விவசாயிகளுக்கு இலவச பேருந்து சேவை, ஏரிகள் மேலாண்மை வாரியம்; பா.ம.க-வின் வேளாண் பட்ஜெட் அம்சங்கள்!

பா.ம.க ஒவ்வோர் ஆண்டும் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடுவது வழக்கம். அவ்வகையில் நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக சார்பாக வேளாண் துறைக்கான நிழல் நிதிநிலையை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் இங்கே இடம்பெறுகின்றன… 2023-24ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பதினாறாவது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை ரூ.73,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் ரூ.53,000 கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும். இதுதவிர, பாசனத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக நீர்வளத்துறை சார்பில் ரூ.20,000 கோடி செலவிடப்படும். … Read more

பிரபாகரன் தந்தை மரணத்திலும் மிகப்பெரும் சந்தேகம் இருக்கு! சிவாஜிலிங்கம் சிறப்பு பேட்டி

தலைவர் பிரபாகரன் தந்தை மரணத்திலும் எனக்கு சந்தேகம் இருக்கிறது எனவே உடனடியாக மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தேன் என இலங்கை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பிரபாகரன் தந்தை மரணத்தில் சந்தேகம் தலைவர் பிரபாகரன் குறித்து பழ. நெடுமாறன் அவர்கள் வெளியிட்ட அறிக்கைக்கு பிறகு, ஈழத் தமிழ் மக்களிடையே பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தலைவர் பிரபாகரன் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டு அவரது உடல் மே 20 திகதி … Read more

சென்னை-மதுரை செல்லும் தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்புக்கு டி.ஆர்.பாலு நன்றி!

சென்னை: சென்னையில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்புக்கு டி.ஆர்.பாலு நன்றி தெரிவித்துள்ளார். தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தி இருந்தேன் எனவும் கூறியுள்ளார்.

RE Hunter 350: 1 லட்சம் விற்பனை இலக்கை கடந்த ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350

விற்பனைக்கு வந்த 6 மாதங்களில் சுமார் 1 லட்சத்துக்கு மேற்பட்ட ஹண்டர் 350 பைக்குகளை விற்பனை செய்து வெற்றிகரமான சாதனை கணக்கை துவங்கியுள்ளது. கிளாசிக் 350 பைக்கை தொடர்ந்து மாதந்தோறும் 15,000 க்கு மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்துள்ளது. பல ஆண்டுகளாக ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் கிளாசிக் 350 மாடல் அதிகப்படியான விற்பனை எண்ணிக்கையை தொடர்ந்து பதிவு செய்து வரும் நிலையில், இதற்கு அடுத்தப்படியான இடத்தை ஹண்டர் 350 தற்பொழுது பெற்றுள்ளது. இனி வரும் காலங்களில் … Read more

19 இருக்கைகள்… முக்கிய நகரங்கள் – புதுச்சேரியில் தொடங்குகிறது இலகுரக விமான சேவை!

புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான நிலையம் அமைந்திருக்கிறது. கடந்த 2013 ஜனவரியில் இங்கு புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்டது. புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்டவுடன் 2013 ஜனவரி முதல் புதுச்சேரியிலிருந்து பெங்களூருவுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால், பயணிகளின் எண்ணிக்கை குறைவால் விமான சேவை கடந்த 2014 பிப்ரவரி முதல் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி முதல் விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது. ஆனால், அந்த விமான சேவையும் … Read more

வேலையின் போது அடிபட்டதாக நஷ்ட ஈடு கேட்ட ஊழியர்! சுற்றுலா போன போட்டாவால் மாட்டிக்கொண்ட பரிதாபம்

வேலை செய்யும் போது அடிபட்டுவிட்டதாகக் கூறி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த ஊழியர், பொய்யான காரணத்தைக் கூறி சிக்கியுள்ளார். நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பணியின் போது விபத்து உண்டானால் அந்த ஊழியருக்கு நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரலாம். அதன் மூலம் அவர் பணி செய்யும் நிறுவனத்தின் மூலமாக நஷ்ட ஈடு தொகை கிடைக்கும். இது போல் இங்கிலாந்திலுள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் சமையல்காரராகப் பணி புரியும் ஃபெரேன்க் சுமேகி என்ற ஊழியர் வேலை … Read more

மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்க அணி!

மும்பை: மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்: தென்னாப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதியில் இங்கிலாந்து மகளிர் அணியை 6 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தியது.

அதிகாரிகள் அலட்சியத்தால் பலியான தந்தை; ஐஏஎஸ் ஆகத் துடிக்கும் மகள்! – கேள்விக்குறியாகிறதா எதிர்காலம்?

சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த நபிஷ் ஃபாத்திமாவுக்குள் ஐ.ஏ.எஸ் கனவை விதைத்தவர் அவரின் தந்தை முகமது இஸ்மாயில். இவர் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி ஒட்டியம்பாக்கம் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மகன் முகமது உமரையும், ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகள் நஸ்ரின் ஃபாத்திமாவையும் விட்டுவிட்டு, தனது பகுதியில் 4 நாள்களாக தண்ணீர் வராதது குறித்து கவுன்சிலரை சந்தித்து, பகுதிவாசிகளுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்குவதை உறுதிசெய்திருக்கிறார். பின்னர், தன்னுடடைய இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் முகமது இஸ்மாயில்.  விபத்து புகைப்படம் முகமது இஸ்மாயில், வீட்டுக்கு … Read more

காலை உணவைத் தவிர்ப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைகிறதா?

காலை உணவைத் தவிர்ப்பதால் மனித உடலில் நோய் எதிர் சக்தி குறைவதாக ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளனர். நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு தற்போதைய கால சூழலில் பலரும் காலையில் வேலைக்கு அவசரமாக ஓடுவதால் காலை உணவை உண்பதில்லை. சிலர் பசியின்மையால் காலை உணவைச் சரியாக எடுத்துக் கொள்வதில்லை. மருத்துவர்கள் பலரும் காலை உணவின் அவசியத்தைப் பற்றித் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் காலை உணவை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதாக … Read more

ஈரோடு இடைத்தேர்தலில் ரூ. 63.34 லட்சம் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்! சத்தியபிரதா சாகு தகவல்…

சென்னை:  ஈரோடு கிழக்கு தொகுதியில் 1,430 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது என்றும், ரூ. 63.34 லட்சம் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தலைமை தேர்தல் சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொதியில் வரும் 27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய உள்ளதால், அங்கு கடைசிகட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ளது. நாளை முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த … Read more