துபாய்க்குச் சென்ற காரைக்கால் பெண் நடனக் கலைஞர் இறப்பு – மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தினர் புகார்
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி கிராமத்தைச் சேர்ந்த தேவதாஸ் என்பவருக்கு நான்கு மகள்கள். நடனக் கலைஞர்களான இவர்கள் அனைவரும், உள்ளூர் மற்றும் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நடனமாடுவது வழக்கம். இரண்டாவது மகள் அருணாவுக்குத் திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், சென்னையிலுள்ள தனியார் அமைப்பு மூலம் துபாய் அபுதாபியிலுள்ள ஒரு விடுதியில் தங்கி நடனமாடுவதற்கான வாய்ப்பு வந்தது. அதனடிப்படையில் கடந்த 2022-ம் ஆண்டு குழந்தைகளை கணவருடன் விட்டுவிட்டு அபுதாபிக்குச் சென்ற அருணா, அங்கேயே … Read more