சென்னையில் அனுமதி பெறாத 1813 கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு…

சென்னை மாநகராட்சி பகுதியில் அனுமதி பெறாமல் கொடுக்கப்பட்ட கழிவு நீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் சுமார் 1,813 கழிவு நீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனுமதி பெறாமல் இணைப்பு கொடுத்ததற்காக ரூ.5.98 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை அதன் புறநகர் பகுதிகளை உள்ளடக்கி நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் நிலையில் அதன் குடியிருப்புகளும் அதிகரித்து வருகிறது. மழைநீர் வடிகால், கழிவு நீர் கால்வாய், குடிநீர் … Read more

நெடுஞ்சாலை துறை பாலம் கட்டுமான பணியின்போது கீழே விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மதுரை: மதுரை காமராஜர் பல்கலை. அருகே நெடுஞ்சாலை துறை பாலம் கட்டுமான பணியின்போது தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி முத்து ராஜா (33) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பணப்பரிமாற்ற மோசடி வழக்கு: பெண் பத்திரிகையாளர் மனு தள்ளுபடி| Remittance fraud case: Petition of woman journalist dismissed

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி :பணப்பரிமாற்ற மோசடி வழக்கில், தனக்கு எதிராக காஜியாபாத் நீதிமன்றம், ‘சம்மன்’ அனுப்பியதை எதிர்த்து, பத்திரிகையாளர் ராணா அயூப் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. புதுடில்லியைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ராணா அயூப்.இவர், கொரோனா காலத்தின் போது மஹாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உதவப் போவதாக கூறி, இணையதளம் வாயிலாக நிதி திரட்டினார். இவ்வாறு திரட்டப்பட்ட நிதியை, மக்களுக்கான நிவாரணப் … Read more

Rakhi Sawant: திருமணத்தை அறிவித்த ஒரே மாதத்தில் கணவனைப் பிரிகிறார் ராக்கி சாவந்த் – காரணம் என்ன?

நடிகை ராக்கி சாவந்த் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் அடில் கான் என்பவரைக் காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டதாக ராக்கி சாவந்த் கடந்த மாதம் 16ம் தேதி முறைப்படி அறிவித்தார். அதோடு ராக்கி சாவந்த், பர்தா அணிந்து கொண்டு அடில் கானுடன் வெளியிடங்களுக்குச் சென்று வந்தார். ஆனால் கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது கணவரின் போனில் சிலவற்றைப் பார்த்ததாகவும், அவரின் நடத்தையில் சந்தேகப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். அதே சமயம் தனது தாயாரின் இறுதிச்சடங்கில் தனது கணவருடன் … Read more

துருக்கி நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கிய கால்பந்து வீரர் உயிருடன் மீட்பு

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்குள் புதையுண்ட கானா சர்வதேச கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு (Christian Atsu) உயிருடன் மீட்கப்பட்டார். இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட அட்சு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கால்பந்து வீரர் உயிருடன் மீட்பு 31 வயதான கிறிஸ்டியன் அட்சு, பிரீமியர் லீக்கில் தனது காலத்தில் செல்சி மற்றும் நியூகேஸில் ஆகிய இரு அணிகளுக்காகவும் விளையாடினார். Getty Images அவர் திங்களன்று துருக்கியின் Hatay மாகாணத்தில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கினார். ஹடாய் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் நிறைவு!

ஈரோடு:  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 7 நாட்களாக நடைபெற்ற வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3மணியுடன் நிறைவு பெற்றது. இதுவரை 75 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த (ஜனவரி) மாதம் 31ந் தேதி தொடங்கியது. தினமும் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு … Read more

அதிமுக நகர செயலாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

ராணிப்பேட்டை: ஆற்காட்டில் டெண்டர் கடிதத்தில் முத்திரையை முறைகேடாக பயன்படுத்திய அதிமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூய்மை பணியாளருக்கு பணம் கொடுத்து அஞ்சல் அலுவலக முத்திரையை பெற்று டெண்டர் கடிதத்தில் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. அஞ்சல் அலுவலக முத்திரையை முறைகேடாக பயன்படுத்திய அதிமுக நகர செயலாளர் ஜிம் சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

" `ஆபாச வீடியோவை வெளியிடுவேன்' என மிரட்டுகிறார்!" – காவலர்மீது கணவரைப் பிரிந்து வாழும் பெண் புகார்

சென்னை மணலி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகாரில், “நான் கடந்த 7.7.2022-ம் தேதி காவலர் செல்லதுரை என்பவர்மீது புகாரளித்தேன். அதன்பேரில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீஸார், என்னை விசாரணைக்காக நேரில் வரச் சொல்லியிருந்தார்கள். அதைத் தெரிந்துகொண்ட காவலர் செல்லதுரை என்னை வழிமறித்து அவர்மீது கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று எழுதிக் கொடுக்க வேண்டும் என மிரட்டினார். சென்னை … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ்-ஐ தொடர்ந்து, அமமுக வேட்பாளரும் போட்டியில் இருந்து விலகல்…

ஈரோடு: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், இருந்து ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ் பெற்ற நிலையில்,  தொடர்ந்து, அமமுக வேட்பாளரும் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படாத காரணத்தினால், இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு … Read more