பா.ஜ., ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மோதல்: டில்லி மேயர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு| BJP, AAP councilors clash: Delhi Mayoral election postponed again

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லியில் மேயர், துணைமேயர் தேர்தல் இன்று(ஜன.,24) மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த டில்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி 134 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.,104 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து சில நாட்களுக்கு முன் புதிய மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. அப்போது மாநகராட்சிக்கு 10 நியமன உறுப்பினர்களை டில்லி கவர்னர் சக்சேனா நியமித்தார். தொடர்ந்து பா.ஜ., கவுன்சிலர் சத்யா சர்மாவை, மேயர் … Read more

2023 – 24 வேளாண் பட்ஜெட்: விவசாயிகள், விஞ்ஞானிகள், பொதுமக்கள் கருத்துகளை கூறலாம்..!

வரும் 2023-24 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு, விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்கள்ஆகியோர் கருத்துகளை தெரிவிக்கலாம் என வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் நலனைப் பாதுகாத்து, அவர்களின் வருமானம் உயர்வதற்காக தமிழ்நாடு அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண்மைக்கு என்று தனியாக நிதிநிலை அறிக்கையினை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, உழவர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை … Read more

கண்டம் தாண்டி ஒலித்த நடிகர் விஜய்யின் புகழ்! நெகிழ்ந்து பேசிய கனடா பெண் மேயர்

கனடாவில் விஜய் ரசிகர்கள் மேற்கொண்டு வரும் ஆக்கபூர்வமான பணிகளை பர்லிங்டன் நகர மேயர் மரியன்னே மீட் வார்டு பாராட்டியுள்ளார். சிறப்பான முறை சமூகப் பணிகள் இது தொடர்பாக கனடாவின் பர்லிங்டன் நகர மேயர் மரியன்னே மீட் வார்டு வெளியிட்ட வீடியோவில், கனடாவில் செயல்படும் விஜய் மக்கள் இயக்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன், மிகச் சிறப்பான முறையில் சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சமூகப் பணிகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடர வேண்டும் என கூறினார். Hon’ble Mayor @MariannMeedWard … Read more

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒருநாள் கூட பங்கேற்காத இளையராஜா…

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நியமன எம்.பி இளையராஜாவின் வருகைப் பதிவு தொடர்பான தகவல்களை நாடாளுமன்ற அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில், நடைபெற்று முடிந்த  குளிர்கால கூட்டத் தொடரில் இளையராஜா எம்பி ஒருநாள் கூட மாநிலங்களவைக்கு செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடந்தது.   13 நாட்கள் நடந்த இந்த குளிர்கால கூட்டத் தொடரில் மாநிலங்களவை உறுப்பினர்களின் வருகை பதிவு குறித்த தகவல்கள் வெளியாகி … Read more

கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் பழைய குற்றால அருவியில் மக்கள் குளிக்க தடை..!!

தென்காசி: கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் பழைய குற்றால அருவியில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்கனவே பிரதான அருவியில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

கடைசி ஒருநாள் போட்டி: இந்திய அணி பேட்டிங்| Last ODI: Team India batting

இந்தூர்: இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகளில் வென்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (ஜன.,24) இந்தூரில் நடக்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லதாம் ‘பவுலிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் முகமது ஷமி, சிராஜ்க்கு ஓய்வளிக்கப்பட்டு, உம்ரான் … Read more

விமான பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட முதியவர்; ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பரபரப்பு!

சக பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம், விமானத்தில் அவசர கால கதவைத் திறந்த விவகாரம் என விமானங்களில் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் டெல்லியில் இருந்து ஹைதராபாத்திற்கு சென்ற `ஸ்பைஸ்ஜெட்’ விமானத்தில் பயணி ஒருவர், விமான பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவத்தின் வீடியோ, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விமானம் | மாதிரிப்படம் அந்த வீடியோவில், முதியவர் ஒருவர் விமான பணிப்பெண்ணிடம் கத்திக் கத்திப் பேசுகிறார். விமான பணிப்பெண்ணும் தொடர்ந்து வாதிடுகிறார். … Read more

இறந்துபோன கணவர்… இந்திய உணவகம் ஒன்றில் அடையாளம் கண்டு ஸ்தம்பித்த பெண்

பிரித்தானியாவில் உள்ளூர் இந்திய உணவகம் வெளியிட்ட விளம்பர காணொளியில் பெண் ஒருவர் தமது இறந்துபோன கணவரை அடையாளம் கண்டு ஸ்தம்பித்துப் போயுள்ளார். 9 ஆண்டுகளுக்கு முன்னர் மரணம் குறித்த தகவலை அவர் சமூக ஊடகத்திலும் பதிவிட்டு, இணையவாசிகளை குழப்பமடையவும் செய்துள்ளார். குறித்த பெண்ணின் கணவர் 9 ஆண்டுகளுக்கு முன்னர், 2014ல் மரணமடைந்துள்ளார். Image: Spice Cottage இந்த நிலையில் தான், மேற்கு சசெக்ஸ் பகுதியில் அமைந்துள்ள Spice Cottage என்ற இந்திய உணவகம் வெளியிட்ட விளம்பர காணொளியில் தமது … Read more

ஜனவரி 28ந்தேதி அரசு ஊழியர்கள் மண்டல அளவில் உண்ணாவிரதம் போராட்டம்…

மதுரை:  அரசு ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி  வரும் 28ந்தேதி அரசு ஊழியர்கள் மண்டல அளவில்  உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர், அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிதி ஆதாரம் இல்லாததால், பழைய ஓய்வூதியத் … Read more

தமிழ்நாட்டில் புதிய தொழில்களை மேற்கொள்வது பற்றி தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: தமிழ்நாட்டில் புதிய தொழில்களை மேற்கொள்வது பற்றி தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டத்தில் தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு பங்கேற்றுள்ளனர்.