைந்த சஞ்சய் காந்தியின் மகனுமான வருண் காந்தி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர் ஆவார்.  இவர் கடந்த ஓராண்டாக பாஜகவைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.  குறிப்பாக வேளாண் சட்டம் அமலாவதில் இவர் தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார். பிறகு இந்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்த போது இந்த முடிவை முன்பே … Read more

கோவையில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள் விநியோகம்- மக்கள் நீதி மய்யம் புகார்

கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் முடிந்துள்ள நிலையில், ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தேர்தலை நியாயமான முறையில் நடத்த வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.  கோவையில் அனைத்து வார்டுகளிலும் போலீஸ் துணையுடன் பரிசுப்பொருள் விநியோகம் செய்யப்படுவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். … Read more

துணை ராணுவப்படை பாதுகாப்புக்கு உத்தரவிட அதிமுக விடுத்த கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்

சென்னை: துணை ராணுவப்படை பாதுகாப்புக்கு உத்தரவிட அதிமுக விடுத்த கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

முல்லை பெரியாறில் புதிய அணை: கேரள கவர்னர் உரை: தமிழக அரசு எதிர்ப்பு| Dinamalar

திருவனந்தபுரம்: ” கேரள மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் திட்டத்தை மாநில அரசு முன்வைத்துள்ளது ” என சட்டசபையில் அம்மாநில கவர்னர் ஆரிப்கான் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெரியாற்றின் குறுக்கே அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இதன் பராமரிப்பை, தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. ஆனால் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு வலியுறுத்தி வருகிறது. இதனை … Read more

இந்தியாவில் இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு…!

புதுடெல்லி, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.  அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 920 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 30 ஆயிரத்து 757 மற்றும் நேற்று முன் தின பாதிப்பான 30 ஆயிரத்து 615- ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 80 … Read more