நிதியமைச்சகத்தில் அல்வா கிண்டும் நிகழ்ச்சி: அமைச்சர் உள்பட மூத்த அதிகாரிகள் பங்கேற்பு| Alva Kindum program at Ministry of Finance: Participation by senior officials

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லியில் உள்ள நிதியமைச்சகம் அலுவலகத்தில், இன்று(ஜன.,26) அல்வா கிண்டும் நிகழ்ச்சி கோலாகலகமாக நடைபெற்றது. 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்., 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன் படி, பிப்ரவரி 1ம் தேதி பார்லிமென்டில் 2023-24 நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். வழக்கமாக பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் பல மாதங்களுக்கு முன்பாகவே துவங்கிவிடும். பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் … Read more

ஐந்தாம் வகுப்பு மாணவியின் ஆசையை நிறைவேற்றிய ஆட்சியர்: குடியரசு தின விழாவில் நெகிழ்ச்சி!

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே பாப்பநத்தம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஜான்சிராணி. இவர், `ராமநாதபுரத்தில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை நேரில் பார்க்க அழைத்து செல்வீர்களா?’ என பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டுள்ளார். `நம்முடைய பள்ளியில் கொடி ஏற்றி இனிப்புகள் கொடுப்போம், அங்கு அழைத்துச் செல்ல மாட்டோம்’ என கூறியுள்ளனர். கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மாணவியை சிறப்பு விருந்தினராக அழைத்து தேசியக்கொடி ஏற்றவைத்த … Read more

இன்றைய நாணய மாற்று விகிதம்: ஜனவரி 26 2023

இலங்கை மத்திய வங்கி இன்று (26-01-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 48 சதம் – விற்பனை பெறுமதி 371 ரூபா 38 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 444 ரூபா 91 சதம் – விற்பனை பெறுமதி 461 ரூபா 80 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 391 ரூபா 22 சதம் – விற்பனை பெறுமதி 406 ரூபா 95 … Read more

குடியரசு தினவிழாவை ஒட்டி தமிழ்நாடு ஆளுநர் ரவி ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்தில் பங்கேற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: குடியரசு தினவிழாவை ஒட்டி தமிழ்நாடு ஆளுநர் ரவி ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, பொன்முடி ஆகியோர் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளனர். முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் உள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறுகிறது.

மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பூசி அறிமுகம் | Introduction of nasal spray

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : பாரத்பயோடேக் நிறுவனத்தின் மூக்கு வழி செலுத்தப்படும் தடுப்பு மருந்தான இன்கோவேக் தடுப்பூசியை இன்று (ஜன.,26) மத்திய அமைச்சர்கள் மண்சுக் மாண்டவியா, ஜிகேந்தர் சிங் டில்லியில் அறிமுகம் செய்தனர். இந்தியாவில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக, கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகள் 2 தவணைகளாக செலுத்தப்பட்டது. பின்னர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இதற்கிடையில் மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை, இன்கோவேக்சினை பாரத் … Read more

130 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நபர் விடுதலை! உணர்ச்சிகரமான தருணத்தின் வீடியோ வைரல்

130 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதனை அனுபவித்து வந்த நபர், தற்போது குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டதையடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் குற்றமற்றவர் என நீதிபதி அறிவித்த உணர்ச்சிகரமான தருணத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. 20 வருடங்கள் சிறையில் அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தைச் சேர்ந்த 51 வயதான ஆல்பர்ட் ‘இயான்’ ஸ்வீட்சர் (Albert ‘Ian’ Schweitzer), ஹவாயில் பிக் தீவின் மீன்பிடித் தடத்தில் கண்டெடுக்கப்பட்ட டானா அயர்லாந்து (Dana Ireland) என்ற பெண் சுற்றுலாப் … Read more

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உட்பட பல தேசிய மொழிகளில் வெளியிடப்படுவது மிகுந்த வரவேற்புக்குரியது: சிபிஎம்

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உட்பட பல தேசிய மொழிகளில் வெளியிடப்படுவது மிகுந்த வரவேற்புக்குரியது என சிபிஎம் தெரிவித்துள்ளது. ‘பல மொழிகளில் வெளியாகும் தீர்ப்புகளை சாதாரண மக்களும் படிக்கவும் பொது விவாதத்தில் பங்கெடுக்கவும் வழிவகுக்கும். நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் தேசிய மொழிகளில் நடப்பதை சாத்தியமாக்கிட நீதித்துறை முன்வர வேண்டும். அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம், தாய்மொழியில் நிர்வாகம் என்பதை சிபிஎம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. ஒற்றை மொழி ஆதிக்கத்தை முன்னெடுத்து அதிகார சக்திகள் பேசி வரும் சூழலில் … Read more

Siraj: தன்னைத்தானே செதுக்கியவன்; மீண்டெழுந்த ஃபீனிக்ஸ் பறவை; சிராஜ் நம்பர் 1 ஆன கதை!

விமர்சித்தவர்கள் காணாமல் போகுமளவு ஒருநாள் போட்டிகளின் உலக நாயகனாக ஐ.சி.சி தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்கு அதுவும் கம்பேக் கொடுத்த ஓராண்டு இடைவெளிக்குள்ளேயே முன்னேறியுள்ளார் முகமது சிராஜ். Siraj சிராஜின் ரஞ்சித்தொடர் நாட்களிலிருந்தே அவர்மீது வெளிச்சவட்டம் விழுந்து கொண்டுதான் இருந்தது. ரெட்பால் கிரிக்கெட்டைக் கட்டி ஆள்வார் என ஆருடங்கள் அனுமானித்தன. 2016/17 சீசனில் ஹைதராபாத்தின் சார்பாக அதிக விக்கெட்டுகளை சாய்த்தது என உள்ளூரளவில் மட்டுமல்ல சர்வதேசப் போட்டிகளிலும் சிறப்பாகவே செயல்பட்டார். 2020/21 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முக்கிய … Read more

சட்டவிரோதமாக நுழைய முயன்ற 38 இலங்கையர்களை திருப்பி அனுப்பிய பிரான்ஸ்

கடல் வழியாக பிரான்சின் ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 38 இலங்கையர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். பிரான்சின் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் 38 இலங்கை பிரஜைகளை நேற்று (புதன்கிழமை) மாலை விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பியதாக இலங்கை கடற்படை தெரிவித்தார். 64 இலங்கையர்கள் ஏற்றிச்செல்லப்பட்டனர் இலங்கை கடற்படையினர் வெளியிட்ட தகவலின்படி, நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த வருடம் டிசம்பர் 1-ஆம் திகதி ஐந்து பணியாளர்களுடன் புறப்பட்டு, IMUL-A-0532 CHW என்ற இலக்கம் கொண்ட … Read more