பொங்கல் பரிசு ரூ.1,500ஆக உயர்த்தி கொடுக்க தமிழக அரசு முடிவு?

சென்னை: முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1500 பணம் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை தமிழர்கள் சிறப்புடன் கொண்டாட  தமிழகஅரசு பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும் ரேசன் கடைகளில் அரிசி, வெல்லம், கரும்பு, … Read more

சென்னையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது போக்சோ சிறப்பு நீதிமன்றம்..!!

சென்னை: சென்னையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமியின் தாத்தா, சித்தப்பாக்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிறுமியின் சகோதரர்கள் ஒருவருக்கு 10 ஆண்டும், மற்றொருவருக்கு 5 ஆண்டும் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவின் புகாரில் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

‛‛கூகுளில் அதிகம் தேடப்பட்ட உலக கால்பந்து பைனல்: சுந்தர் பிச்சை தகவல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நேற்றைய உலக கால்பந்து பைனலின்போது கூகுளில் அதிகம் பேர் தேடியதாக, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தகவல் தெரிவித்துள்ளார். கத்தாரில் 22வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. நேற்று லுசெய்ல் மைதானத்தில் நடந்த பைனலில் அர்ஜென்டினா(உலக ரேங்கிங்கில் 3வது இடம்), பிரான்ஸ்(4வது இடம்) அணிகள் மோதின. இதில் உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனா அணி வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் பிரான்ஸை 4-2 என … Read more

விழித்திறன் சவால் மனைவி; வியக்கவைக்கும் பூந்தோட்டம் அமைத்து அன்பை வெளிப்படுத்திய கணவன்!

ஜப்பானில், விழித்திறன் மாற்றுத்திறனாளியான தன் மனைவிக்காக, தோட்டத்தில் அழகிய, மணம் வீசும் பூச்செடிகளை நட்டு தனது அன்பினை வெளிப்படுத்தி வரும் கணவரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். தன் மனைவியால் பூக்களைப் பார்க்க முடியவில்லை என்றாலும், அவற்றில் இருந்து வரும் மணம் அவருக்கு சந்தோஷத்தை தரும் என்பதற்காகவே இந்தத் தோட்டத்தை உருவாக்கியதாகக் கூறியிருக்கிறார் அந்த அன்புக் கணவர். குரோகி மற்றும் அவரின் மனைவி, ஜப்பானின் ஷின்டோமி என்ற கிராமப்புறத்தில் பால் பண்ணையாளர்களாக, இரண்டு அழகான குழந்தைகளை வளர்த்து … Read more

கூகுளில் வரலாறு காணாத டிராபிக்…உலகமே அந்த ஒன்றை தான் தேடியுள்ளது: சிஇஓ சுந்தர் பிச்சை பிரமிப்பு!

கூகுள் தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக பயனர்களின் டிராபிக் அதிகமாக இருந்ததாகவும், அனைத்தும் உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை தொடர்பானது என்று அந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். வென்று காட்டிய அர்ஜென்டினா  கத்தாரின் லுசைல் மைதானத்தில் வைத்து நேற்று நடைபெற்ற கால்பந்து  உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதின. போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல், இரு அணிகளும் மாற்றி மாற்றி கோல் அடிக்க, கோப்பையை … Read more

2023ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும்! அமைச்சர் சக்கரபாணி

சென்னை: 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வரும் 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்றார். தமிழகத்தில் இருந்து வெளி மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தல் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த காலத்தை விட 3 முதல் … Read more

நாகை மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை

சென்னை: நாகை மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

"நான் ட்விட்டர் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமா?"- மக்களின் கருத்தைக் கேட்கும் எலான் மஸ்க்

எலான் மஸ்க் ட்விட்டரை தன் வசப்படுத்தியதிலிருந்து அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளான ஊழியர்களின் பணி நீக்கம், ப்ளூ டிக் விவகாரம், போலி கணக்குகளின் தடை போன்றவை பேசுப்பொருளாக மாறி சர்ச்சையைக் கிளப்பின. எலான் மஸ்க் இதுமட்டுமில்லாமல் சமீபத்தில் சி.என்.என், தி வாஷிங்டன் போஸ்ட், தி நியூயார்க் டைம்ஸ், தி இண்டிபெண்டன்ட் உள்ளிட்ட பிரபல செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை எலான் மஸ்க் முடக்கியதால் பல தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகளும் கிளம்பின. ட்விட்டர் நிறுவனத்தின் இது போன்ற செயல்பாடுகள் மன உளைச்சலை தருவதாக … Read more

உலகக் கோப்பையுடன் மேசை மேல் ஆடிய மெஸ்ஸி! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அர்ஜென்டினா அணி., வைரலாகும் வீடியோ

வெற்றிக்குப் பிறகு டிரஸ்ஸிங் அறையில் உள்ள மேசையில் உலகக் கோப்பை கோப்பையுடன் மெஸ்ஸி நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. நடப்பு சாம்பியனாக இருந்த பிரான்ஸுக்கு எதிரான பரபரப்பான இறுதிப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டினாவை முன்னணியில் இருந்து வழிநடத்தி, 36 ஆண்டுகள் கழித்து மூன்றாவது முறையாக தனது நாட்டிற்கு FIFA உலகக் கோப்பை பட்டத்தை வெல்வதற்கு உதவினார். இறுதிப் போட்டியில் மெஸ்ஸி இரண்டு முறை கோல் அடித்தார் மற்றும் ஷூட் அவுட்டில் பெனால்டியிலும் கோல் அடித்தார். AP … Read more

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூ.3,001 கோடி பேரிடர் நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூ.3,001 கோடி பேரிடர் நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. 2019 – 20ல் ரூ.825 கோடி, 2020 -21ல் ரூ.1,008, 2021- 22ல் ரூ.1,088 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 3 ஆண்டுகளில் ரூ.8,676.6 கோடி பேரிடர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.