பயங்கர லேசர் ஒளிகளை பயன்படுத்தும் சீனா: பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு

தென் சீன கடல் பகுதியில் “இராணுவ தர” லேசர் ஒளியை சீனா பயன்படுத்தி அத்துமீறல் செய்து வருவதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.  லேசர் ஒளி தென் சீனக் கடலில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சீன கடலோரக் காவல்படை கப்பல் ஒன்று ராணுவ தர லேசரை பயன்படுத்தியதாக பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை குற்றம் சாட்டியுள்ளது. பிப்ரவரி 6ம் திகதி மாலை 6 மணியளவில், கப்பல் 10 கடல் மைல் தொலைவில் ஷோலை நெருங்கியபோது, வில் எண் … Read more

உதவி ஆணையராக முதல் ஹிந்து பெண் நியமனம்| First Hindu woman appointed as Assistant Commissioner

லாகூர்,பாகிஸ்தானில், ஹிந்து மதத்திலிருந்து முதல் பெண் அரசு அதிகாரியாகியுள்ள சனா ராம்சந்த், அங்குள்ள ஹசனாப்தால் நகரின் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுஉள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர், சனா ராம்சந்த் குல்வானி, 27. டாக்டராக பணியாற்றி வந்த இவர், நம் நாட்டின், ‘சிவில் சர்வீசஸ்’ தேர்வுக்கு இணையாக, இங்கு நடந்த ‘சென்ட்ரல் சுப்பீரியர் சர்வீசஸ்’ தேர்வில், 2020ல் வெற்றி பெற்றார். முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற சனா, பயிற்சிக்குப் பின் அந்நாட்டு ஆட்சிப் பணியில் … Read more

சுமார் 178 மணி நேரத்திற்கு பிறகு…உயிருடன் மீட்கப்பட்ட 6 வயது சிறுமி! துருக்கியில் தொடரும் மீட்பு பணி

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 178 மணி நேரத்திற்கு பிறகு கட்டிட இடிபாடுகளில் இருந்து 6 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 35,000 பேர் உயிரிழப்பு துருக்கி மற்றும் சிரியா ஆகிய இருநாடுகளையும் கடந்த திங்கட்கிழமை அதிகாலை 7.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இதில் இதுவரை 35,000 பேர் உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். AP மேலும் பலர் வீடற்று தெருக்களில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 178 மணி … Read more

12 தென்னாப்பிரிக்கா சிறுத்தைகள் சனிக்கிழமை இந்தியா வருகை| 12 South African Panthers visit India on Saturday

புதுடில்லி: தென்னாப்பிரிக்காவிலிருந்து 12 சிறுத்தைகள் இந்தியா கொண்டு வரப்பட உள்ளது.கடந்தாண்டு ஆப்ரிக்க நாடான நமீபியாவுடன் ஏற்படுத்திய ஒப்பந்த படி, நமீபியா அரசு ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் என எட்டு சிவிங்கிகளை நம் நாட்டுக்கு நன்கொடையாக வழங்கியது, இந்த சிவிங்கிகள், மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் வரும் சனிக்கிழமையன்று தென்னாப்பிரிக்காவிலிருந்து விமானப்படை விமானம் மூலம் 12 சிறுத்தைகள் இந்தியா கொண்டுவரப்பட உள்ளன. இச்சிறுத்தைகள் மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் விட … Read more

சிதம்பரம் நடராஜர் கோயில்: “நந்தனார் சென்ற வாசலை திறக்க வேண்டும்!" – அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்திருக்கும் நடராஜர் திருக்கோயில் சைவத் தலங்களில் முக்கியமானது. சுமார் 3,000 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படும் இந்தக் கோயில், தற்போது தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் சென்று வழிபட்ட தெற்கு கோபுர வாசல் அதன்பிறகு அடைக்கப்பட்டது வரலாறு. ”நந்தனார் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவர் சென்று வழிபட்ட அந்த வாசலை தீட்சிதர்கள் அடைத்துவிட்டனர். தீண்டாமையின் அடையாளமாக இருக்கும் அந்த வாசலை திறக்க வேண்டும்” என்று பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் … Read more

பங்குச்சந்தையை ஒழுங்குபடுத்த குழு : கோர்ட் உத்தரவை ஏற்றது மத்திய அரசு| The central government has adopted the panel court order to regulate the stock market

புதுடில்லி,:பங்குச் சந்தை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கு குழு அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் யோசனையை மத்திய அரசு ஏற்றுள்ளது. தொழில் அதிபர் அதானியின் நிறுவனங்கள் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக, ‘ஹிண்டன்பர்க்’ என்ற முதலீட்டு ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, பங்குச் சந்தைகளில் முறைகேடு நடக்காமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது, … Read more

அதிகாலை பனிமூட்டம்; ரயில் பராமரிப்பு வாகனம் மோதி 4 ஊழியர்கள் உயிரிழப்பு – மகாராஷ்டிராவில் சோகம்!

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாசிக் அருகில் இருக்கும் லாசல்காவ், உகாவ் பகுதிகளுக்கு இடையே இன்று காலையில் ரயில்வே ஊழியர்கள் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர். அதிகாலை நேரம் என்பதால் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அருகில் இருப்பவர்கள்கூட கண்ணுக்குத் தெரியாமல் இருந்தது. அந்நேரம் ரயில்வே மின்சார பராமரிப்பு வாகனம் அங்கு வந்தது. அந்த வாகனம் வருவதை கவனிக்காத ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், அவர்கள்மீது அந்த ரயில்வே வாகனம் மோதியது. இதில் 4 ஊழியர்கள் பலத்த … Read more

மாணவி பலாத்கார புகார் நடிகை கணவர் மீது வழக்கு| Student rape complaint filed against actress husband

மைசூரு, ஈரான் மருத்துவ மாணவியின் பலாத்கார புகாரைத் தொடர்ந்து, பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கணவர் அடில் துராணி மீது மைசூரு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாலிவுட்டின் பிரபல நடிகை ராக்கி சாவந்த், ஹிந்தி ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி வாயிலாக மேலும் பிரபலம் அடைந்தார். இவர், அடில் துராணி என்பவரை 2022ல் திருமணம் செய்தார். இருவரும், மஹாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வந்த நிலையில், அடில் தன்னை அடித்து துன்புறுத்துவதாக, ராக்கி சாவந்த் சமீபத்தில் போலீசாரிடம் புகார் … Read more

14. 02.23 | Daily Horoscope | Today Rasi Palan | February – 14 | செவ்வாய்க்கிழமை | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

தேவாலயத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள் மீது வழக்கு | A case against the mysterious people who set fire to the church

நர்மதாபுரம், மத்திய பிரதேசத்தில் தேவாலயத்தை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள சுக்தாவா கிராமத்தில், கிறிஸ்துவர்களின் தேவாலயம் ஒன்று உள்ளது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள இந்த தேவாலயத்தில் பிரார்த்தனைகள் நடப்பது வழக்கம். இந்நிலையில், தேவாலயத்தில் நேற்று புகுந்த மர்மநபர்கள் சிலர், இங்குள்ள மதநுால்கள், பொருட்கள் ஆகியவற்றை தீ வைத்து எரித்தனர். நேற்று … Read more