தலைப்பு செய்திகள்
45 ஆண்டுகளில் முதன்முறையாக சுவிஸ் பயணத்தை ரத்துசெய்யும் மன்னர் சார்லஸ்: காரணம் என்ன தெரியுமா?
பிரித்தானிய மன்னர் சார்லஸ் ஆண்டுதோறும் பனிச்சறுக்கு விளையாட்டுக்காக சுவிட்சர்லாந்துக்கு செல்வது வழக்கம். 45 ஆண்டு கால வழக்கம் முதன்முறையாக ரத்து மன்னர் சார்லஸ் கடந்த 45 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பனிச்சறுக்கு விளையாடுவதற்காக சுவிட்சர்லாந்துக்கு செல்வதுண்டு. இம்முறை அவர் பனிச்சறுக்கு விளையாடுவதற்காக சுவிட்சர்லாந்து செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. Credit: Getty காரணம் இதுதான் வரும் மே மாதம் 6ஆம் திகதி, மன்னர் சார்லசுக்கு முடிசூட்டு விழா நடத்தப்பட உள்ளது. கை … Read more
‘கள ஆய்வில் முதலமைச்சர்’: 15, 16-ந் தேதிகளில் சேலம் உள்பட 4 மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ் வரும் 15, 16-ந் தேதிகளில் 4 மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சேலம் உள்பட 4 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். கள ஆய்வில் முதலமைச்சர்’ வேலூர் ராணிப்பேட்டை , திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், முறையான விளக்கம் அளிக்காத மாவட்ட ஆட்சியர் உள்பட அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து நடவடக்கை … Read more
இந்தியாவில் கலைஞர் ஆட்சியில் தான் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் 2ம் கட்ட புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,’ திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 85%க்கும் மேல் நிறைவேற்றப்பட்டுள்ளது கலைஞர் இட்ட ஒரு கையெழுத்தால் லட்சக்கணக்கான பெண்களின் தலையெழுத்து மாறியது. இந்தியாவில் கலைஞர் ஆட்சியில் தான் சொத்துரிமை மீட்கப்பட்டது. பணியிடங்களில் 30% இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்,’என்றார்.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் 12-ந்தேதி நடை திறப்பு
திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 12-ந்தேதி மாலையில் திறக்கப்படுகிறது. தொடர்ந்து மறுநாள் முதல் 17-ந்தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். சபரிமலையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மண்டல மகரவிளக்கு சீசன் கடந்த மாதம் 20-ந்தேதி நிறைவடைந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதால் கடந்த சீசனில் 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் … Read more
சினிமா பிரபலம் டி.பி.கஜேந்திரன் மறைவு – முதல்வர் ஸ்டாலின் நட்பும் சில நினைவலைகளும்!
முதல்வரின் கல்லூரி தோழர்: தமிழ் சினிமாவில் பிரபல திரைப்பட இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்தவர் டி.பி.கஜேந்திரன் (68). இவர் சென்னை சாலிகிராமத்தில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். குறிப்பாக இவர் ஏற்று நடித்து வந்த நகைச்சுவை மற்றும் குணசித்திர பாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இதற்கிடையில் கஜேந்திரனுக்கு சிறுநீரக பிரச்னை ஏற்பட்டது. இதனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்தார். முதல்வர் ஸ்டாலின் இந்நிலையில் 05-02-2023 … Read more
இவ்வளவு தீமைகள் ஏற்படுமா மீன் சாப்பிடுவதால்? இனி கவனம்
கடல் உணவுகள் பொதுவாக உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கின்றது. அதிலும் மீன்கள் சாப்பிடுவது உடல்நலக்கோளாறுகளை சரி செய்கிறது, அதே நேரம் மீன் சாப்பிடுவதால் தீமைகளும் ஏற்படுகிறது. அதிகளவில் தொடர்ந்து மீன் சாப்பிடுபவர்களுக்கு ஆஸ்துமா முதல் Prostate புற்றுநோய் வரை ஏற்படும் என உலகளவில் நடந்த ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. மீனுக்கு ஆக்ஸிஜனை உறிஞ்சும் சக்தி இருப்பதால், மீனை அதிகம் உண்பவர்கள் மூளை மற்றும் கண் நோய்களை பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம். exportersindia ஜீரணிக்க முடியாததால் மனித உடலால் … Read more
ஆவின் காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்! தமிழ்நாடு அரசு
சென்னை: ஆவினில் காலியாக உள்ள பணியிடங்கள் இனி டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தொடர்ந்து, காலியாக 322 டிபணியிடங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆவினில் காலியாக உள்ள பணியிங்களுக்கு ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து பணி நியமனம் செய்து வந்தனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் அவ்வாறு நேரடியாக பணி நியமணம் செய்யப்பட்ட பலரை திமுக அரசு பதவி நீக்கம் செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கு … Read more
தேர்தல் பணிக்காக சிறப்புப் படை போலீஸ் ஈரோடு சென்றது
ஈரோடு : ஈரோடு இடைத்தேர்தல் பணிக்காக சிறப்புப் படை போலீஸ் ஈரோடு சென்றது. முதல்கட்டமாக 200 பேர் ஈரோடு சென்றுள்ள நிலையில், மேலும் 5,000 பேர் தேர்தல் பணிக்காக ஈரோடு செல்ல உள்ளனர்.தேர்தலின் போது தேவைக்கேற்ப அண்டை மாவட்டங்களில் இருந்து 5,000 பேர் வரவழைக்கப்படுவர் என போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.
9 மாதங்களில் 6வது முறை: ரெப்போ வட்டி விகிதம் உயர்வு| EMIs likely to go up as RBI hiked repo rate by 25bps
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால், இந்த வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமானது. கடந்த 9 மாதங்களில் ரெப்போ வட்டி விகிதம் தொடர்ச்சியாக 6வது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது. மும்பையில் நிருபர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில்இருந்து 6.50 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. 2018 ம் ஆண்டிற்கு … Read more