கல்வித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த அதிமுக நிர்வாகி கைது

திண்டுக்கல்: கல்வித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக கிழக்கு மாவட்ட மீனவர் அணி ஒன்றிய செயலாளர் மணியை குற்றப்பரிவு போலீசார் கைது செய்தனர்.

₹ 64,900 விலையில் ஹோண்டா ஷைன் 100 விற்பனைக்கு வந்தது

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஷைன் 100 (Honda Shine 100) பைக் மாடல் விலை ரூபாய் 64,900 விலையில் ஆரம்ப அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போட்டியாளரான ஹீரோ ஸ்ப்ளெண்டர், HF 100, HF டீலக்ஸ் மற்றும் பஜாஜ் பிளாட்டினா பைக்குகளுக்கு சவால் விடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று முதல் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள பைக்கிற்கு ஏப்ரல் முதல் உற்பத்தி தொடங்கி மே முதல் வாரத்தில் டெலிவரி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனையில் உள்ள பிரசத்தி பெற்ற 125சிசி … Read more

ரயில்வேயில் திருநங்கைகளின் முதல் டீ ஸ்டால்; ட்விட்டரில் பெருமிதத்துடன் மத்திய அமைச்சர் பதிவு!

சமீபத்தில், மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், திருநங்கைகளுக்கான டீக்கடை குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அந்தப் பதிவில் இடம்பெற்றிருந்த புகைப்படத்தில், புதிதாகத் திறக்கப்பட்ட டீக்கடை, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. India’s first “Trans Tea Stall” at a railway platform. Guwahati Railway Station pic.twitter.com/JSi8OS9VKM — Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) March 13, 2023 அந்த டீக்கடையில் திருநங்கைகள் சிலர் நின்று கொண்டிருந்தனர். டீக்கடையின் பெயர்ப் பலகையில், `Trans Tea Stall’ எனக் … Read more

கொடூரமாக குத்திக்கொல்லப்பட்ட மாணவி: குற்றவாளிகள் யார் என தெரியவந்ததால் அதிர்ச்சியில் ஜேர்மனி

ஜேர்மனியில் மாணவி ஒருவர் கொடூரமாகக் குத்திக்கொல்லப்பட்ட நிலையில், அவரைக் கொலை செய்தது இரண்டு சிறுமிகள் என தெரியவந்ததால் ஜேர்மனியே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. மாயமான சிறுமி சடலமாக மீட்பு ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்திலுள்ள Freudenberg நகரில் வாழ்ந்துவந்த Louise என்னும் 12 வயது மாணவி, தனது தோழியைக் காணச் சென்ற நிலையில் மாயமானார். Pic: AP Louiseஇன் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பொலிசார் அவளைத் தேடும் முயற்சியில் இறங்க, வனப்பகுதி ஒன்றின் அருகே அமைந்துள்ள சைக்கிள் செல்லும் … Read more

மெட்டா நிறுவனத்தில் இருந்து மேலும் 10000 ஊழியர்கள் பணி நீக்கம்…

கலிபோர்னியா: பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் இருந்து 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், புதிதாக தேர்வு செய்யப்பட இருந்த 5000 வேலை வாய்ப்புகளும் தற்போது நிரப்ப போவதில்லை எனவும் மெட்டா அறிவித்துள்ளது. இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள மார்க் ஜீக்கர்பெர்க், “இது மிகவும் கடினமான ஒன்று ஆனால் இதைத் தவிர வேறு வழியில்லை. அடுத்த இரண்டு மாதங்களில் மெட்டா நிறுவனத்தில் இருந்து மேலும் சிலர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். குறைந்த … Read more

உண்மையான தொண்டர்கள் எங்களுடன் இருக்கிறார்கள்: டிடிவி தினகரன்

சென்னை:உண்மையான தொண்டர்கள் எங்களுடன் இருக்கிறார்கள் என டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார். அமமுக நிர்வாகிகள் விலகல் குறித்து டிடிவி தினகரன் விளக்கம் அளித்து வருகிறார். கட்சியை விட்டு வெளியேறுபவர்கள் சொந்த காரணத்திற்காக வெளியே செல்கின்றனர். எடப்பாடி பழனிசாமி பணபலத்துடன் களத்தில் இறங்கியுள்ளார்  எனவும் அவர் பேசியுள்ளார்.

பெருமாள் முருகனின் நாவல் புக்கர் பரிசு பட்டியலில் தேர்வு| Perumal Murugans novel Booker shortlist

புதுடில்லி,எழுத்தாளர் பெருமாள் முருகன், ‘பூக்குழி’ என்ற பெயரில் தமிழில் எழுதி, ‘பையர்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட நாவல், ‘புக்கர்’ பரிசு பட்டியலுக்கு தேர்வாகி உள்ளது. இலக்கியத்துறையில் வழங்கப்படும் விருதுகளில், ‘புக்கர்’ பரிசு சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றது. உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டு, ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கப்பட்ட நாவல்களில் சிறந்த புத்தகத்துக்கு, ‘புக்கர்’ பரிசு அளிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர் பெருமாள் முருகன், 56, ‘பூக்குழி’ என்ற … Read more

நெல்லை: `மேயர் எங்களை மதிப்பதில்லை’ – திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி; வெடிக்கும் உட்கட்சி விவகாரம்

நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணனின் செயல்பாடுகளால் தி.மு.க கவுன்சிலர்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது பற்றி கட்சியினர் சிலர் நம்மிடம் பேசுகையில், “கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருந்த சரவணனை, நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் மேயராகக் கொண்டுவந்தார். தனது ஆதரவாளரான சரவணன் தனக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுவார் என்ற எண்ணத்திலேயே அவருக்கு மேயர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. மேயர் சரவணன் மற்றும் மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் ஆனால், பொறுப்பு கைக்கு வந்ததும் மேயர் சரவணனின் நடவடிக்கைகளில் … Read more

இந்த கடற்கரை பகுதிகளை பிரித்தானிய மக்கள் கட்டாயம் தவிருங்கள்: அதிர்ச்சி காரணம்

பலத்த மழை காரணமாக கழிவுநீர் தற்போது கடல் நீரில் கலந்துள்ளதால், பிரித்தானியாவில் டசின் கணக்கான கடற்கரைகளில் மக்கள் நீந்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 83 கடற்கரை பகுதிகள் நதிக்கரைகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் தஞ்சமடையும் மக்கள், கண்டிப்பாக இந்த எச்சரிக்கையை கருத்தில்கொள்ள வேண்டும் எனவும் நினைவூட்டியுள்ளனர். மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் கடல் நீரின் தரம் இருக்கிறதா என்பது குறித்து தனியார் அமைப்பு ஒன்று கணித்து வருவதுடன், எச்சரிக்கையும் விடுத்து வருகிறது. இந்த நிலையில், கழிவுநீர் கலந்த … Read more