“ஒட்டுமொத்த உலகமும் நமது பட்ஜெட்டை உற்றுநோக்குகிறது" – பிரதமர் மோடி

2023-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் இன்று நாடாளுமன்றத்தில் தொடங்குகிறது. இதில் இந்தியாவின் முதல் பழங்குடி இனத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை நிகழ்த்த இருக்கிறார். இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிதமர் மோடி, “பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. அதன் தொடக்கத்திலேயே, பொருளாதார உலகின் நம்பகமான குரல்கள், ஒரு நேர்மறையான செய்தியையும், நம்பிக்கை மற்றும் உற்சாகத்தையும் கொண்டு வந்துள்ளன. இன்று முதன்முறையாக நாடாளுமன்ற … Read more

நிலவறைக்குள் கேட்ட குழந்தைகளின் சத்தம்… பொதுமக்கள் புகாரையடுத்து தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் விடயம்

ஆஸ்திரியா நாட்டில், ஆறு பிரித்தானிய குழந்தைகளை மதுபானம் சேமித்துவைக்கும் நிலவறைக்குள் அடைத்துவைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நிலவறைக்குள்ளிருந்து கேட்ட குழந்தைகளின் சத்தம் ஆஸ்திரிய கிராமமான Obritzஇல், மதுபானம் சேமித்துவைக்கும் நிலவறை ஒன்றிற்குள்ளிருந்து குழந்தைகள் சத்தம் கேட்பதைக் கவனித்த மக்கள், அருகில் செல்லும்போதெல்லாம் சத்தம் நின்றுவிடுவதைக் கவனித்துள்ளார்கள். அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்கச் சென்ற சமூக சேவகர்கள் மீது அங்கிருந்த Tom Landon என்பவர் பெப்பர் ஸ்பிரே அடித்துத் துரத்தியுள்ளார். ஆகவே, அவர்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள். பொலிசார் … Read more

‘ஆத்மநிர்பர்’ மற்றும் அதன் மனிதாபிமான கடமைகளை நிறைவேற்றும் திறன் கொண்ட இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்! நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை…

டெல்லி: குடியரசுத் தலைவர் உரையுடன்   நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டுக்கூட்டத்தில் முதன்முறையாக உரையாற்றிய குடியரசு தலைவர் திரவுபதி முர்ம,  ‘ஆத்மநிர்பர்’ மற்றும் அதன் மனிதாபிமான கடமைகளை நிறைவேற்றும் திறன் கொண்ட இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும் என கூறினார். நடப்பு ஆண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.  ஒவ்வொரு ஆண்டும் தொடங்கும் முதல் கூட்டத்தொடரானது குடியரசுத் தலைவர் உரையாற்றுவது வழக்கம் இன்று குடியரசு தலைவர் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவதுடன், நாளை நடப்பு … Read more

உலக அமைதிக்காக பாடுபடும் இந்தியா: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை

டெல்லி: உலகின் பார்வையில் இந்தியாவின் நிலை என்பது பெருமளவில் மாறியுள்ளது என குடியரசுத் தலைவர் முர்மு தெரிவித்துள்ளார். இந்தியா தனது பிரச்னைகளைத் தீர்க்க பிற நாடுகளை சார்ந்திருக்காது. மற்ற நாடுகள் தங்கள் பிரச்னைகளை தீர்க்க இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கின்றன எனவும் கூறினார்.

இந்திய பொருளாதார வளர்ச்சி 6.1%ஆக இருக்கும்! சர்வதேச நாணய நிதியம் கணிப்பு…

டெல்லி: இந்திய பொருளாதார வளர்ச்சி 6.1%ஆக இருக்கும்   சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund -IMG)  கணித்துள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி, 2021-ம் ஆண்டு இருந்த 8.7 சதவீதத்திலிருந்து 2022-ம் ஆண்டு 6.8 சதவீதமாக குறைந்த  நிலையில், அது 2023-ம் ஆண்டு மேலும் குறைந்து 6.1 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப் பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் (IMF) என்பது ஒரு சர்வதேச அமைப்பாகும், இது உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கிறது, … Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரை கடக்கும்

சென்னை: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை இலங்கையில் கரை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை திரிகோணமலையில் இருந்து 380 கீ. மீ. தொலைவில் வீசும் என்று வானிலை ஆய்வு மைய தகவல் வெளியாகியுள்ளது

மது விற்கலைன்னா ஆட்சியை நடத்தவும் முடியாது என்பது, தி.மு.க.,வுக்கு நல்லா தெரிஞ்சிடுச்சு!| Speech, interview, report

துாத்துக்குடி தொகுதி தி.மு.க., – எம்.பி., கனிமொழி பேட்டி: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் உள்ள, காங்., வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எதிர்க்கட்சி பிளவுபட்டு இருப்பதால், இதை வைத்து ஒரு சிலர் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். அ.தி.மு.க., ஒன்றுபட்டு தேர்தலை சந்தித்தாலும், தி.மு.க.,வை வெல்ல முடியாது. தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வருவோம் என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. படிப்படியாக, மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. … Read more

புதுக்கோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றிச் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்தது. விபத்தில் காயமடைந்து திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அழகு சுசீந்திரன்(27) உயிரிழந்தார். கடந்த 17ம் தேதி வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது விபத்து நடந்தது.