தமிழக தகவல் ஆணையர்கள் பதவி தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: காலியாக உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பெயர்கள் ஆளுநரின் ஒப்புதலை பெற்று அரசிதழில் வெளியிடப்படும். தமிழ்நாட்டில் தலைமை தகவல் ஆணையர், நான்கு தகவல் ஆணையர்களின் பதவியிடங்கள் காலியாக உள்ளது. தகவல் ஆணையர்கள் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதிவாய்ந்தவர்களின் பட்டியலை அதனை தயார் செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி முதலமைச்சரிடம் வழங்கி உள்ளார். இந்த நிலையில், … Read more

கிரேக்கத்தில் 57 பேரை பலிகொண்ட ரயில் விபத்து: வெளியான சிசிடிவி காட்சி

கிரேக்கத்தில் 57 பேரைக் கொன்ற ரயில் விபத்து பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இணையத்தில் வெளியான இந்த காட்சிகள், சரக்கு ரயில் பயணிகள் ரயிலின் மீது மோதிய துல்லியமான தருணத்தைக் காட்டுகிறது. 57 பேர் பலியான கோரமான ரயில் விபத்து கிரேக்கத்தில் (Greece) செவ்வாய்கிழமை ஏற்பட்ட பயங்கரமான ரயில் விபத்தில் இதுவரை 57 பேர் உயிரிழந்ததாக அக்கணக்கிடப்பட்டுள்ளனர். மேலும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். Reuters செவ்வாய்கிழமை நள்ளிரவு 11.21 மணிக்கு பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலுகம் நேருக்கு … Read more

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்ட 2 அர்ச்சகர்களின் நியமனம் ரத்து

மதுரை: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்ட 2 அர்ச்சகர்களின் நியமனத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. கார்த்திக், பரமேஸ்வரன் ஆகிய தங்களை அர்ச்சகர்களாக நியமிக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாசிமக திருவிழாவை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தினத்தந்தி Related Tags : புதுச்சேரி பள்ளி விடுமுறை Puducherry school holidays

மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம், கோடைக்காலத்தில் காய்ச்சல் பரவல் ஏன்? – மருத்துவர் விளக்கம்!

கடந்த சில வாரங்களாக காலநிலை மாற்றத்தால் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் காய்ச்சல் பாதிப்பால் நான்கு நாள்கள் தொண்டை வலி, இருமல், உடல் சோர்வு போன்ற பிரச்னைகள் உண்டாகின்றன. காய்ச்சல் | மாதிரிப்படம் திடீரெனப் பரவும் காய்ச்சல்… செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! இந்நிலையில், காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளை கண்டறிந்து, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே … Read more

காலையில் எழுந்ததும் தும்மலா? உஷார் இருங்க மக்களே

ஒரு திருமணம் நடக்கும் பொழுது யாராவது தும்மினால் அபசகுணம் என்று அவர்களை சொல்வார்கள். ஆகவே அவர்களும் நற்காரியங்கள் நிகழும் இடங்களுக்கு செல்ல தயங்குவார்கள். தும்மல் ஏன் வருகின்றது?  காற்று தவிர்ந்த தூசு, துகள் மூக்கில் நுழைந்தாலும், மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அதனால் தான் தும்மல் ஏற்படுகின்றது. ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ ஆகும். ஒரு சிலர் விடாமல் தும்மிக் கொண்டே இருப்பார்கள். “அதற்கு ஒவ்வாமை தும்மல்” என்றும் பெயர்.   ஒவ்வாமை தும்மலின் காரணம் … Read more

மேகாலயாவில் மீண்டும் ஆட்சி அமைக்க அனுமதி கோரினார் கான்ராட் சங்மா…

ஷில்லாங்: மேகாலயத்தில் தேசிய மக்கள் கட்சி தலைவரும், மாநில முதல்வருமான கான்ராட் சங்மா, தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், தேர்தல் வெற்றியைத்தொடர்ந்து  மீண்டும் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார். 60தொகுதிகளைக்கொண்ட மேகாலயா மாநிலத்தில் பிப்ரவரி 27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் மார்ச் 2ந்தேதி எண்ணப்பட்டது. இதில், ஆளும்கட்சியான தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனநாயகக் கட்சி 11 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 5 இடங்களிலும், … Read more

காரீப் பருவ நெல் கொள்முதலால் 1 கோடி விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: காரீப் பருவ நெல் கொள்முதலால் 1 கோடி விவசாயிகள் பயன் அடைந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 2023 மார்ச் 1-ம் தேதி வரை 713 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதலுக்கு ஆதார விலையாக விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.1.64லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.