கருணாநிதி பேனரால் ஏற்பட்ட பகை; பாமக நிர்வாகியை நடுரோட்டில் அடித்துக் கொன்ற திமுக அனுதாபி!
வேலூர் அருகேயுள்ள சித்தேரி பகுதியைச் சேர்ந்த மோகன் – விஜயா தம்பதியின் 26 வயது மகன் பிரகாஷ். இவர், பாட்டாளி மக்கள் கட்சியில், அன்புமணி தம்பிகள் படை மண்டலச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதான ராமகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. ராமகிருஷ்ணனும் பா.ம.க-வில்தான் இருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற வேலூர் மாநகராட்சி தேர்தலின்போது ராமகிருஷ்ணன் தி.மு.க-வில் இணைந்திருக்கிறார். இந்தப் பகுதிக்குள் ஒரே சமூக மக்கள் பெரும்பான்மையாக … Read more