மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி தொடங்கியது

சென்னை: மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி தொடங்கியது.  சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள வீட்டின் அருகே போலீசார் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. பெசன்ட் நகர் மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.   மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நடிகர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சீனாவுடன் தொடர்பு:138 சூதாட்ட செயலிகளுக்கு தடை| India Bans, Blocks 138 Betting Apps, 94 Loan Lending Apps with Chinese links on Urgent Basis

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி:சீனாவுடன் உள்ள தொடர்பு உள்ள 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளுக்கு உடனடியாக தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த ஆலோசனைகளை தொடர்ந்து, சீனாவுடன் தொடர்பில் உள்ள 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளை உடனடியாக தடுக்கவும், அதற்கு தடை விதிக்கவும் அவசர நிலை அடிப்படையில் உடனடியாக நடவடிக்கைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் … Read more

“டெல்லியின் நிதியைக் குறைத்து, தாலிபன்களுக்கு வழங்குவதா?!" – அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்

2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இந்த மாதம் 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில், வெளியுறவு அமைச்சகத்துக்கு (MEA) மொத்தம் ரூ.18,050 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.17,250 கோடியைவிட சுமார் 4.64 சதவிகிதம் அதிகம். மேலும், இதிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சி நிதி தொகுப்பாக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டது. தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு, அந்த … Read more

138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யவும், முடக்கவும் நடவடிக்கை: ஒன்றிய அரசு

டெல்லி: 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யவும், முடக்கவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 93 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடங்கியது. உடனடி மற்றும் அவசர நடவடிக்கையாக சூதாட்ட செயலிகளை தடை செய்ய ஒன்றிய அரசு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடத்தையில் சந்தேகம்; நண்பனுடன் சேர்ந்து மனைவியைக் கொன்ற நபர் – காட்டிக் கொடுத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்

மும்பை விராரில் வசிப்பவர் வைபவ் பாட்டீல். இவர் மனைவி பிரியங்கா பாட்டீல். மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். இவர்கள் வசித்த வீடு கடந்த சில நாள்களாகப் பூட்டப்பட்டிருந்தது. அதோடு அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து உடனே பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து கதவைத் திறந்து பார்த்தபோது, வீட்துக்குள் பிரியங்கா இறந்துகிடந்தார். அவர் உடலில் எந்தவித காயமும் இல்லை. அதையடுத்து, அவரின் உடலை போலீஸார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி … Read more

இளவரசர் ஹரியை பிரிய மேகன் மெர்க்கல் முடிவு செய்துவிட்டாரா?

இளவரசர் ஹரியை பிரிய மேகன் மெர்க்கல் முடிவு செய்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எப்போதும் கவனத்தை ஈர்ப்பவராக இருக்க விரும்பும் மேகன் கடந்த சில வாரங்களாக பெரிதாக எதிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருக்கிறார். ஏற்கனவே மேகன் மெர்க்கல் இளவரசர் ஹரியை தூக்கி எறிந்துவிட்டு, அமெரிக்க கோடீஸ்வரரை கைபிடிப்பார் என இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் காதலி லேடி விக்டோரியா சமீபத்தில் கூறிய கருத்து பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில் மேகன் வெளியே தலை காட்டாமல் ஒதுங்கியிருப்பது அவர் … Read more

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் துபாயில் மறைவு

பாகிஸ்தான்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் துபாயில் காலமானார். 1943-ல் சுதந்திரத்துக்கு முன்பு டெல்லியில் பர்வேஸ் முஷாரப் பிறந்தார். தேச பிரிவினையின்போது முஷாரப் குடும்பம், பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு இடம்பெயர்ந்தது. 1964-ல் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்த முஷாரப் படிப்படியாக உயர்ந்து தலைமை தளபதியானார்.

வானில் `பகீர்' கிளப்பிய ராட்சத பலூன்; சுட்டு வீழ்த்திய அமெரிக்க ராணுவம் – சீனா கடும் கண்டனம்!

கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் முக்கிய ராணுவ தளவாடப் பகுதிகளின் வான்பரப்பில் மர்ம பலூன் ஒன்று தென்பட்டது. அந்த நொடி முதல், மர்ம பலூன் பற்றிய சந்தேகங்களும், சர்ச்சைகளும் மேலோங்க தொடங்கின. `சீனா, எங்கள் நாட்டை உளவு பார்க்க இந்த பலூனை அனுப்பியிருக்கிறது’ என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது. உலக நாடுகள் இந்த விவகாரத்தை உற்று நோக்கிவரும் நிலையில், சனிக்கிழமை (04/02/2023) அன்று சீனாவின் உளவு பலூனை சுட்டு வீழ்த்திவிட்டதாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு முதலில் … Read more

”கல்லூரி தோழனை இழந்து விட்டேன்”: முதல்வர் இரங்கல்

“பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரி தோழருமான டி.பி.கஜேந்திரனின் மறைவு செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது” என முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான டி.பி. கஜேந்திரன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் அவருக்கு வயது 68. அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார், அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : பல வெற்றி படங்களை இயக்கியதுடன், பல படங்களில் … Read more

மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட வேண்டும் அண்ணாமலை பேட்டி

சென்னை: மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். வாணி ஜெயராம் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியில் தெரிவித்துள்ளார். 19 மொழிகளில் 10,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய வாணி ஜெயராமுக்கு அரசு மரியாதை தேவை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.