இரு நாடுகளில் குழப்பத்தை உருவாக்கிய இராட்சத பலூன் விவகாரம்: மர்மம் விலகியது

மர்ம பலூன் ஒன்று தங்கள் வான்வெளியில் பறப்பதாக அமெரிக்காவும் கனடாவும் தெரிவித்திருந்த நிலையில், அந்த பலூன் குறித்த மர்மம் விலகியுள்ளது. வானில் பறந்த இராட்சத பலூன் தங்கள் வான்வெளியில் மூன்று பேருந்துகள் அளவுடைய இராட்சத பலூன் ஒன்று பறப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்ததுடன், அது சீன உளவு பலூனாக இருக்கலாம் என்றும் கூறியிருந்தது. அதேபோல பலூன் ஒன்றைத் தாங்களும் கண்டுபிடித்திருப்பதாக கனடாவும் கூறிய நிலையில், கனடா மற்றும் அமெரிக்க வான்வெளி பாதுகாப்பு அமைப்பான NORAD, அந்த பலூனை … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரை நிறுத்த வேண்டும்: அண்ணாமலை பேட்டி

சென்னை: அதிமுக சார்பில் ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதே பாஜகவின் வேண்டுகோள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரை நிறுத்த வேண்டும். பிரிந்து தேர்தலை சந்தித்தால் வெற்றி வாய்ப்பு குறையும். தேர்தல் அறிவித்த உடனே பாஜக போட்டியிடவில்லை என இரு தலைவர்களிடமும் கூறிவிட்டோம் என அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கர்ப்பிணியான கல்லூரி மாணவி: கலைக்க முடியாத கரு: சுப்ரீம் கோர்ட் மனிதாபிமானம்| SC asks AIIMS to take care of 29-week pregnant woman till the time child is adopted

புதுடில்லி: டில்லியில் திருமணமாகாமல் கர்ப்பமடைந்த மாணவியை, பிரசவம் வரை தன்னுடன் வைத்து கவனித்து கொள்வதாக உச்சநீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி கூறினார். இதனை ஏற்று கொண்ட நீதிமன்றம் அவருக்கு பாராட்டு தெரிவித்தது. குழந்தை பிறக்கும் வரை அனைத்து உதவிகளையும் வழங்க எய்ம்ஸ்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைநகர் புதுடில்லியில் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து பி. டெக் படிக்கும் 21 வயதான மாணவி ஒருவர் கருவுற்றார். இது தெரியவந்ததை தொடர்ந்து விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிறகு, உறவினர் … Read more

சென்னை: `பைக் ஓட்ட ஆசை’ – சிசிடிவியால் சிக்கிய 16 வயது சிறுமி; 4 பைக்குகள் மீட்பு!

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதிக்கு உட்பட்ட காத்பாடா பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டுப் போவதாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் போலீஸார் பைக் திருட்டு குறித்து விசாரித்தனர். இதற்காக பைக் திருடப்படும் இடஙகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது பெண் ஒருவர், தெருவில் நிறுத்தப்பட்டிருக்கும் பைக்கை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதனால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் அந்தப் பெண்ணை போலீஸார் தேடி வந்தனர். … Read more

சொந்த சகோதரரால்… மகள் குறித்து தந்தையின் ஒப்புதல் வாக்குமூலம்: கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்

வெளிநாட்டில் தனியாக வாழ்ந்து வருவதுடன், சமூக ஊடகத்தில் காணொளிகளை பதிவு செய்து வருவதாகவும் கூறி 22 வயது மகளை தந்தை ஒருவர் ஆணவக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தந்தையால் ஆணவக் கொலை ஈராக்கை சேர்ந்த 22 வயது திபா அல்-அலி என்பவரே ஜனவரி 31ம் திகதி தமது தந்தையால் ஆணவக் கொலை செய்யப்பட்டவர். குறித்த தகவலை ஈராக்கின் உள்விவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் சாத் மான் தமது டுவிட்டர் பக்கத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். துருக்கியில் … Read more

இரிடியம் மோசடி: பொதுமக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

சென்னை; இரிடியம் முதலீடு என்ற பெயரில் பெரிய் மோசடி நடந்து வருவதாகவும், பொதுமக்கள் தங்கள் பணத்தை மோசடி கும்பலிடம் பறி கொடுத்து ஏமாறாமல் இருக்க வேண்டும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக டிஜிபி வெளியிட்டுள்ள சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள  வீடியோவில், கடந்த சில நாட்களாக இரிடியம் முதலீடு என்ற பெயரில் பொதுமக்களை ஒரு மோசடி கும்பல் ஏமாற்றி வருகிறது. 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அடுத்து வரும் 2 ஆண்டுகளில் 3 … Read more

மழையால் பாதித்த விவசாயி, மீனவர், உப்பள தொழிலாளருக்கு உடனே நிவாரணம் தர வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: மழையால் பாதித்த விவசாயி, மீனவர், உப்பள தொழிலாளருக்கு உடனே நிவாரணம் தர வேண்டும் என பழனிசாமி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசு நிதி வரவேண்டும், காப்பீடு திட்டம் மூலம் நிதி தரப்படும் என தாமதிக்க கூடாது எனவும் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

வங்கிகள் நிலை சீராக உள்ளது: ரிசர்வ் வங்கி அறிக்கை| RBI Says “Banking Sector Resilient And Stable” Amid Adani Stocks Rout

புதுடில்லி: நாட்டில் வங்கிகளின் நிலை சீராகவும், மீண்டெழும் தன்மையுடனும் உள்ளது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளில் பெரும் மோசடி செய்திருப்பதாக அதானி நிறுவனத்தின் மீது, ‘ஹிண்டன்பர்க்’ என்ற அமெரிக்க நிறுவனம் குற்றஞ்சாட்டியது பெரும் விவகாரமாக வெடித்துஉள்ளது. இதனை தொடர்ந்து அதானி குழுமத்திற்கு வழங்கிய கடன்கள் குறித்து விரிவான அறிக்கை அளிக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. அதானி குழுமத்திற்கு இந்திய வங்கிகள் ரூ.80 ஆயிரம் கோடி கடன் வழங்கி உள்ளன. இது, அந்த குழுமத்தின் … Read more

"ஷிவின் ஜெயிச்சிருந்தா எல்லாரும் சேர்ந்து கொண்டாடியிருக்கலாம்!"- பிக் பாஸ் கதிரவன்

பிக் பாஸ் சீசன் 6 பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. அசிம் டைட்டிலுக்குத் தகுதியானவர் இல்லை, விக்ரமன் ஜெயித்திருந்தால் அறம் வென்றிருக்கும் என ஒருபுறமும், ஷிவின் ஜெயித்திருந்தால் அது ஒரு சமூகத்துக்குக் கிடைத்த அங்கீகாரமாக இருந்திருக்கும் என ஒருபுறமும் சமூகவலைதள பக்கங்களில் கருத்துகள் பகிர்ந்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டினுள் போட்டியாளராகக் கலந்து கொண்டு இறுதி வாரம் நெருங்கும் தறுவாயில் பண மூட்டையுடன் வெளியேறிய கதிரவனைச் சந்தித்தோம். பிக் பாஸ் கதிரவன் உங்களோட சக ஹவுஸ்மேட்ஸை மீட் பண்ணீங்களா? “பிக் … Read more

உக்ரைனுக்கு அடுத்து இந்த நாடுதான் ரஷ்யாவின் இலக்கு: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் கொடுத்துள்ள அதிர்ச்சி

ரஷ்யா ஏராளம் படையினரையும், ஆயுதங்களையும் இழந்துவிட்டது, அதனால் இனி போரைத் தொடர இயலாது என ஒருபக்கமும், ரஷ்யா இன்னமும் தன் முக்கிய படைகளை போரில் இறக்கவில்லை என இன்னொரு பக்கமும் செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன. ஆக, ரஷ்ய – உக்ரைன் போர் முடிவுக்கு வருமா வராதா என உலகம் குழப்பத்துடன் காத்திருக்கும் நேரத்தில், உக்ரைனுக்கு அடுத்து இன்னொரு நாட்டைத் தாக்கவிருப்பதாக மறைமுகமாக ஒரு செய்தியைத் தெரிவித்துள்ளார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர். நடுவில் கொஞ்ச காலம் காணாமல் போன … Read more