சென்னையில் கடும் குளிர், பனிப்பொழிவு நிலவி வருவதால் பொதுமக்கள் சிரமம்

சென்னை: சென்னையில் கடும் குளிர், பனிப்பொழிவு நிலவி வருவதால் அதிகாலையில் வாகனத்தை ஓட்டிகள் சிரமப்பட்டுள்ளனர். கோயம்பேடு, அண்ணாநகர், சைதாப்பேட்டை, கிண்டி, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு பயணம் செய்கின்றனர். சைதாப்பேட்டை, கிண்டி, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது.

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட உள்ளது. இன்று சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு அன்று மதியம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்கு பின்னர் கன.20-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது.

பஞ்சாங்கக் குறிப்புகள் – பிப்ரவரி 13 முதல் 19 வரை! #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

ஏர் ஆசியா விமான நிறுவனத்திற்கு அபராதம்

புதுடெல்லி: விதிமுறை மீறல் தொடர்பாக ஏர் ஆசியா விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விமானகளின் பயிற்சி தொடர்பான விதிமுறைகளை மீறியதாக ஏர் ஆசியா விமான நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் 20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், ஏர் ஆசிய நிறுவன பயிற்சி தலைவரை மூன்று மாதங்களுக்கு பணியிடை நீக்கம் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவிலும் சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருள்

கனடா: அமெரிக்காவை தொடர்ந்து கனடாவின் வான்பரப்பில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் உதவியுடன் மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டுவீட்டரில் பதிவு செய்துள்ளார்.

உலகளவில் 67.73 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.73 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.73 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 67.81 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 64.99 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தில் இருந்து தப்பியவர்களுக்கு ஜேர்மனியின் நெகிழவைக்கும் உதவிக்கரம்

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தில் இருந்து உயிர் தப்பிய மக்களுக்கு மூன்று மாத கால விசா வழங்க முடிவு செய்துள்ளதாக ஜேர்மனி அறிவித்துள்ளது. அவசரகால உதவி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் குடும்பத்தினரை ஜேர்மனியில் வரவழைக்கலாம், இது ஒரு அவசரகால உதவி என ஜேர்மனியின் உள்விவகார அமைச்சர் நான்சி ஃபேசர் தெரிவித்துள்ளார். @AFP இது தொடர்பில் விளக்கமளித்துள்ள அமைச்சர் நான்சி ஃபேசர், ஜேர்மனியில் உள்ள துருக்கிய அல்லது சிரியா குடும்பங்கள், பேரிடர் பகுதியில் இருந்து தங்கள் நெருங்கிய … Read more

பிரித்தானிய மக்களை மொத்தமாக கதிகலங்க வைத்த விவகாரத்தில் முக்கிய திருப்பம்: நிபுணர்கள் கருத்து

பிரித்தானியாவில் மர்மமான முறையில் மாயமாகி, பொலிசாரையும் பொதுமக்களையும் திணறடித்துவரும் தாயார் விவகாரத்தில் நிபுணர்கள் தரப்பு வெளியிட்டுள்ள கருத்து முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. 14 நாட்களுக்கு முன் மாயம் பிரித்தானியாவில் இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான 45 வயது நிக்கோலா புல்லி என்பவர் 14 நாட்களுக்கு முன்னர் திடீரென்று மாயமானார். கடைசியாக அவர் Wyre ஆற்றங்கரையில் காணப்பட்டதாக தெரியவந்த நிலையில், பொலிசார் மற்றும் மீட்புக்குழுவினர் அந்த ஆற்றில் தீவிரமாக தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர். @PA ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில் … Read more

பிப்ரவரி -12: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

கனடா வான்பரப்பில் பறக்கும் மர்ம பொருள்… கண்காணிப்பு தீவிரம்

வடக்கு கனடாவின் வான்பரப்பில் மர்ம பொருள் ஒன்று பறப்பதாக Norad என அறியப்படும் வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு ஆணையம் கண்டறிந்து கண்காணித்து வருவதாக அறிவித்துள்ளது. கனடாவின் வான்பரப்பில் மர்ம பொருள் அத்துடன், அமெரிக்காவின் அலாஸ்கா மற்றும் கனடாவில் இருந்தும் ராணுவ விமானங்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வடக்கு கனடாவின் வான்பரப்பில் மர்ம பொருள் ஒன்று பறப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் Norad தெரிவித்துள்ளது. மேலும், அந்த பொருள் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதையும் இதுவரை Norad வெளியிடவில்லை. … Read more