தலைப்பு செய்திகள்
நிலநடுக்கத்தால் சிதைந்து போன துருக்கி-சிரியா: மீட்பு படையை அனுப்பிய இந்தியா…!
அன்காரா, துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தில் 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து துருக்கி அரசு 7 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் … Read more
கியரா அத்வானி – சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம்: 50 உணவு ஸ்டால்கள்; 500 வெயிட்டர்கள்;100 வகையான மெனு
பாலிவுட் நடிகை கியாரா, நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா இருவரும் காதலித்து வந்தனர். அவர்களின் திருமணத்தை ராஜஸ்தான் ஜெய்சால்மரில் உள்ள சூர்யகர் பேலஸ் ஹோட்டலில் நடத்த முடிவு செய்துள்ளனர். இத்திருமணம் நேற்று நடப்பதாக இருந்தது. தற்போது இன்று இத்திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்காக பாலிவுட் நட்சத்திரங்கள் ஜெய்சால்மரில் குவிந்துள்ளனர். சித்தார்த் மல்ஹோத்ராவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பஞ்சாப் மற்றும் டெல்லியிலிருந்து வந்துள்ளனர். அவர்களை தனிப்பட்ட முறையில் கவனித்துக்கொள்ள சித்தார்த் மல்ஹோத்ரா ஏற்பாடு செய்திருக்கிறார். திருமணம் நடைபெறும் ஹோட்டல் திருமணம் நடக்கும் … Read more
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக எல் விக்டோரியா கவுரி மற்றும் 4 பேர் பதவி ஏற்றனர்…
சென்னை: மெட்ரோல் உயர்நீதிமன்ற நீதிபதியாக எல் விக்டோரியா கவுரி உள்பட 5 பேர் பதவி ஏற்றனர். அவர்களுக்கு தலைமைநீதிபதி பொறுப்பு ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஜனவரி 17 அன்று எல் விக்டோரியா கௌரியை நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்ததையடுத்து, அவரை குடியரசு தலைவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்து உத்தரவிட்டார். இதற்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி அவரது பதவி ஏற்பு விழா இன்று காலை … Read more
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.64,500 பறிமுதல்
ஈரோடு: ஈரோட்டில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.64,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.64,500 பணம் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொழிலில் சிறியது, பெரியது என ஒன்றும் இல்லை – மோகன் பகவத் பேச்சு
மும்பை, மும்பையில் நேற்று நடந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- ஒருவர் எந்த வேலை செய்தாலும், அதை மதிக்க வேண்டும். தொழிலாளர்கள் மதிக்கப்படாதது தான் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது. ஒரு வேலைக்கு அறிவு சார்ந்த அல்லது உடல் உழைப்பு என எது தேவைப்பட்டாலும் அதற்கு கடின உழைப்பு தேவைப்படுகிறது. எல்லா வேலையும் மதிக்கப்பட வேண்டும். எல்லோரும் வேலைக்கு பின்னால் ஓடிக்கொண்டு இருக்கிறோம். 10 சதவீத அரசு … Read more
Doubt of Common man: ஸ்டார்ட் அப் தொடங்குவதற்கான வழிகள் என்ன? முதலீட்டை எங்கெல்லாம் திரட்டலாம்?
விகடனின் “Doubt of Common man” பக்கத்தில் ” ஸ்டார்ட் அப் தொடங்குவதற்கான வழிகள் என்ன? முதலீட்டை எங்கெல்லாம் திரட்டலாம்? என்று விகடன் வாசகர் கவின் கேள்வி எழுப்பியிருந்தார். இதுகுறித்து வெற்றிகரமாக ஸ்டார்ட் அப் நடத்தும் குமரி ஷாப்பி நிறுவனர் தீபினிடம் கேட்டோம். அவர் கூறிய பதில் இதோ… இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. ஒருகாலத்தில் தொழில்நுட்பம் என்பது இந்தியாவில் புதிதாகத் தொழில் தொடங்குவதற்கு எட்டாக் கனியாய் … Read more
துருக்கியில் தரைமட்டமான 5,600 கட்டிடங்கள்…உள்நாட்டு போரால் சிரியாவில் தாமதமடையும் மீட்பு பணி: முழு விவரம்
துருக்கியில் உணரப்பட்ட பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் சுமார் 5,600 கட்டிடங்கள் வரை தரைமட்டமாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரினால் மீட்பு பணிகள் தாமதமடைந்து வருகிறது. துருக்கி-சிரியாவை உலுக்கிய நிலநடுக்கம் துருக்கியின் கஹ்ராமன்மரஸ் மாகாணத்தின் பசார்சிக் நகரில் திங்கட்கிழமை அதிகாலை 4:17 மணியளவில், 7.8 ரிக்டர் என்ற அளவிலான பயங்கரமான நிலநடுக்கம் 6 மைல் ஆழத்தில் மையம் கொண்டு வெளிப்பட்டது. இந்த பயங்கரமான நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்த பின் அதிர்வுகளால் துருக்கி மற்றும் … Read more
15ந்தேதிக்குள் ஆதார் எண் இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த இயலாது! அதிகாரிகள் தகவல்..
சென்னை: தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 15ந்தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆதார் எண் இணைக்காதவர்கள் பிப்ரவரி 15ந்தேதிக்கு பிறகு மின் கட்டணம் கட்ட இயலாது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் தொடங்கப்பட்ட இந்த மின் இணைப்பு … Read more
சென்னை பாண்டி பஜாரில் உள்ள துணிக்கடையில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள பட்டு சேலைகள் கொள்ளை
சென்னை: சென்னை பாண்டி பஜாரில் உள்ள துணிக்கடையில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள பட்டு சேலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பிரபல துணிக்கடைகளுக்கு சொந்தமான கிடங்கில் பட்டு சேலைகள் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.