இந்தியாவின் மிக நீண்ட டெல்லி-மும்பை விரைவுச்சாலை – பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

புதுடெல்லி, பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- டெல்லி-மும்பை விரைவுச் சாலை 1,386 கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்படுகிறது. இது இந்தியாவின் மிக நீண்ட விரைவுச் சாலையாகும். இது டெல்லி-மும்பை இடையிலான தொலைவை 12 சதவீதம், பயண நேரத்தை 50 சதவீதம் குறைக்கும். இந்தச் சாலை டெல்லி, ஹரியாணா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய 6 மாநிலங்கள் வழியாக செல்லும். கோட்டா, இந்தூா், ஜெய்ப்பூா், போபால், வதோதரா, சூரத் போன்ற நகரங்களை இணைக்கும். முக்கியமான 8 … Read more

மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங்கின் ராஜினாமா ஏற்பு; ரமேஷ் பாய்ஸ் புதிய ஆளுநராக நியமனம்!

மகாராஷ்டிரா ஆளுநராக இருக்கும் பகத் சிங் கோஷாரி கடந்த சில மாதங்களில் தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கி வருகிறார். குறிப்பாக சத்ரபதி சிவாஜி உட்பட வரலாற்று தலைவர்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பின. இதையடுத்து அவரை பதவிநீக்கம் செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. மகாராஷ்டிரா பா.ஜ.க-கூட இந்தக் கோரிக்கையை முன்வைத்தது. கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக மும்பை வந்திருந்தார். இதில் கலந்துகொண்ட … Read more

பிப்ரவரி 12: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 267-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 267-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திட விழைகிறேன் எனவும் கூறியுள்ளார்.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2 சதவீதம் வரை அதிகரிப்பு..!

புதுடெல்லி, தங்களது கச்சா எண்ணெய்க்கு மேற்கத்திய நாடுகள் விலை வரம்பு நிா்ணயித்துள்ளதற்குப் பதிலடியாக, எண்ணெய் உற்பத்தியை அடுத்த மாதத்திலிருந்து குறைக்கவிருப்பதாக ரஷியா கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெள்ளிக்கிழமை அறிவித்தது. விலை வரம்பை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அமல்படுத்தும் நாடுகளுக்கு இனி எண்ணெய் ஏற்றுமதி செய்யப்போவதில்லை; அதற்கேற்ப, அடுத்த மாதம் முதல் கச்சா எண்ணெய் உற்பத்தியில் தினமும் 5 லட்சம் பேரல்களைக் குறைக்கப்படும் என ரஷியா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால், ரஷிய எண்ணெயை பெரிதும் சாா்ந்திருக்கும் ஐரோப்பிய நாடுகள் … Read more

பிரதமர் மோடி கூறிய ‘காங்கிரஸின் ஆட்சிக் கலைப்பு வரலாறு’ – எந்த அளவுக்கு உண்மை?!

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீதான விவாதத்துக்குப் பதிலளித்து மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்தார். அவர் தனது உரையில், “மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவைத் தவறாகப் பயன்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை 90 முறை கலைத்தது. இந்திரா காந்தி மட்டுமே பிரிவு 356-ஐப் பயன்படுத்தி மாநில அரசுகளை 50 முறை கலைத்தார். இந்திரா காந்தி மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசால் கேரளாவில் இடதுசாரி அரசு … Read more

மகளிர் டி20 உலகக் கோப்பை.. இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதல்

கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. 8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி நேற்று முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலக்கோப்பையில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெற உள்ளது. அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, … Read more

கடன் வாங்கித் தருவதாகக் கூறி இன்ஸ்டாகிராம் மூலம் பலரை ஏமாற்றி ரூ.40 லட்சம் மோசடி

சென்னை: கடன் வாங்கித் தருவதாகக் கூறி இன்ஸ்டாகிராம் மூலம் பலரை ஏமாற்றி ரூ.40 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சென்னை கொடுங்கையூரில் மகேஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளார்.

சமூக சீர்திருத்தவாதி மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த நாள் கொண்டாட்டம்; பிரதமர் பங்கேற்பு

புதுடெல்லி, நாட்டில் சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்ட மற்றும் முக்கிய நபர்களின், அதிலும் அவர்கள் சமூகத்திற்கு பங்காற்றியதற்கு பதிலாக சமூகம் எதுவும் செய்யாமல் விடப்பட்டவர்களை கொண்டாடும் முனைப்பில் அதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதன்படி, 200 ஆண்டுகளுக்கு முன்பு சமூகத்தில் நிலவிய சமத்துவமற்ற நிலையை எதிர்கொள்ளும் சமூக சீர்திருத்த பணியை மேற்கொள்வதற்காக ஆர்ய சமாஜம் என்ற அமைப்பை தொடங்கியவர் மகரிஷி தயானந்த சரஸ்வதி. 1824-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந்தேதி பிறந்த இவர் ஏற்படுத்திய அமைப்பு, நாட்டில் கலாசார … Read more