தலைப்பு செய்திகள்
செல்போன்களில் வரும் `லிங்க்’கை தொட வேண்டாம்! பொதுமக்களுக்கு டி.ஜி.பி. எச்சரிக்கை
சென்னை: செல்போன்களில் வரும் `லிங்க்’கை தொட வேண்டாம் என பொதுமக்களுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளார். தேவையற்ற லிங்கை தொட்டால் உங்கள் பணம் கொள்ளைபோய்விடும் என அறிவுறுத்தி உள்ளார். டிஜிட்டல் வளர்ச்சியின் பயனாக டிஜிட்டர் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. சமீப காலமாக இணையதளம், மற்றும் ஆப்கள் மூலம் பொதுமக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதை தடுக்க தமிழ்நாடு காவல்துறை பல்வேறு விழிப்புணர்களை ஏற்படுத்தி வருவதுடன், சைபர் கிரைமும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இருந்தாலும் ஏமாறுபவர்கள் எண்ணிக்கை … Read more
சென்னை அருகே படப்பையில் இருசக்கர வாகன பெட்டியை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு
காஞ்சிபுரம்: சென்னை அருகே படப்பையில் இருசக்கர வாகன பெட்டியை உடைத்து ரூ.2 லட்சம் திருடி சென்றுள்ளனர். பணத்தை பறிகொடுத்த சென்னை மாநகர போக்குவரத்து கழக ஓட்டுனர் வெங்கடேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
“தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் மறைமுக ஒப்பந்தம்… நாடகம் நடக்கிறது" – சி.வி.சண்முகம் சாடல்
விழுப்புரம், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அறக்கட்டளை ஒன்றின் துவக்க விழாவில் நேற்றைய தினம் கலந்து கொண்டார் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம். அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களிடையே பேசிய அவர், “ஸ்டாலின் தலைமையிலான இந்த திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகம் போதை களமாக மாறி இருக்கிறது. எங்கே பார்த்தாலும் போதை. டாஸ்மார்க் 24 மணி நேரமும் செயல்படுகிறது. கஞ்சா அனைத்து பகுதிகளிலும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம், விலை மதிப்பில்லாத இளைஞர்களின் உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் … Read more
கொரோனாவுக்கு உலக அளவில் 6,811,196 பேர் பலி
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.11 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,811,196 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 681,397,023 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 654,258,193 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,329 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மார்ச்-11: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை
சென்னை: சென்னையில் 294-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
புதுமணத் தம்பதிகளுக்கு உருளைக்கிழங்கு வரவேற்பு: திக்குமுக்காடி போன உறவினர்கள்: புகைப்படம்
சமீபத்தில் திருமணமான தம்பதிகள் தங்கள் திருமணத்தில் கான்பெட்டிக்குப் பதிலாக துருவிய உருளைக்கிழங்கு தூள்களை பயன்படுத்தியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திருமணத்தில் துருவிய உருளைக்கிழங்கு சமூக ஊடகத்தில் வெளியான பதிவு மூலம் கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில், ஒரு புதுமணத் திருமண தம்பதிகள் தேவாலயத்தை விட்டு வெளியேறும் போது, விருந்தினர்கள் சிலர் கான்ஃபெட்டிக்குப்(கலர் பேப்பர் பட்டாசுகள்) பதிலாக துருவிய உருளைக்கிழங்கு பொடியை பொழிந்து அவர்களை வரவேற்றனர். Getty Images/iStockphoto இந்த சம்பவம் தொடர்பாக அந்த கொண்டாட்டத்தில் புகைப்படக் கலைஞராக பணிபுரிந்த … Read more
நிறுத்தப்பட்டிருந்த பஸ்சில் தீ துாங்கிய கண்டக்டர் பலி| Conductor dies after fire catches fire in parked bus
பெங்களூரு, பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் திடீரென தீப்பற்றி எரிந்ததில், பஸ்சுக்குள் துாங்கிக் கொண்டிருந்த கண்டக்டர் உடல் கருகி உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் கதக் நகரைச் சேர்ந்தவர் முத்தய்யசாமி, 45; பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழக கண்டக்டர். நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து பெங்களூரு பஸ் நிலையத்தில் பஸ் நிறுத்தப்பட்டது. மறுநாள் அதிகாலை பணி என்பதால், கண்டக்டர் முத்தய்யசாமி, டிரைவர் பிரகாஷ், 39 ஆகிய இருவரும் பஸ்சுக்குள்ளேயே துாங்கினர். நேற்று அதிகாலை 4:30 மணிக்கு டிரைவர் … Read more
பிரித்தானியா-பிரான்ஸ் இடையே இருதரப்பு உச்சி மாநாடு: முக்கிய தீர்மானங்கள் வெளியாகும் என எதிர்பார்ப்பு
இருதரப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பிரான்ஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இருதரப்பு உச்சி மாநாடு பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கான இருதரப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பிரான்ஸ் வந்து இறங்கியுள்ளார். பாரிஸில் உள்ள எலிசே அரண்மனைக்குச் சென்ற பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வரவேற்றார். Pool photo by Kin Cheung நடைபெறவுள்ள இந்த உச்சி … Read more